Monday, November 05, 2007

இப்படிக்கு..
இந்தியாவில் சின்னத்திரையில் முதல்முறையாக நிகழ்ச்சி தொகுப்பாளராக ஒரு திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க இருக்கும் 'இப்படிக்கு ரோஸ்' எனும் நிகழ்ச்சியை ரோஸ் எனும் திருநங்கை நடத்தவிருக்கிறார். அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்திருக்கும் இவர் இந்தியாவில் இருந்தவரை மனதளவில் பெண்ணாகவும் தோற்றத்தில் ஒரு ஆணாகவும் இருந்தவர் இந்தியா திரும்பும்பொழுது முழுமையான பெண்ணாக மாறி வந்துள்ளார்.

சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தம் குடும்பத்தினராலேயே ஒதுக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வரும் இந்த இனத்தினரை சினிமா போன்ற ஊடகங்கள் பெரும்பான்மையாக மோசமாகவே சித்தரித்து வரும் சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்யப் போவதாக இவர் கூறுகிறார். வார இறுதிகளின் இரவுகளில் ஒளிப்பரப்பாகவிருக்கும் இந்நிகழ்ச்சியை பார்க்காமல் விமர்சனம் செய்யமுடியாது என்றாலும் இது கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டிய முயற்சியே ஆகும்.

இந்நிகழ்ச்சியை பற்றி 'இந்து' நாளிதழில் வந்துள்ள செய்தியை இங்கு காணலாம்.

13 comments:

ambi said...

அருமையான முயற்சி. விஜய் டிவி இத மாதிரி நிறைய புதுமைகள் செய்து வருது. பார்க்கலாம் நிகழ்ச்சி எப்படி இருக்குனு?

நான் தான் பஷ்ட்டா? :p

ரசிகன் said...

// சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தம் குடும்பத்தினராலேயே ஒதுக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வரும் இந்த இனத்தினரை//
ரொம்ப பாவந்தானுங்க... எல்லாருக்கும் கெடைக்க வேண்டிய நியாயமான அன்பு ,அரவணைப்பு கூட குடும்பத்தாரிடமிருந்து இவிங்களுக்கு கெடக்காதது.. துரதிஷ்டவசமானது.
குடும்பதுல எல்லாரும் இருந்தும் அனாதையா வாழ்க்கையை நடத்துவது..கொடுமைதானுங்க..

ரசிகன் said...

// சினிமா போன்ற ஊடகங்கள் பெரும்பான்மையாக மோசமாகவே சித்தரித்து வரும் சூழ்நிலையில் //
உண்மைதான் வேதா..மாறி வரும் சின்னத்திரை கதையாசிரியர்களின் லேட்டஸ் "வில்லிகள்" திரு நங்கைகள் தான்.வண்ணத்திரையில இன்னும் கேலியாக ஜோக்கர்களாக..
யாரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்து பிறப்பதில்லை..
அவர்கள் தானாக தீர்மானிக்க முடியாத ஒன்றை வைத்து அவர்களை இழிவு படுத்துவது சரியல்லதான்..
ஆணோ பெண்ணோ.. அவர்களும் மனிதர்கள்..என்பதை நம் மக்கள் உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை..

ரசிகன் said...

// இந்நிகழ்ச்சியை பார்க்காமல் விமர்சனம் செய்யமுடியாது //
அதுவும் சரிதானுங்க..வேதா.. ஏன்னா.இந்த கால டீவி நிகழ்ச்சிகள் நெலவரம் அப்படி..

ரசிகன் said...

// என்றாலும் இது கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டிய முயற்சியே ஆகும்.///
இதுக்கு முழுமையா நானும் உடன்படுகின்றேன்.சபாஷ் நல்ல பதிவுங்க..

Compassion Unlimitted said...

unmai dhan..ullatthil urchagam irukkum varayil yaarum edayum saadhikkalaam..idhil aanenna pennenna evargalai erundaal enna..ellorum aandavanin kuzhandai gal thane..good social blog
vaazhga
tc
cu

கோபிநாத் said...

நல்லதொரு முயற்சி..;))

நாகை சிவா said...

நல்ல தகவல்.

விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள்

Kittu said...

Good Effort. Program reviews adutha postaa kudunga.

Happy Diwali 2 U !

Arunkumar said...

Nalla muyarchi... Hope the society changes its viewpoint !!

கீதா சாம்பசிவம் said...

இந்தச் செய்தி ஏற்கெனவே பார்த்தேன் என்றாலும் உங்க பதிவை இப்போத் தான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் அவங்களுக்கு. செய்தியை வெளியிட்டதன் மூலம் அவங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கச் செய்தமைக்கு உங்களுக்கும் பாராட்டுக்கள்.

Balaji S Rajan said...

Good news! Hats off to Vijay TV who also do other things. I should say a big 'Thank you' for publishing such good thing happening, for people like us. Please bring out such positive news.

Dreamzz said...

great! Its time they started integrated with the main line community, and we accepting them as normal people.