Saturday, October 13, 2007

படிப்படியாய் சில படங்கள் :)

மக்கள்ஸ் நவராத்திரி கொண்டாட்டங்களில் தற்போது மிக பிஸியாக இருப்பதால் (ஹிஹி வேறென்ன சுண்டல் விநியோகமும், கலெக்ஷனும் தான்:)) போன பதிவு பின்னூட்டங்களுக்கு பதில் இன்னும் போடல மன்னிச்சு விட்ருங்க :) ராமேஸ்வர பயணத்தின் அடுத்த பாகம் போடறவரைக்கும் எங்க வீட்டு கொலுவை பார்த்து ரசிங்க. இந்த முறை என் தம்பிக்கு நேரம் கிடைக்காததால் நான் தான் பரணிலிருந்து பொம்மைகளை இறக்கி, துடைத்து,படிகளில் வைத்தது எல்லாம். பார்க் செட் பண்ணவேண்டுமென்று ஆசை தான் ஆனா இடமில்லை. இவையெல்லாம் அலைபேசியில் எடுத்த படங்கள் ரொம்ப தெளிவா இருக்காது, அதனால தயவு செய்து பெரிதாக்கி பார்க்காதீங்க :)

முதல் இரண்டு படிகள் :

அடுத்த இரண்டு படிகள்:கடைசி படி :எங்க வீட்டு கொலு :

29 comments:

Sumathi. said...

ஹாய் வேதா,

அட உங்க வீட்டு கொலுவும் நல்லாத் தான் இருக்கு.
சரி சீக்கிரமா எனக்கு சுண்டலைத் தவிர வேற என்ன குடுக்க போறீங்க?
எல்லா இடத்திலயும் சுண்டல் சாப்டு திகட்டிப் போச்சு.

Dreamzz said...

wow! kolu super! enna koopidave illa?

Compassion Unlimitted said...

Golu virkku nandri..sundalukku enge varanum .adhai solla vendama..aadhu sari krishna krishna ena moochukku moochu koori vittu avarukku 3 vadu padi..vengadachalpathikku mel padiya..idhu sariya..
summa oru vambukku..he he..nanna irukku golu..vaazhthukkal
TC
Cu

நாகை சிவா said...

நல்லா இருக்கு....

சுண்டல் சூடானுக்கு பார்சல்...

G3 said...

Aaha.. kolu supera irukkae.. naan next week nerlayae vandhu paathukkaren.. :))

naan varum bodhu sonna maadiri sundal ellam readya irukkonum solliten :P

வேதா said...

@சுமதி,
சுண்டல் போரடிசுடுச்சா? அப்ப புட்டு ஓகேவா? :)

@ட்ரீம்ஸ்,
ஆகா நீ இல்லாமயா? அடுத்த பிளைட் புடிச்சு வந்துடு :)சுண்டல் ரெடியா இருக்கு :)

@cu,
ஹிஹி எதுக்கு நன்றியெல்லாம்? நானே எதுவும் எழுதறதுக்கு தோணாம தான இப்டி மொக்கை போட்டுட்டு இருக்கேன் :)

/aadhu sari krishna krishna ena moochukku moochu koori vittu avarukku 3 vadu padi./
ஹிஹி என் மனசுல என்னிக்குமே முதல் படி தான் ;) அவ்வ்வ்வ்வ் எப்டியெல்லாம் கேள்வி கேட்கறாங்கப்பா :)

@சிவா,
உங்களுக்கு தான் பார்சல் பண்ணிக்கிட்டே இருந்தேன் அதுக்குள்ள ஒரு போன் வந்துடுச்சு எல்லா பார்சலுக்கு அவங்களுக்கு தான் வந்து சேரணும்னு அதுக்காக இன்னிக்கு நேரில வரப்போறாங்களாம் :)அவங்க வந்துட்டு போனப்புறம் ஏதாவது மிச்சம் மீதி இருந்தா(!) அனுப்பறேன் ;)

@காயத்ரி,
யக்கா இப்டியெல்லாம் பயமுறத்தக்கூடாது அதான் உனக்கே எல்லா சுண்டலும் தரேன்னு சொல்லிட்டேனில்ல ;)

ambi said...

சூப்பர். நான் சுண்டல் கேட்டாலும் எதுவும் மிஞ்ச போறது இல்லை. ஜி3 அக்கா கோதாவுல குதிச்சாச்சே! :p

Arunkumar said...

golu super !!

Arunkumar said...

sakkarai pongal and sundal indha pakkam parcel anuppunga !!!

supera kolu celebrate panringa pola. engalukkum sethu vendikkonga..

வேதா said...

@அம்பி,
ஹிஹி ஆமா ஜி3 அக்கா வந்து எல்லா சுண்டலையும் அள்ளிக்கிட்டு போய்டாங்க :)

@அருண்,
கண்டிப்பா பார்சல் அனுப்பி வச்சுறேன் :)

பரத் said...

Golu paathaachu....sundal eppo anuppuveenga :-)

Balaji S Rajan said...

