Monday, November 19, 2007

150 - ஒரு விமர்சனம்..

சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக என் எண்ணங்களை வார்த்தைகளாய் செதுக்கி வரும் என் வலைப்புத்தகத்தில் 150வது தாள் இந்த பதிவு , அதாவது என்னுடைய 150வது பதிவு :) இந்த பதிவில் என்னுடைய வலைப்பக்கத்தின் நிறை குறைகளை ஆராய்ந்து எழுதியிருப்பவர் நம் சக வலைப்பதிவர். அவர் யாரென்று பிறகு பார்ப்போம், இப்ப விமர்சனத்துக்கு போகலாமா? :)


*****************


வேதாவின் எழுத்துக்களைப் பற்றிய ஒரு சிறு விமரிசனம்!

ஆரம்பத்தில் ஆங்கிலம் கலந்த தங்கிலீஷில் ஆரம்பித்திருக்கிறார் வேதா! என்றாலும் அதிலேயே சுரதா.காம் பற்றியும், தமிழில் எழுதுவது பற்றியும் குறிப்பிடுகிறார், ஆனாலும் ஆங்கிலமும், தங்கிலீஷுமே தொடர்ந்திருக்கிறது சில பதிவுகள் வரை. இம்ரானா என்ற முஸ்லீம் பெண்ணிற்கு அவள் மாமனாரால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து, சானியா மிர்ஸாவின் மினி ஸ்கர்ட் வரையிலும் தன்னுடைய எண்ணங்களைப் பதிந்திருக்கும் இவரின் கருத்துக்கள் ஒரேயடியாகப் புரட்சியைச் சார்ந்தது எனச் சொல்ல முடியாவிட்டாலும், மாறுபட்ட அதே சமயம் பெண்கள் ஏற்கும், அவர்களுக்குச் சாதகமான கருத்துக்களையே சொல்லி இருக்கிறார், நடுநிலையான பார்வையுடனேயே! பெண்களின் அதீதமான சுதந்திரப் போக்கையும் கண்டிக்கும் அதே சமயம், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப் படவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றார்.வாசந்தியின் "குற்றவாளி" என்ற கதையைப் பற்றி விமரிசித்து இருக்கும் இவரின் கேள்வி "எது பூரணத்துவம்?" என்பதே ஆகும். அந்தக் குறிப்பிட்ட கதையை நான் இன்னும் படிக்கலை என்றாலும் பூரணத்துவம் என்பது ஒவ்வொருவர் பார்வையிலும் வேறுபடும் என்றே நினைக்கிறேன். இது வேதாவின் பதிவுகளைப் பற்றிய விமரிசனம் என்பதால் இதை இங்கேயே நிறுத்திக் கொள்ளுகிறேன்.

2005-ல் பெய்த அதீத மழையின் விளைவுகளும் இவர் கண்களுக்குத் தப்பவில்லை, அதே சமயம் கணினியின் அதீதத் தாக்கத்தையும் மெல்லிய நகைச்சுவையுடன் சாடுகிறார். அவரின் வயதுக்கே உரிய கனவுகளைக் கவிதைகளாய்த் தன்னுடைய கவிதைப் பக்கங்களில் "மனம் உண்மை முகம்" என்ற பெயரில் பதிந்து வைக்கும் வேதா அத்துடன் சமூக அவலங்களையும், தன் கவிதைகள் மூலம் சாடுகின்றார். சில குறிப்பிட்ட கவிதைகளை இங்கேயும் பகிர்ந்து கொள்கிறார்.

நட்பு என்பதற்கும் நண்பர்கள் என்பவர்களுக்கும் அதிக மதிப்புக் கொடுக்கிறார் என்பதை இவரின் இந்தப் பதிவின் மூலம் காண முடிகிறது. நாட்டின் மேலும் அபாரப் பற்றுடன் வாய்ந்த சுதந்திரநாள் பதிவுகள், குடியரசு தினப் பதிவுகளோடு, நண்பர்களுக்காகப் போடும் "மொக்கைப் பதிவுகளும்" சேர்ந்தது. பக்திக்கும் குறைச்சல் இல்லை. தான் சென்று வந்த கேதார்நாத், பத்ரிநாத், சோளிங்கர், ராமேஸ்வரம், மற்றும் பாண்டிச்சேரி அருகே உள்ள அவர்களின் குலதெய்வக் கோயில் என்று அனைத்துக் கோயில்களின்
முக்கிய வரலாறும், பிரயாணச் செய்திகளுமாக ஒரு அழகான சங்கிலி போல் கோர்க்கப் பட்டு, நம் கண் முன்னே பிரகாசிக்கும்.

