Friday, November 09, 2007

ரசிக்க, சிரிக்க, சிந்திக்க...

சமீபத்தில் படித்து ரசித்தது:

நினைவில் இருப்பது...

எத்தனை முழமென்று
நினைவில் இல்லை
பின்னிரவில் சாலையோரம் அன்று
பேரம் பேசிய மல்லிகைப் பூச்சரம்

பத்து ரூபாய் சொன்னாள்
வாங்கும் எண்ணமில்லை இருந்தும்
தூரத்துக் கூடைக்காரி
எட்டு ரூபாய் சொன்னதைச்
சொன்னேன்.

சட்டென
சரி எட்டு ரூபாய்க்கே வாங்கிக்கம்மா
என்றவளின் மறுப்பற்ற கீழ்ப்படிதல்
கடைசி நேர இயலாமையாலா
கடைசிப் பேருந்தைப் பிடிக்கும்
அவசரத்தாலா..

எந்தக் கடைசியாலோ
அந்தக் கடைசிக்குக்
கொண்டு நிறுத்திய பேரம்
உறுத்தியது

பதினைந்தைக் கொடுத்தேன்
சில்லறை தேடியவளின் கை பிடித்து
இருக்கட்டும் என்றதற்கு
அவள் நிமிர்ந்து பார்த்தபோது
எங்களிடையே பூத்தவை
எத்தனை மல்லிகைகள்...
நினைவில் இல்லை!

நன்றி : சிவஸ்ரீ கவிதைகள், ஆனந்த விகடன்.

சமீபத்தில் படித்து சிரித்தது:

An English teacher wrote the words, "Woman without her man is nothing" and directed the students to punctuate it correctly.
The Young men wrote: "Woman, without her man, is nothing."
The Young women wrote : "Woman! Without her, man is nothing."


******************


Two college seniors had an exam coming up. They opted to party instead, and missed the exam. "Our car broke down due to a flat tyre." they told the professor. "Can we write the exam tomorrow?". The professor agreed.

Both boys crammed all night until they were sure they knew just about everything. Arriving the next morning, each was told to go to a seperate classroom to take the exam.

As they sat down, they read the first question : "For five marks, explain the contents of an atom." The boys answered the question with ease.

Then, the test continued, "For 95 marks, tell me which tyre it was."

நன்றி : ஓசியில் கிடைத்த ரீடர்ஸ் டைஜஸ்ட் :)

சமீபத்தில் படித்து சிந்தித்தது :


சர்ச்சுக்கு பிரார்த்தனை செய்ய வரும் ஒரு முதியவரிடம் பாதிரியார் கேட்கிறார், "பிரார்த்தனை நேரத்தில், நீங்கள் வாய் திறந்து முணுமுணுத்துக் கூடப் பார்த்ததில்லை, பின் எதற்காக வருகிறீர்கள்?"

"நான் கடவுளீடம் பேச வரவில்லை. அவர் சொல்வதைக் கவனிக்க வருகிறேன்.

"ஓ, கடவுள் உங்க காதில் மட்டும் பேசுகிறாராக்கும்? அப்படி என்ன தான் சொல்கிறார்?"

"அவரும் என்னைப் போல்தான், பேசவருவதில்லை, கவனிக்கத்தான் வருகிறார்!"

வாழ்க்கை அப்படித்தான்,வேறு லயத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அமைதியாக, உன்னிப்பாகக் கவனித்தால் போதும்.. நீங்கள் விரும்பியதெல்லாம் எங்கே இருக்கிறது என்பது புலப்படும்.

கடவுள் சன்னிதியில் சொல்வது மட்டும் தான் பிரார்த்தனை என்பது அல்ல; இந்த உலகமே, இந்தப் பிரபஞ்சமே இறைவனின் ஆலயம். எனவே, நடப்பதை, உணவு உட்கொள்வதை, அடுத்தவரிடம் அன்பு காட்டுவதை என் ஒவ்வொரு செயலையுமே பிரார்த்தனை போல் செய்யுங்கள்!