Veda,

Golu photos super. BTW you could have posted Sundal photo and few guest who came to see the photo. Probably next year, I think you will post even the songs they sing and invite us in advance for e-Golu.

priya said...

Sundal fulla abscond panitu only dollpics dhana. Huh:) Beuatiful and miss those days.

கோபிநாத் said...

அழகாக இருக்கு..;))

வேதா said...

@பரத்,
சுண்டல் அனுப்பியாச்சு :)

@பாலாஜி,
/ BTW you could have posted Sundal photo and few guest who came to see the photo./
சுண்டல் போட்டோ விரைவில் போடப்படும் :) கொலுவுக்கு வந்தவங்க நம்ம வீட்டு கொலுவ பத்தி இங்க எழுதியிருக்காங்க படிச்சு பாருங்க :)

வேதா said...

@ப்ரியா,
சுண்டலெல்லாம் நான் சாப்பிடலப்பா எல்லாம் நம்ம காயத்ரிய தான் கேட்கனும் :)

@கோபி,
நன்றி நன்றி :)

Padmapriya said...

Super aa iruku

ரசிகன் said...

// ஹிஹி வேறென்ன சுண்டல் விநியோகமும், கலெக்ஷனும் தான் //

இங்க எங்களுக்கு கடலை போடக்கூட,சுண்டல் கெடைக்காம தவிக்கிறோம் .அங்க ஊருல உங்களுக்கு exchange offer வேரயா?..
அது சரி உங்க கொலுவில்ல top படில்ல என்னோட செலை ய காணோமே.. கெடக்கிலயா..சொல்லியிருந்தாக்கா..அனுப்பி வச்சியிருப்பேனில்ல...

கீதா சாம்பசிவம் said...

விதவிதமாய்ப் படம் எடுத்திருக்கீங்க, எங்கவீட்டுக் கொலுவையும் எடுத்திருக்கலாம் இல்லை! :P நானும் போட்டிருப்பேனே!

வேதா said...

@பத்மப்ரியா,
நன்றிம்மா :)

@ரசிகன்,
/இங்க எங்களுக்கு கடலை போடக்கூட,சுண்டல் கெடைக்காம தவிக்கிறோம்/

கடலை போடறதுக்கு சுண்டல் எதுக்கு? :D

/உங்க கொலுவில்ல top படில்ல என்னோட செலை ய காணோமே.. கெடக்கிலயா../

ஹிஹி திருஷ்டி பொம்மையெல்லாம் கொலுவில வைக்கற வழக்கம் இல்ல :)

@கீதா,
என் அலைப்பேசியில படமெடுக்கற வசதியில்ல இது என் தம்பியோடதில எடுத்தது :)

சரி இந்த ரசிகன் உங்கள தன்னோட தமிழ் டீச்சர்னு சொல்லிக்கிட்டு திரியராரே அது உண்மையா? :)

ரசிகன் said...

டிராப்பிக்குல வரத்துக்கு கொஞ்சம் லேட்டானாக்கா.. அதுக்குள்ள இந்த புள்ள,வெவரந்தெரியாம ..என்ன வேல செஞ்சி வச்சிருக்குது.

// கடலை போடறதுக்கு சுண்டல் எதுக்கு? //

பீச்சில கடலை விற்பனை யாரால நடக்குதுன்னு கூட தெரியாதவங்ககிட்ட (சின்னப்புள்ள கிட்ட ) போயி ..என்னத்த சொல்லறது?ஹிஹி..

திருஷ்டி பொம்மை (வேதா)
திருஷ்டி பொம்மை (எக்கோ ஹை)
திருஷ்டி பொம்மை (எக்கோ லோ )

விட்றா...விட்றா..கைப்புள்ள .... அரசியியல்ல.. இதலெல்லா சகஜமுன்னு எங்களுக்கும் தெரியுமுல்ல....(எங்க தமிழ் டீச்சர் சொல்லிக்குடுத்திருக்காங்கல்ல..)

//ரசிகன் உங்கள தன்னோட தமிழ் டீச்சர்னு சொல்லிக்கிட்டு திரியராரே அது உண்மையா? //

என்னிய திருஷ்டி பொம்மை -ன்னு புகழ்ந்தத கூட பெருந்தன்மையா பொருத்துக்கலாம்,ஆனாக்கா.. "கீதா அக்கா எனக்கு தமிழ் டீச்சரா"ன்னு சந்தேகப்பட்டதுக்கே வேதா மேல மான(இருக்குதா-ன்னெல்லாம் கேக்கப்...படாது..) நஷ்ட வழக்கு போடப்போகிறேன் என்று இதன் மூலம் தெரிவித்து கொள்கின்றேன்...

அது சரி,வேதா...நாங்களாம் உங்க வீட்டுக்கு வந்தா எவ்வளவு ஆர்பாட்டமா வர்ரோம்.ஆனா நீங்க எங்க வீட்டுக்கு வந்தாக்கா ரகசியமா,பின்னூட்ட சுவடு கூட இல்லாம சைலண்டா போயிடரிங்களே..அது ஏங்க..(இதுதா தன்னடக்கமோ?)
கொஞ்சம் பேசனிங்கனாக்கா நாங்களும் சந்தோஷப்பட்டுப்போமில்ல...

