Tuesday, October 23, 2007

மீண்டும் ஒரு பயணம் - 3

மீண்டும் ஒரு பயணம்
மீண்டும் ஒரு பயணம் - 2

இராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் செல்லும் முன் அதன் தலபுராணத்தை சற்று பார்ப்போம், இலங்கை வேந்தனை கொன்றதினால் ஏற்பட்ட தோஷத்தை நீக்க இராமேசுவர கடற்கரையில் இராமர் சிவனை பூஜிக்க முனைகிறார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வருவதற்காக அனுமன் கைலாயம் செல்கிறார், அதற்குள் பூசைக்கான நேரம் நெருங்கிவிடுவதால் இராமர் சீதையை மணலில் ஒரு சிவலிங்கம் செய்ய சொல்லி அதற்கு பூசை செய்கிறார். சிறிது நேரத்தில் சிவலிங்கம் எடுத்து வரும் அனுமன் இராமர் தான் வருவதற்குள் சீதை மணலில் செய்த சிவலிங்கத்திற்கு பூசை செய்ததினால் வருத்தமடைகிறார்.

இதை கண்ட ஸ்ரீஇராமபிரான் 'சீதை மணலால் செய்த சிவலிங்கத்தை எடுத்துவிட்டு அங்கே நீ கொண்ட வந்த லிங்கத்தை வைத்துப்பார்' என கூறுகிறார். சீதை செய்து வைத்த மணற்லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுக்க முயற்சி செய்யும் அனுமனால் அது முடியவில்லை, அவரின் மனவருத்தத்தை புரிந்துக்கொள்ளும் இராமர், சீதை செய்து வைத்த லிங்கத்திற்கு அருகிலேயே அனுமன் கொண்டு வந்ததை பிரதிஷ்டை செய்கிறார். அதோடு அனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்திற்கு தான் முதலில் பூசை இனி நடக்கும் என கூறுகிறார். இராமரால் பூசை செய்யப்பட்ட மணற்லிங்கமே இராமலிங்கம் எனவும், அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் காசிவிசுவநாதர் எனவும் பெயர்ப்பெற்றது.

பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சாதாரண கட்டமைப்பு கொண்டிருந்த இந்த கோவில் பின் வந்த மன்னர்களால் மிக பெரிய வளர்ச்சி அடைந்து தற்போது பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதில் உலகப் புகழ்பெற்ற பிரகாரங்களை வடிவமைத்த பெருமை சேதுபதி மன்னர்களையே சாரும். அதோடு பன்னிரெண்டு ஜோதிர்லிங்க தலங்களில் இந்த தலமும் ஒன்றாகும் என்பது கூடுதல் சிறப்பு.

காலையில் கோவிலுக்குள்ளே அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிய பின் அறைக்கு சென்று திரும்பிய நாங்கள், கடற்கரை நோக்கி சுமார் 126 அடி உயரத்தில் அமைந்துள்ள கிழக்கு கோபுரம் வழியே உள்ளே சென்றோம். உள்ளே நுழைந்ததும் வலது புறத்தில் ஒரு ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. இதை தாண்டி உள்ளே சென்றால் உலக புகழ்பெற்ற முறையே மூன்றாம், இரண்டாம் பிரகாரங்கள் தாண்டி உள் பிரகாரத்தில் அமைந்துள்ளது இராமநாதசுவாமியின் சன்னதி. நாங்கள் போயிருந்த போது இலவச தரிசன வரிசையில் நல்ல கூட்டம், ஆனா துரிதமாக நகர்ந்துக்கொண்டிருந்தது, என் பெற்றோரின் வசதிகருதி 50ரூ வரிசையில் போய் நின்றுக்கொண்டோம். சீக்கிரம் தரிசனம் செய்துவிடலாம் நினைச்சுக்கிட்டு தான் போனோம். ஆனா நாம எங்கப்போனாலும் அங்க பிரச்னை தான், ஒரு மணிநேரம் அந்த வரிசையை நிறுத்தியே வச்சுட்டாங்க, எங்களுக்கு அப்புறம் வந்தவங்க எல்லாம் இலவச தரிசன வரிசையில் சீக்கிரமா தரிசனம் முடிச்சுட்டு வந்துட்டாங்க. சரி இன்னிக்கு இவ்வளவு நேரம் நிற்கணும்னு நம்ம விதியா இருந்தா அதை என்ன செய்யமுடியும்னு நின்னுக்கிட்டு இருந்தப்போ தான் அங்க ஓவியங்களா வரைஞ்சு வச்சிருந்த கோவிலின் புராணத்தை பார்க்க முடிஞ்சது, அதனால இங்க எழுதறதுல கொஞ்சம் வசதியா போச்சு.

