Friday, October 05, 2007

மீண்டும் ஒரு பயணம்..

நான் 3 வருடங்கள் முன்பு என் சித்தப்பா குடும்பத்துடன் காசிக்கு போயிருந்தேன் :) காசிக்கு போனா மட்டும் போதாது ராமேசுவரமும் போய்ட்டு வந்தா தான் நம்ம பாவ மூட்டையெல்லாம் முழுசா கரையும்னு யாரோ சொல்லிட்டாங்க. அதனால காசிக்கு போயிட்டு வந்த அதே குரூப் ராமேசுவரம் சென்று வந்தார்கள், ஆனால் உடல்நிலை சரியில்லாததால் என் அம்மா எவ்வளவு வற்புறுத்தியும் நான் போகவில்லை. உனக்கு ரொம்ப பிடிவாதம் அதிகமாப்போச்சுன்னு அன்னியிலிருந்து என்னை திட்டி திட்டி ஒரு வழியா சமீபத்துல தான் போக வாய்ப்பு வந்தது. அது என்னமோ கடந்த 2,3 வருடங்களில் நான் குடும்பத்தோட போன பயணங்கள் எல்லாமே ஆன்மிக பயணங்களாகவே அமைஞ்சுடுச்சு(பாருங்க இவ்ளோ சின்ன வயசுல என்னைய கோவில் கோவிலா கூட்டிக்கிட்டு போறாங்க;)).

ஊருக்கு போறதுனா எங்க வீட்டுல ஒரு வாரம் முன்னாடியிலிருந்தே எங்கம்மா துணிமணிகள், தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பிச்சுடுவாங்க. என்னையும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க, ஆனா எனக்கு ரயிலேறுவதற்கு முதல் நாள் வரை எதுவும் எடுத்து வைக்க பிடிக்காது, அதுக்குன்னு கடைசி நிமிஷம் வரைக்கும் எடுத்து வைச்சு பதட்டமும் பட மாட்டேன். எங்கம்மா தான் நான் செய்யறத பார்த்து பதட்டப்படுவாங்க :) அடிப்படையில் நான் ஒரு சோம்பேறி ஹிஹி :) ஒவ்வொரு முறையும் எங்கம்மா நான் செய்யறத பார்த்து பதட்டப்பட்டாலும் எல்லாத்தையும் நான் சரியா எடுத்து வைச்சுப்பேன்னு எங்கம்மாவுக்கு நம்பிக்கை இருக்கு :)என்னடா இவ போன இடத்தை பத்தி சொல்லுவான்னு பார்த்தா சுயபுராணம் படிக்கறான்னு பார்க்கறீங்களா? என்ன பண்றது ஏதாவது எழுதலாம்னு பார்த்தா கவிதையை தவிர எதுவும் தோணமாட்டேங்குது. ஏற்கனவே நான் கவிதை பக்கத்துல எழுதறது போதாதா என்று சில பல இடங்களிலிருந்து கற்களும், வீட்டுக்கு ஆட்டோவும் வர வாய்ப்பிருப்பதால் இன்னும் 2,3 பதிவுகளுக்கு இப்டி தான் பயணக்கட்டுரை எழுதி மொக்கை போட போறேன் :) உடனே உலா வரும் ஒளிக்கதிர் ஆரம்பிச்சிடியான்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது அம்பி ;) என்ன பண்றது? விதி வலியது நீங்க படிச்சு தான் ஆகனும் :)

சென்ற வியாழன் மாலை இராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸில் ஏறிய எங்களுக்கு அங்கேயும் சுவாரஸ்யதுக்கு பஞ்சமில்லை தான். நான், என் அப்பா, அம்மா தவிர எங்கள் கூபேயில் இன்னொரு குடும்பமும் இருந்தார்கள். அவர்களுடைய பெண்ணுக்கு மட்டும் மட்டும் எங்க கூபேயில் இல்லாமல் எதிரில் சைட் பெர்த்தில் மேல் பெர்த் கொடுக்கப்பட்டிருந்தது. இது மாதிரி சைட் பெர்த்களில் பெரும்பாலும் கீழ் பெர்த்தில் RAC பயணச்சீட்டு வைத்திருக்கும் இருவருக்கு அலாட் ஆகும். அதாவது கீழே இருக்கும் இரண்டு இருக்கைகளில் ஒன்று கன்பர்ம்டு டிக்கெட் வைத்திருப்பவரும் மற்றொன்றை RAC டிக்கெட் வைத்திருக்கும் இருவருக்கு கொடுப்பார்கள், அவர்கள் இருவரும் கீழே அமர்ந்து வரலாம், மேல் பெர்த் கன்பர்ம்டு டிக்கட் வைத்திருப்பவருக்கு தான். அப்படி ஒரு தம்பதி வந்தனர். அவர்கள் வந்ததுமே கீழே இருக்கும் பெர்த் முழுவதும் அவர்களுக்கு தான் என்றும் மேல் பெர்த் தான் உங்களுக்கு அதனால் நீங்க எழுந்துக்கோங்க என்று அங்கு உட்கார்ந்திருந்த பெண்ணிடம் கூறினர்.