ரசிகன் said...
This comment has been removed by a blog administrator.
ரசிகன் said...

அடப்பாவமே..நா எங்க டீச்ச்ரோட ,என்னோட பதிவுல பேசனத யாரு "கிராஸ்டாக்குல"கேட்டுட்டு வேதாவோட பதியுக்கு அனுப்பனது?.. தவறி வந்துடுச்சுன்னு நெனக்கிறேன். நீக்கிவிடலாமே..

வேதா said...

@ரசிகன்,
கடலை போடறதுன்னா என்னன்னு கூட தெரியாத சின்னப்புள்ள நானு ஹிஹி :) என்னுடைய கொழந்தமனச நீங்க தான் புரிஞ்சுக்கிட்டீங்க நம்ம மக்கள் ஒத்துக்கமாட்டேங்குறாங்க :D

/ஆனா நீங்க எங்க வீட்டுக்கு வந்தாக்கா ரகசியமா,பின்னூட்ட சுவடு கூட இல்லாம சைலண்டா போயிடரிங்களே../
இப்ப போய் பாருங்க :) தன்னடக்கமா? அப்டின்னா என்ன? ;)

க்ராஸ்டாக்க நீக்கியாச்சு :)

SKM said...

golu azhaga irukku. adutha varusham naanum nerla vandhu sundal vangikiren. Neengalumdhaan.Sariya?

Compassion Unlimitted said...

adhaan navaraathiri mudijudutthe,enakku sundal kodukkamal,aduttha release podungo..romba naal aachu
TC
CU

கீதா சாம்பசிவம் said...

இந்த மாதிரி ஒரு சீடன் கிடைக்க என்ன புண்ணியம் செஞ்சேனோ? :P எங்கே போனாலும் தப்புத் தப்பா எழுதி மானத்தை வாங்கறார். நறநறநறநறநறநற

ரசிகன் said...

// இந்த மாதிரி ஒரு சீடன் கிடைக்க என்ன புண்ணியம் செஞ்சேனோ? :P எங்கே போனாலும் தப்புத் தப்பா எழுதி மானத்தை வாங்கறார். நறநறநறநறநறநற //

பாத்திங்களா வேதா..,டீச்சர் கிட்டயிருந்து,இப்பிடி ஒரு பாராட்டு கெடிக்க கொடுத்து வச்சிருக்கனும். அட ..என்ன சிரிக்கிறிங்க.. நீங்க எங்க ஆசிரியை சொன்னத என்னிய திட்டுனதா தப்பா புரிஞ்சிகிட்டிங்க.. இப்ப நா வெளக்கரேன் பாருங்க..
// இந்த மாதிரி ஒரு சீடன் கிடைக்க என்ன புண்ணியம் செஞ்சேனோ?// -ஹிஹி இது குருவுக்கு சீடனோட கடம டீச்சர்.

// எங்கே போனாலும் தப்புத் தப்பா எழுதி, மானத்தை வாங்கறார்.// இதுல தப்புத் தப்பா -தப்பா இருக்கரதால அத நீக்கிடுவோம்.. மீதி (விளக்க என்னமா கஷ்டப்பட வேண்டியிருக்கு?ம்.). நெக்ஸ்ட்டு .. மானம் = கெளரவம் so

// // எங்கே போனாலும் எழுதி, மானத்தை வாங்கறார்.//
அதாவது ,மத்த டீச்சரெல்லாம்.. என் மாணவர் நல்ல மதிப்பெண் எடுத்து எங்க கெளரவத்த காப்பாத்திட்டாங்கம்பாங்க.. ஆனா எங்க டீச்சர் ..நா ஆசிரியரோட இருக்கிற கெளரவத்த காப்பாத்துனது மட்டுமில்லாம ,அடிஷனலா.. அதிக கெளரவத்த வாங்கித்தர்றேன்ங்கரத்த தான்,அப்பிடி சொன்னாங்க...

இப்ப பிரியுதா.. எங்க டீச்சர் என்னிய பாராட்டுராய்ங்கன்னு.. (என்னாச்சுங்க.வேதா... தலை சுத்துதா?)
(அப்ப அந்த நறநற?.. அது ஏதோ..குளிருல சொன்னதா இருக்கும்.விடுங்களேம்பா..)

[டீச்சர்,நீங்க மாட்டுன்னு எதாவது சொல்லிட்டு போயிடுரிங்க.. அத நா எம்புட்டு கஷ்டப்பட்டு விளக்க வேண்டியிருக்கு..ம்... இதுக்கு நீங்க பேசாம அந்த இம்போஸிசன் பனிஷ்மன்டயே குடுத்திருக்கலாம்..]

OnlinePharmacy said...

lOAd2a Your blog is great. Articles is interesting!