சிறிது நேரத்தில் நகர தொடங்கிய எங்கள் வரிசையில் இருக்கும் ஒரே ஒரு வசதி என்னவென்றால் சன்னிதியின் முன் சிறிது நேரம் அமர விடுகிறார்கள். அப்படியிருந்தும் சுவாமி மிகவும் உள்தங்கியிருப்பதால் அவ்வளவு தெளிவாக பார்க்கமுடியவில்லை(அனுமன் லிங்கத்தை கட்டி இழுத்த போது பதிந்த வாலின் சுவடு கூட தெரியும்னு சொன்னாங்க, அதுவும் சரியா தெரியல). அங்கு தரிசனம் முடிஞ்சதும் அதே பிரகாரத்தில் வலம் வந்தால் சுவாமி சன்னிதியின் வலதுப்புறத்தில் அம்பாள் பர்வதவர்த்தினி சன்னிதி. அம்பாளின் சன்னிதியில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இங்கு தரிசனம் முடிந்தப்பின் மறுபடியும் சுவாமி சன்னிதி அருகில் வந்தால் அதே பிரகாரத்தில் அனுமனால் கொண்டு வரப்பட்ட காசிவிசுவநாதரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். காசி விசாலாட்சி சன்னிதியும் உள்ளது. அதை தவிர சாரதா பீடத்தினால் கோவிலுக்கு அளிக்கப்பட்ட ஸ்படிக லிங்கமும் உள்ளது, ஆனால் விடியற்காலையில் மட்டும் தான் அதை தரிசிக்க முடியுமென்பதால் எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.

மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் தஞ்சாவூர் நந்தியை நினைவுப்படுத்தும் விதமாக ஆனால அதை விட உருவத்தில் சிறியதான, ஒரு பெரிய நந்தியும் அமைந்துள்ளது. உலகத்திலியே மிக நீளமான பிரகாரம் என பெயர் பெற்றுள்ள இந்த கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் மிக உயரமாக சுமார் 4000 தூண்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இந்த பிரகாரத்தின் வழி சுற்றி வரும் போது மேற்கு வாயிலில் நிறைய கடைகள் உள்ளன. இதை தாண்டியதும் மீண்டும் கிழக்கு கோபுரம் வரும் வழியில் அதே பிரகாரத்தில் ஒரு நடராஜர் சன்னிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதி முழுவதும் ருத்ராட்ச மாலைகளால் அலங்கரித்திருந்தனர். ரொம்ப அழகாக அமைந்துள்ளதை நாங்க பாராட்டி அங்கிருந்த அர்ச்சகரிடம் விசாரித்த போது ஒரு பக்தர் கோவிலுக்கு இலவசமாக அத்தனை ருத்ராட்சங்களையும் அளித்ததாக கூறினார். இவ்வாறாக தரிசனம் முடிந்து அறைக்கு திரும்பிய நாங்க அங்கிருந்து இராமேசுவரத்தை சுற்றி அமைந்துள்ள இடங்களுக்கு செல்வது என முடிவெடுத்தோம்.


தொடரும்..

பி.கு : கோவிலை பற்றிய இன்னும் நிறைய தகவல்களை திரட்ட முடியவில்லை, நான் சென்ற போது கேள்விப்பட்டவையும் சில தகவல்கள் புத்தகங்களிலிருந்தும் எடுத்துள்ளேன், விட்டுப்போன தகவல்களை தெரிந்தவர்கள் பகிர்ந்துக்கொள்ளலாம், காமிரா இல்லாததால் நிறைய அரிய படங்களும் எடுக்க முடியவில்லை. இங்கு போடும் படங்கள் எல்லாமே இணையத்திலிருந்து எடுத்தவை.

21 comments:

ambi said...

Me the pashtu...?