ஆனா சட்டப்படி பார்த்தா இரவு 9 மணி வரை கீழே அமருவதற்கு அந்த பொண்ணுக்கு உரிமை இருக்கு. என் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த பொண்ணோட அம்மாவும் அதையே சொல்லி, கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கோங்க இப்ப மணி 6 தான் ஆகுது அப்புறமா அவங்க மேலே போவாங்கன்னு சொன்னா அந்த ஆள் ஒத்துக்கவேயில்ல. உடனே நான் அவரை கூப்பிட்டு உங்களுக்கு சரியா புரியலேன்னு நினைக்கறேன்னு சொல்லி திரும்ப அவருக்கு பொறுமையா எடுத்து சொன்னேன். எல்லாத்தையும் சிரிச்சிக்கிட்டே கேட்டுக்கிட்டு என் மனைவிக்கு தான் கீழ சீட் அலாட் ஆகியிருக்கு, அவங்களுக்கு மேல் பெர்த் தான் அதனால அவங்களை போக சொல்லுங்க அப்டின்னு திரும்ப ராமாயணத்தை ஆரம்பிச்சிட்டாரு. அடப்பாவி மக்கா நீ எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டே தான் தகராறு பண்றியா? என்று மனசுல நினைச்சுக்கிட்டு சரி உங்க பயணச்சீட்டை காமிங்கன்னு கேட்டா நான் ஏன் உங்களுக்கு காமிக்கனும் அப்டின்னு சொல்றாரு. சரி ஒரு முடிவோட தான் இவரு வந்துருக்காருன்னு தெரிஞ்சுப்போச்சு, நீங்க TTR வருவாரு அவரு கிட்ட கேளுங்க அவரும் நாங்க சொன்னத தான் சொல்வாருன்னு சொல்லிட்டு அமைதியாகிட்டோம் (பின்ன எங்கம்மா வேற நான் ஏதோ சண்டை போடறதா நினைச்சுக்கிட்டு என்ன பார்த்து முறைக்க ஆரம்பிச்சுட்டாங்க:))

ஆனாலும் அவரு விடாம சொன்னதையே சொல்லி சொல்லி , அந்த பொண்ணு டார்ச்சர் தாங்கமுடியாம எங்க கூபேயில் இருந்த அவங்க அம்மா பக்கத்துல வந்து உட்கார்ந்துட்டாங்க. நீங்க ஏன் எழுந்து வந்தீங்க? நானாயிருந்தா வந்தேயிருக்க மாட்டேன்னு சொன்னேன். அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு டிடிஆர் வந்தப்புறம் அவங்க பயணச்சீட்டை பார்த்துட்டு அவர் ஏதோ சொல்ல அந்த தம்பதி எழுந்துப்போயிட்டாங்க. சரி அவங்களுக்கு தனியா பெர்த் கிடைச்சுடுச்சுன்னு நாங்க நினைச்சுக்கிட்டோம். சாப்பிட்டு விட்டு கைகழுவ போன என் அப்பா அவங்க ரெண்டு பேரும் கை கழுவற இடத்துக்கிட்ட நிக்கறாங்க அவங்களுக்கு இங்க சீட்டே இல்ல போலிருக்கு, இந்த அழகுல நம்மளோட சண்டை வேற போட்ருக்காங்கன்னு சொன்னாரு. கொஞ்ச நேரம் கழிச்சு நான் போனப்ப அந்த ஆள் என் முகத்தை கூட பார்க்கல, அவர் மனைவியோ பாவம் அங்க நின்னுக்கிட்டு சாப்டுட்டு இருந்தாங்க, நல்லா நறுக்குன்னு நாலு கேள்வி கேட்கலாம்னு பார்த்தேன் அவரு மனைவியின் முகத்துக்காக விட்டுட்டு வந்துட்டேன். இப்டியும் மக்கள் இருக்காங்க பாருங்க அப்டின்னு நினைச்சுக்கிட்டே அன்னிக்கு பொழுது ஓட்டிட்டோம். மறுநாள் காலை 7:30 மணிக்கு ராமேசுவரம் சென்றடைந்தோம்.