வ.வா.சங்கத்தின் மூலம் ஆரம்பிக்கப் பட்ட தமிழ்ச்சங்கத்தின் முதல் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு அதில் பரிசும் வென்றிருக்கிறார். மற்றவர்களால் கொடுக்கப் பட்டத் தலைப்புக்களில் கவிதைத் தொடர் சங்கிலியிலும் கலந்து கொண்டு மிகத் திறமையாகவும், சவாலாகவும் கவிதைகள் படைத்திருக்கிறார். சங்கிலிப் பதிவுகளிலும் கலந்து கொண்டு, தன்னைப் பற்றிய "சுய மதிப்பீடு" செய்து கொண்டிருக்கின்றார். குடிபோதையில் ஒரு ஆண் எந்த அளவுக்கு மோசமாய்ச் செல்லுவான் என்பதை விளக்கி ஒரு கதை அவர் எழுதியதையும், அதன் முடிவு, என்னாலும், இன்னொருவராலும் விவாதிக்கப் பட்டது, தன் வீட்டில் வேலைகளில் உதவிக்கு வரும் பணிப் பெண்ணிடம் இருந்து தன் சேவையை ஆரம்பிக்க நினைக்கும் இவர், இந்த தன்னுடைய கனவை ஒரு அழகிய கவிதையாகவும் பதிந்திருக்கின்றார்.

திருப்பாவை போன்ற பக்தி இலக்கியத்திலும் ஈடுபாட்டுடன் அதைப் பற்றிய விளக்கங்களும், விமரிசனங்களும் காண முடிகின்றது. பாவை நோன்பையும், ஆண்டாள் அதைப் பத்தி எழுதி இருப்பதையும் உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு அல்லாமல், மற்றவர்க்கும் அதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறார். அது போல ஒவ்வொரு பண்டிகைகளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அதன் தன்மைக்கு ஏற்பக் கவிதையாகவோ, கட்டுரையாகவோ தன் கருத்தைத் தெரிவிக்கிறார். அதற்காகப் பழமை விரும்பி எனவும் சொல்ல முடியாது. திருமணம் என்று வரும்போது மாறிவரும் காலச்சூழ்நிலைக்கு ஏற்பப் பெற்றோர் தங்களை மாற்றிக்கொள்ளும் நேரம் வந்து விட்டது எனவும் சொல்லுகின்றார். நண்பர்கள் தினம், அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம்,குழந்தைகள் தினம் என்று வரும் ஒவ்வொரு முக்கிய நாட்களிலும் ஏதாவது ஒரு முக்கியச் செய்தியை மென்மையாக அறிவுறுத்தும் இவர் பதிவைக் காண முடியும். சொல்ல வந்த விஷயத்தை மென்மையாகவும், தெளிவாகவும் அதே சமயம் உறுதிபடவும் அடுத்தவர் மனம் நோகாமல் எடுத்துரைக்கும் இவர் பாங்கு என் மனதைக் கவர்ந்தது

நண்பர்களைக் கலாய்த்தலா? அதற்கும் இடம் உண்டு இவரிடம். இது தவிர, தன்னைவிட வயதில் மூத்த தோழியின் இழப்பைக் கூடப் பதிவு செய்திருக்கும் இவர் நட்பு என்பது மறக்க முடியாத ஒன்று எனச் சொல்லாமல் சொல்லுகிறார்.நண்பர்களின் பிறந்த தினத்தை மறவாமல் வாழ்த்துக் கூறும் இவரின் பிறந்த தினத்திலும் நண்பர்களின் அன்பு மழையில் நனைந்துள்ளார். சமூக அக்கறையுடன் அரவாணியான "ரோஸ்" பற்றிய செய்திக் குறிப்பைத் தன் பதிவில் வெளியிட்டிருக்கும் இவர் தன் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டே இத்தனையும் செய்கின்றார் என்றால் வியப்பாக இருக்கிறது. வீட்டு வேலைகளிலும் எவ்விதக் குறையும் வைக்காமல், பதிவுகளும் அழகாகவும், தேவைக்கு ஏற்பவும் போடுவது என்பது கம்பியின் மேல் நடப்பது போன்ற வித்தை.