நாங்களே நேர்ல பாத்த மாதிரி விவரனை எல்லாம் நல்லா இருக்கு, :)//(அனுமன் லிங்கத்தை கட்டி இழுத்த போது பதிந்த வாலின் சுவடு கூட தெரியும்னு சொன்னாங்க, அதுவும் சரியா தெரியல)//

சரி தான்! பாலமே இல்லைனு சொல்றாங்க. பாத்து! அனுமாருக்கு வாலே இல்லை!னு யாராச்சும் சொல்லிட போறாங்க. :)

Sumathi. said...

ஹாஇ வேதா,

நல்லா சொல்லியிருக்கீங்க.நன்றி.

ரசிகன் said...

அடப்பாவமே.. இந்த ரெண்டு படங்களுமே சுட்ட படங்கள்தானா?.நாங்கூட நல்ல ஒளி அமைப்போட எடுத்திருக்கிங்கன்னு நெனச்சேன்..

கீதா சாம்பசிவம் said...

நேத்திக்குக் கொடுத்த வருகைப் பதிவு எங்கே? இன்னும் படிக்கலைனதும் போடவே இல்லையா? :P

Compassion Unlimitted said...

Nandri vedha ,migha arumaiyaga ezhudhi irukkireergal..andha kaalathhil baraneedharan endru oruvar ezhudhuvaar.rasithhu iukkiren..
Ushath kaalatthu vedhangal pol midandhu varugindrana ungal ezhutthukkal
vaazhga
TC
CU

வேதா said...

@அம்பி,
பாராட்டுக்கு நன்றி நாரதரே ;)

/அனுமாருக்கு வாலே இல்லை!னு யாராச்சும் சொல்லிட போறாங்க. :)/

ஹிஹி விவிசி :):)

@சுமதி,
தவறாம எல்லா பதிவுகளுக்கும் வர்ரதுக்கு நான் தான் நன்றி சொல்லணும் :)

@ரசிகன்,
அதுக்கு தான் தெளிவா டிஸ்கி போட்ருக்கோமில்ல :) நாங்கெல்லாம் இத விட அருமையா படமெடுப்போம் :)

@கீதா,
போன பதிவுக்கு வருகை பதிவு கொடுத்துட்டு இங்கன வந்து கேட்டா? ;)

@cu,
ரொம்ப புகழறீங்க நன்றி :)
இன்னும் சொல்லப்போனா நேத்து போடறதாவேயில்ல உங்க பின்னூட்டம் பார்த்தப்புறம் தான் சரி நாம எழுதறதையும் காத்திருந்து படிக்க ஆளிருக்கு அப்டின்னு தைரியமா எழுதினேன் நன்றி :)

Compassion Unlimitted said...

//காமிரா இல்லாததால் நிறைய அரிய படங்களும் எடுக்க முடியவில்லை. இங்கு போடும் படங்கள் எல்லாமே இணையத்திலிருந்து எடுத்தவை.//

Hmm..-Sutta padam venduma sudatha padam venduma nu kettu irukkalam..hmmparavaa illai
TC
CU

நாகை சிவா said...

ராமர் பெயரை எல்லாம் போட்டு நீங்களும் அரசியலை உங்க பயணக் கட்டுரையில் கொண்டு வந்துட்டீங்க... :)

வாழ்த்துக்கள்...

நல்ல தெளிவா சொல்லி இருக்கீங்க... சுற்று வட்டாரத்தையும் எழுதுங்க..

சிங்கம்லே ACE !! said...

கட்டுரை அருமை..

//சீதை செய்து வைத்த மணற்லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுக்க முயற்சி செய்யும் அனுமனால் //

நான் அறிந்த வரையில், அனுமன் கோபத்தில், மணல் லிங்கம் தானே என்று அதை கலைக்க முற்பட்டு, தோல்வியுறுகிறார். அப்போது தான் மணலால் ஆனாலும் பூசிக்க பட்டதனால், மணல் லிங்கமும் சக்தி வாய்ந்தது என்று அனுமனுக்கு புரிகிறது.