தொடரும்....

12 comments:

Dreamzz said...

ஹிஹி! இரயில்ல சீட்டுக்கு அடிதடி எல்லாம் நடந்திருக்கு என் கதையில!

G3 said...

Chinna vayasula engappa rameswarathula postingngaradhaala annual leavekku jammunu anga poiduvom.. appuram ethana oor transfer vaanginaalum en fav rameswaram dhaan.. Appuram romba varusham kazhichu last year october ponom.. Unga thodar moolama pazhaya flash back ellam kelari udareengalae ;)

Compassion Unlimitted said...

/அவங்களுக்கு மேல் பெர்த் தான் அதனால அவங்களை போக சொல்லுங்க அப்டின்னு திரும்ப ராமாயணத்தை ஆரம்பிச்சிட்டாரு. /
Rameshwaram selbavargal Ramayanatthai arimbittharagal..lol

unmayil 20*20 cricket game aaga irundalum sari,RAC seat aaga irundalum sari..Agression only pays..softness and human touch are things of past,unforunately !

waiting for your next episode
CU

.:: மை ஃபிரண்ட் ::. said...

அச்சச்சோ.. இந்த அளவுக்கு கோபம் வரக்கூடாது. கண்ட்ரோல் கண்ட்ரோல். :-)

ambi said...

மனைவியை அழைத்து கொண்டு ரிசர்வ் செய்யாம வந்ததுக்கே அவன் தலைல நாலு போடனும். சரி விடுங்க.

ராமேஸ்வரம் ரயில் ஏறினதுக்கே இவ்ளோ பில்டப்பா? சரி பரவாயில்ல, தொடரட்டும். :)

Sumathi. said...

ஹாய் வேதா,

அட நீங்க பாத்தது கொஞ்சம் தான். நாங்க இதைவிட நிறைய்ய பாத்து அனுபவிச்சிருக்கோம்.சண்டையெல்லாம் கூட போட்டிருக்கோம்.

சீக்கிரமா அடுத்தது போடுங்க.

நாகை சிவா said...

மீண்டும் ஒரு பயணக்கட்டுரை...

சில நேரங்களில் சில மனிதர்கள் ;)

Compassion Unlimitted said...

Ramar pirachhinaikku appuram eppadi irukku nu sollunga.
Time kidaicha namma blogsite kku varugai thanga
Nandri
CU

வேதா said...

@ட்ரீம்ஸ்,
அப்டியா அதையும் ஒரு கதையா போட்ரு :)

@காயத்ரி,
ஓ அப்ப எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தா உன்ன கேட்டுக்கறேன் :)

@cu,
softness and human touch are things of past,unforunately !

குறைந்துக்கொண்டு வருவது உண்மை தான் :(

/waiting for your next episode/
ரொம்ப ஆவலா இருக்கீங்க இதோ போட்டுரேன் :)

@மைப்ரண்ட்,
/இந்த அளவுக்கு கோபம் வரக்கூடாது. கண்ட்ரோல் கண்ட்ரோல். :-)/
அப்டிங்களா? சரிங்க ஆபிசர் ;)

@அம்பி,
/ராமேஸ்வரம் ரயில் ஏறினதுக்கே இவ்ளோ பில்டப்பா? சரி பரவாயில்ல, தொடரட்டும். :)/
இதப்பார்ரா பில்டப் பத்தி யாரு பேசறதுன்னு? ;)

@சுமதி,
அட நீங்க வேற நாம போடாத சண்டையா அடுத்த பதிவுல போட்ருவோம் :)

@சிவா,
/சில நேரங்களில் சில மனிதர்கள் ;)/
ஹிஹி இந்த டயலாக் எனக்கா, என் கட்டுரைக்கா? ;)

@cu,
உங்க பதிவெல்லாம் படிச்சுட்டு தாங்க இருக்கேன் இனிமே ஒழுங்கா கமெண்டும் போடறேன் :)

Compassion Unlimitted said...

Nandri,Nandri,Nandri

CU

நாகை சிவா said...

உங்க கட்டுரையில் வந்த மனிதர்களை பற்றி தான்.. உங்கள ஏங்க நான் சொல்ல போறேன்...

krishna prabhu said...

Hi veedha,

உங்களுடைய பயண கட்டுரை அழகிய நடையில் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி,
கிருஷ்ணப் பிரபு.

http://my-travel-payanam.blogspot.com/