சும்மாப் பக்கம் நிரப்பவோ, அல்லவோ ஏதோ எழுதணும் என்பதற்கோ எழுதாமல், விஷயத்தைத் தேர்ந்தெடுத்து, அதை நன்கு யோசித்துப் பின்னர் அதன் தாக்கம் அனைவரிடமும் போகும்படி எழுதுவது என்பது அனைவருக்கும் வராது. இவருக்கு வந்திருக்கிறது. 150 பதிவுகளை இம்மாதிரி எழுதுவது என்பது உண்மையிலேயே ஒரு சாதனை தான். இவருடைய கவிதைகள் மிக அருமையாக இருப்பதோடு கூட உள் மனதின் வெளிப்பாடும் நன்கு அமைந்திருக்கிறது. ஒரு முறை கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்ட இவர் கவிதையைப் படிச்ச திரு மாலன் அவர்கள் அதைப் புகழ்ந்து எழுதி இருப்பதே சான்று. "வலைச்சரம்" மின்னிதழில் ஒரு வாரத்துக்கு ஆசிரியர் பொறுப்பை வகித்த திரு மஞ்சூரும் அந்த இதழின் முதல் பதிவிலேயே குறிப்பிட்ட கவிதாயினிகளுடன் இவரின் கவிதையைப் பற்றியும் வெகுவாகச் சிலாகித்து உள்ளார். பன்முகம் கொண்ட இவரின் எழுத்து மேன்மேலும் சிறக்கவும், நல்ல இனிமையான வாழ்க்கை அமையவும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.


"என் இனிய தோழனே! அந்த கணநேரத்தில் கண்டுக்கொண்டேன் உன் விழிகளில் என் மீதான உன் நேசத்தை. நான் இழந்தது நட்பா? நேசமா? எதுவென்று புரியாமல் இருந்துவிட்டாலும், நீயும் என் கண நேர அதிர்ச்சி அலைகளில் உணர்ந்துக்கொண்டாய் நான் உன்னை நட்பின் உருவாய் வடித்திருப்பதை. சில நொடிகளில் இடம் மாறிய நம் எண்ணங்கள் நாம் பேசிக்கொள்ளாமலே நம்மை நமக்கு உரைத்தன, உன்னிடம் என் நட்பெனும் நிலையையும், என்னிடம் உன் நேசத்தையும். "

இரு நண்பர்களுக்கு இடையே உள்ள நட்பு என்னும் உறவு, அந்த நண்பனின் "காதல்" என்ற உணர்வால் முற்றிலும் மாறிப் போனதை ஒரு பெண்ணின் நோக்கோடு மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கும் இந்தக் கவிட்டுரை, ஆணின் பார்வை என்ன என்பதையும் சொல்லப் போகிறது, அதற்காக நம்மைக் காத்திருக்கவும் வைக்கிறது. எதிர்பார்ப்புடன், வந்திருக்கும் பின்னூட்டங்களோ என்றால், இது அனைவர் வாழ்விலும் நடந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறு என்று சத்தியமே செய்கிறது. அந்த அளவுக்கு இன்றைய இளைஞர்களின், இளைஞிகளின் அன்றாட நடைமுறை வாழ்வைத் தன் பார்வையினால் பிரதிபலிக்கிறார். இவருடைய மனம் இவருடைய உண்மை முகத்தை எல்லா இடத்திலுமே காட்டுகிறது.

இதோ ஒரு ஆணின் பார்வையில் நட்பு காதலாக மாறியதைப் பற்றிய அவரின் எண்ணக் கோவையில் எழுந்த சில முத்துக்கள்:

"நட்பாய் பூத்த மலர் நேச மழையில் நனைவதைக் கண்டு சிலிர்த்த என் மனம் சிந்திக்க மறுத்தது உன் நிலையை. மீண்டும் தொடர்ந்த நம் பயணத்தில் நீ என்றும் கேட்கவேயில்லை என் தயக்கத்தின் காரணத்தை. நீ கேட்காமலே புரிந்துக்கொண்டிருக்கலாம், ஆயினும் குற்ற உணர்வுடன் தொடர முடியா நான் கேட்டேன் உன்னிடம், உன் கைகள் ஏந்தி உன் விழிகள் நோக்கி. நோக்கிய என் விழிகளிடம் பேசியவை உன் விழிகள் அல்ல, கண்ணீர் துளிகள். தூய்மையான பனித்துளிகளென அவை உணர்த்தின என் நிலைக்கு எதிரான உன் நிலையை. உன் அதரங்கள் அசையாமலே உன் நிலையை உணர்ந்தேன் நான் ஏந்தி நின்ற உன் கரங்கள் வழி. என் புரிதலை உணர்ந்துக்கொண்ட நீ மெல்ல புன்சிரிப்புடன் பயணத்தை தொடர்ந்தாய் அதே நிமிர்ந்த நன்னடையுடன்,நானும் தான். "