படங்கள் நீங்க எடுத்ததான்னு ஆச்சர்யபட்டேன்.. ஹ்ம்.. சுட்ட படம் நல்லா தான் இருக்கு

Compassion Unlimitted said...

aahaa..உங்க பின்னூட்டம் பார்த்தப்புறம் தான் சரி நாம எழுதறதையும் காத்திருந்து படிக்க ஆளிருக்கு அப்டின்னு தைரியமா எழுதினேன் நன்றி :)

idhu nalla kadhai.....உங்க பின்னூட்டம் பார்த்தப்புறம் தான் ...

//adhaan navaraathiri mudijudutthe,enakku sundal kodukkamal,//
Sundal mattum en remember pannale nu kekaren..sariyana vazhukkal ma neenu
tc
CU

வேதா said...

@cu,
சுண்டல் தான அடுத்த நவராத்திரிக்கு கண்டிப்பா உண்டு ;)

@சிவா,
இது ரொம்ப அநியாயம் ராமேஸ்வரம் பத்தி எழுதும் போது ராமரை பத்தி சொல்லாம இருக்க முடியுமா? இராமரே ஒரு அரசர் தான் அவரில்லாம அரசியலா? ;)

/நல்ல தெளிவா சொல்லி இருக்கீங்க... சுற்று வட்டாரத்தையும் எழுதுங்க../
நன்றி சிவா கண்டிப்பா அதையும் எழுதறேன் :)

@ஏஸ்,
இல்ல நான் இந்த தலபுராணத்தை கோவிலில் ஓவியமா வரைஞ்சு வச்சிருந்த வச்சு தான் சொல்றேன். அதுல அப்டி தான் இருந்தது.

/படங்கள் நீங்க எடுத்ததான்னு ஆச்சர்யபட்டேன்.. ஹ்ம்.. சுட்ட படம் நல்லா தான் இருக்கு/

ஆமா சுட்ட படம் தான், நான் எடுத்திருந்தா இதை விட நல்லாயிருந்துருக்கும் :)

Raji said...

Its very informative Vedha.Padangalae thevai illai neenga vivarichurkaradhae nerala paartha effectkku azhaga solli irukkeenga...

Idhu varaikkum naan Rameswaram poandhila,unga pathivu enakku kandipa helpfulaa irukkum:)

ரசிகன் said...

திருநெல்வேலிக்கே அல்வாவா?
திருப்பதிக்கே மொட்டையா?
பாண்டிச்சேரிக்கே தண்ணி(?)யா?
வேதாவுக்கே கவிதையா?
(இரு இரு கடைசி யா நீ என்ன சொல்லவர ? )
டீச்சருக்கே.. அட்டென்ணன்ஸ்ஸா? அதுவும் வேற வகுப்பில போயி குடுத்துட்டு வந்திருக்காங்க..ஹி.ஹி.....

Compassion Unlimitted said...
This comment has been removed by the author.
Compassion Unlimitted said...

///@cu,
சுண்டல் தான அடுத்த நவராத்திரிக்கு கண்டிப்பா உண்டு ;)///

Ippadiye kaalatha kadathiraangapa..sari pongalukku visesham unda nu paakkaren
TC
CU

Compassion Unlimitted said...

Vetthalai paakku vechu azhachutten..namma kadai pakkam varadhu ..
TC
CU

~பொடியன்~ said...

ஆண்ட்டி.. Template ரொம்ப நல்லா இருக்கு.. :))

Compassion Unlimitted said...

AAhhaaa...killi paarthu konden..nijam dan..neengal mum murai vanthadhal than vaanam mummaari pozhigindrado !

வேதா said...

@பொடியன்,
வருகைக்கு நன்றி ஆனா யார ஆண்டின்னு சொல்றீங்க ? :)

@ராஜி,
நன்றிம்மா ராமேசுவரம் பார்க்க வேண்டிய இடம் தான் நிச்சயம் போய் வாங்க :)

@cu,
என்னது மழையா? இங்க இன்னிக்கு பயங்கர வெயில்:)

Balaji S Rajan said...

Veda,

I shall tell you in advance before I visit India next time. Please book me a seat with your group for a pilgrimage trip. Hope I will enjoy. Kalakareenga...

வேதா said...

@பாலாஜி,
ஹாஹா உண்மையா சொல்றேன் நீங்க எழுதின பின்னூட்டத்தை பார்த்து நான் விவிசி :):)
ஆனா கண்டிப்பா இந்தியா வரும் போது ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க சந்திக்கலாம் :)