ஒரு ஆணாக ஆணின் பார்வையில் இது எழுதப் பட்டிருக்கிறது, ஆனாலும் மென்மையாகவே சொல்லப் பட்டிருக்கிறது. இம்மாதிரி மறுப்பை எல்லா ஆண்களும் ஏற்பார்களா? நட்புக்கும், காதலுக்கும் உள்ள மயிரிழை அளவு இடைவெளியில் மிகப் பாதுகாப்புடன் நடக்கச் சம்மதிப்பார்களா? இவ்வளவு மென்மையாக மறுக்கப் பட்ட காதலை ஏற்றுக் கொண்டு செல்லும் ஆண்களும் இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாய் சந்தோஷப்படவேண்டிய ஒரு விஷயம் தான்.

இதுவரையில் வேதாவின் ஆரம்ப காலப்பதிவுகளில் இருந்து, இன்று வரை உள்ள அனைத்தையும் பார்த்தால், எந்த இடத்திலேயும் அவர் ஒரு நளினமான போக்கைக் கையாண்டிருக்கிறார் என்பதையும், சொல்ல வரும் விஷயத்தை மிக மிக உறுதியாகவும், தன்னம்பிக்கையுடனும், ஆணித்தரமாகவும் சொல்லுகிறார் என்பதோடு அல்லாமல் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்படியாகவுமே இருக்கிறது. எல்லா வயதினரும் அவருக்கு இடும் பின்னூட்டங்களில் இருந்து இதை அறியவும் முடிகிறது.


ஹிஹிஹி, இப்போ கொஞ்சம் வழக்கமான மொக்கை! இந்த விமரிசனக் கட்டுரை நான் எழுதும்போது எனக்கு நேர்ந்த ஒரு அதிசயமான சம்பவத்தைப் பற்றிப் படிக்க என்னோட வலைப்பதிவுக்கு வாருங்கள், எல்லாம் ஒரு சுய விளம்பரம் தான், அத்தோடு இல்லாமல் இந்த அநியாயம் வேறே எங்கேயும் நடந்திருக்கானும் பார்த்துச் சொல்லுங்க!!!!!!!

******************


பி.கு : பல சிரமங்களுக்கு இடையேயும் இவ்வளவு பொறுமையுடன் என்னுடைய பதிவுகளை படித்து மிக அழகான ஒரு தொகுப்பாக கொடுத்திருக்கும் இந்த வலைப்பதிவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் :)

26 comments:

நாகை சிவா said...

150 க்கு முதலில் ஒரு வாழ்த்துக்கள் :)

அதை சுயவிமர்சனமாக அமைத்துக் கொண்டதுக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் :)

ambi said...

//சொல்ல வந்த விஷயத்தை மென்மையாகவும், தெளிவாகவும் அதே சமயம் உறுதிபடவும் அடுத்தவர் மனம் நோகாமல் எடுத்துரைக்கும் இவர் பாங்கு என் மனதைக் கவர்ந்தது
//
அக்ஷ்ரம் லக்ஷம் பெறும் வரிகள். (அதுக்காக எடு ஒரு லட்சம்!னு மிரட்ட கூடாது). :)))

கையை காலை வெச்சுண்டு சும்மா இருக்காமல் அவ்வப்போது பிளாக் டெம்ப்ளேட்டையும் மாற்றி கொண்டே இருப்பார்! என்ற வரியை விட்டாச்சே! :p

Congrats for the 150th post.
me the pashtuuu...?

Compassion Unlimitted said...

Congrats Vedha..Its been a wonderful journey for you.Self analysis has been beautifully true reflections.Admirable is a mild word.
It does reach people of all ages.I agree totally.lol
Keep up the good work
Manamaarndha Vaazhthukkal
TC
CU

manipayal said...

150துக்கு வாழ்த்துக்கள். நட்பு - காதல் பற்றி தனியாக விமர்சிக்கிறேன்.

மதுரையம்பதி said...

150க்கு வாழ்த்துக்கள் வேதா(ள்)...

உங்கள் பக்கங்களுக்கு அதிகம் வந்ததில்லை. படித்தபின் மீண்டும் எழுதுகிறேன்.

வேதா said...

நன்றி சிவா :)
இது சுயவிமர்சனம் இல்ல, என் பதிவுகளை அலசி, பிழிஞ்சு காய போட்டது நம்ம கீதா தான் :)

@அம்பி,
நன்றி :)
/ பிளாக் டெம்ப்ளேட்டையும் மாற்றி கொண்டே இருப்பார்! என்ற வரியை விட்டாச்சே! :p/
ஹிஹி அவ்வப்போது ஒரு மாற்றம் இருந்தா தான சுவாரஸ்யமா இருக்கும் :)

@cu,
வாழ்த்துக்களுக்கு நன்றி எல்லாம் உங்கள் மாதிரி பெரியவங்க ஆசி தான் :)

@மணிப்பயல்,
ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க நன்றி :) உங்க விமர்சனத்தையும் சொல்லுங்க :)

@மதுரையம்பதி,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)

கோபிநாத் said...

150க்கு வாழ்த்துக்கள் :))

நன்றாக விமர்சனம் செய்த தலைவிக்கு ஒரு ஒ ;))

மதுரையம்பதி said...

/// பிளாக் டெம்ப்ளேட்டையும் மாற்றி கொண்டே இருப்பார்! என்ற வரியை விட்டாச்சே! :p/
ஹிஹி அவ்வப்போது ஒரு மாற்றம் இருந்தா தான சுவாரஸ்யமா இருக்கும் :)//

அப்படியா?, அப்ப என்னோடதையும் கொஞ்சம் மாற்றித் தர இயலுமா? :)

Compassion Unlimitted said...

aahhaaa..edho sollitten athukkaga idichu kaatavendame..vayasai..lol
TC
CU

கீதா சாம்பசிவம் said...

@TC
CU, வயசை இடிச்சுக் காட்டக் கூடாதா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!!!!!!! :)))))))

manipayal said...

நானாவது ரொம்ப நாள் கழிச்சு வந்தேன். நீங்க இன்னும் நம்ப வலைக்கு வரவே இல்லையே

G3 said...

//கோபிநாத் said...
150க்கு வாழ்த்துக்கள் :))

நன்றாக விமர்சனம் செய்த தலைவிக்கு ஒரு ஒ ;))//

ரிப்பீட்டேய் :))

[ஒரு வழியா ரிப்பீட்டு கோபிக்கே ரிப்பீட்டு போட்டாச்சு :))]

ரசிகன் said...

வாழ்த்துக்கள் தோழியே.. 150 வது பதிவு.. ரொம்ப சந்தோஷமாயிருக்குங்க வேதா..
முதன் முதல்ல உங்கள் கவிதைப்பக்கங்கள் மூலமா கவரப்பட்டு வந்து, நட்பின் கரங்களில் விழுந்தவன் நான்.
இதுபோல இன்னும் பல நூறு பதிவுகள் காண எல்லா வலைபதிவு நண்பர்களின் சார்பிலும் அன்புடன் வாழ்த்தும் நண்பன் உங்கள் ரசிகன்..
(என்னது என்னோட விமர்சனமா?.. எங்க டீச்சரே எல்லாத்தையும் சொல்லிட்டப்பறம். எல்லாத்துக்கும் ஒரு ரிப்பீடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

Bharani said...

guru...congrats on ur 150th post :))

Compassion Unlimitted said...

Supreme court lawyer maadiri கீதா mam vakkalatthu...naan joot..idinga idinga iditthukonde irunga..ammadiyov !!
TC
CU

Dreamzz said...

வாழ்த்துக்கள் வேதா!

Dreamzz said...

வித்தியாசமான பதிவா போட்டு அசத்தறீங்க!

மு.கார்த்திகேயன் said...

150க்கு வாழ்துக்கள் வேதா.. மேலும் இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்

மு.கார்த்திகேயன் said...

கீதா மேடம், இவ்வளவு உருப்படியான விஷயம் எல்லாம் செய்கிறார்களா.. எங்களின் எண்ணத்தை பிரதிபலித்து போலவே இருந்தது

வேதா said...

@கோபி,
நன்றி :)
ஆமா தலைவிக்கு கண்டிப்பா ஒரு ஓ போடணும் :):)

@மதுரையம்பதி,
அதுக்கென்ன என்னால முடிஞ்சத செய்யறேன் :)

@cu,
ஹிஹி இனி செய்யமாட்டேன் :)

@மணிப்பயல்,
வராம இல்ல பின்னூட்டம் போட்டதில்ல அவ்ளோ தான் இனி ஒழுங்கா வந்துரேன் :)

@காயத்ரி,
ரிப்பீட்டுக்கே ரிப்பிட்டா? ;)

@ரசிகன்,
நன்றி நன்றி எல்லாம் உங்கள மாதிரி ரசிகர்களால் தான் :) (இங்க இப்டி வாழ்த்திட்டு உங்க டீச்சர் பதிவுல போய் நான் அல்வா வாங்கி கொடுத்து விமர்சனம் வாங்கினேன்னு சொல்றீங்களே இது நியாயமா? :):)

வேதா said...

@பரணி,
சிஷ்யா சரியான நேரத்துல வந்து வாழ்த்திட்ட நன்றி :)

@cu,
சுப்ரீம் கோர்ட் வாக்கை விட பெரிய வாக்கு எங்க தலைவி வாக்கு (ஹிஹி ஆனா நாங்க அதை மதிக்க மாட்டோங்கறது வேற விஷயம் :):))

@ட்ரீம்ஸ்,
ஆமா கொஞ்சம் வித்தியாசமா முயற்சி செய்யலாம்னு தான் இப்படி ஒரு விமர்சன பதிவு :) நன்றி :)

@கார்த்தி,
தலைவரே அப்பப்ப வந்து வருகை பதிவு செஞ்சுடறீங்க நன்றி :)

கீதா சாம்பசிவம் said...

கீதா மேடம், இவ்வளவு உருப்படியான விஷயம் எல்லாம் செய்கிறார்களா.. எங்களின் எண்ணத்தை பிரதிபலித்து போலவே இருந்தது

@கார்த்தி, நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!!!!!!! :P :P

Arunkumar said...

Congrats Veda... Wishes for many more to come..

வேதா said...

வாழ்த்துக்கு நன்றி அருண் :)

Anonymous said...

vaalthukkal veetha.

-maniprakash,

keep the tempo!!! innum melum pala vara... vazthukkal

மஞ்சூர் ராசா said...

அன்பு வேதா

150 பதிவுகள் அதுவும் அதிக மொக்கையில்லாமல் என்பது உண்மையிலேயே ஆச்சரியம் தான்.

கிட்டத்தட்ட அனைத்தும் பெரிதாக குறை சொல்ல முடியாத நல்ல பதிவுகளே.

கீதாவின் அழகான விமர்சனம் இல்லையில்லை விமர்சனம் என்று சொல்லமுடியாது, திறனாய்வு என்று சொல்வதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். (என்ன மேடம் கீதா சரிதானே) உங்கள் பதிவுக்கு ஒரு நல்ல மகுடமாக அமைந்துவிட்டது. கீதா மேடத்திற்கு அதற்கான நன்றிகள் உரித்தாகுக.

இந்த பின்னூட்டத்தில் கீதா மேடத்தை பற்றியும் சில வார்த்தைகள் சொல்லவில்லையென்றால் அது சரியாக இருக்காது:

கீதா மேடம் பதிவுலகில் ஒரு சகலகலாவல்லி என்றே சொல்லவேண்டும். யார் என்ன சொன்னாலும் என் செயல் பணி செய்து கிடப்பதே என அயராது உடல்நலக்குறைவில் இருந்தாலும், கணினி அப்பப்ப மக்கர் செய்தாலும், வீட்டில் எலிகள் பானைகளை உருட்டினாலும் பின்னூட்டப் புலிகள் தாக்கினாலும், பாராட்டினாலும், குறும்பு செய்தாலும், விடாமல் நல்ல பதிவுகளை எழுதித் தள்ளிக்கொண்டிருப்பது வியக்கவைக்கிறது. ஏன் நம்மால் முடியவில்லையே என்ற பொறாமையும் லேசாக எழுகிறது.

அன்பு வேதாவுக்கும் கீதா மேடத்திற்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.