"வாழ்க்கையே பிரார்த்தனை போல் நடத்திச் செலவது தான் என் நோக்கம். அதற்கொரு பயிற்சியாக கோயிலிலும் பிரார்த்தனை செய்கிறேன்" இதை வாழ்க்கையின் ஆழமான அனுபவமாக ஏற்றுப் பாருங்கள். அதன் பலனாக உங்களுக்கு அமுதம் கிடைக்கும்.

நன்றி : கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம், ஆனந்த விகடன்

16 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

A king ordered a person to be killed and sent order like this
"Hang Him,not Leave Him'
A person wanted to save him altered like this
"Hang Him Not, Leave Him"

Compassion Unlimitted said...

Aahhaa..Blog pudhu stylil..asathitteenga..nanna yosichu irukkeenga..ellam arumai
Oru masala mix illiya.
Ennoda sitela oru ponnukku Tamizh katthukanumam.PHOENIX..unga pera solli irukken..konjam help pannunga
TC
CU

ரசிகன் said...

// An English teacher wrote the words, "Woman without her man is nothing" and directed the students to punctuate it correctly.
The Young men wrote: "Woman, without her man, is nothing."
The Young women wrote : "Woman! Without her, man is nothing." //
ஏனுங்க வேதா..ஒங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷமா இருந்திருக்குமே....இத..
The Young women wrote : "Woman! Without her, man is nothing."
The Young men wrote: "Woman, without her man, is nothing."
இப்பிடி போட்டாக்க நாங்களும் சந்தோஷப் படுவோமில்ல..{ஏன்னாக்கா எப்பவுமே..கடைசி வரிய தான டீபால்ட்டா..தீர்ப்பா எடுத்துக்கிறோம்.ஹிஹி...]

ரசிகன் said...

//Then, the test continued, "For 95 marks, tell me which tyre it was."//
இது தான் ஆப்பு வைக்கிரதுங்கரதா?...யாருங்கோ.. அந்த சூப்பர் டீச்சரு..நம்ம கீதா அக்கா இல்லியே..ஹிஹி...

ரசிகன் said...

//இதை வாழ்க்கையின் ஆழமான அனுபவமாக ஏற்றுப் பாருங்கள். அதன் பலனாக உங்களுக்கு அமுதம் கிடைக்கும்.//

அப்பிடியே.. ரெண்டு இட்டிலி(சட்னி ரொம்ப முக்கியம்),ஒரு வடை கெடைக்குமான்னு பாருங்களேன்..ஹிஹி..

ரசிகன் said...

// பத்து ரூபாய் சொன்னாள்
வாங்கும் எண்ணமில்லை இருந்தும்
தூரத்துக் கூடைக்காரி
எட்டு ரூபாய் சொன்னதைச்
சொன்னேன்.//

பொண்ணுங்க..இப்பிடி சொம்மா சொம்மா..பேரம்பேசிரதாலதான்..
பொடவை கடைக்கு கூப்பிட்டாலே..ஆம்பிளைங்க.. பயந்து ஓடராய்ங்க...
(அதுவும் நாளு பொண்ணுங்களா சேந்து கடைக்கு போயிட்டாக்கா.. "சேல்ஸ்" மேன்,இவினிங்.. "கால்ஸ்" ஆஸ்பிட்டலுங்கோ..
ஆனாக்கா.. சேல்ஸ் உமன் பேச்சுக்கு பயந்தே.."துண்டு வாங்க போன" நாங்கள்ளாம் அவிங்க கொடுக்கறத ,கர்சீப்ப கப்புன்னு வாங்க்கிகிட்டு ஓடிடரோமுங்க.(எங்க.. நம்மல பேச உட்டாத்தான...ஹிஹி..).

ரசிகன் said...

// பதினைந்தைக் கொடுத்தேன்
சில்லறை தேடியவளின் கை பிடித்து
இருக்கட்டும் என்றதற்கு
அவள் நிமிர்ந்து பார்த்தபோது
எங்களிடையே பூத்தவை
எத்தனை மல்லிகைகள்...
நினைவில் இல்லை!//

எதுக்கு? இப்பிடி (ஏமாந்த )நாலு பேரு தெனமும் வந்தா போதுமேன்னா?..
இந்த பத்தியையும் கடைசியா சேத்து வாசிக்கலாமே..ஹிஹி...

உழைப்புக்கேற்ற கூலி-பேராசைக்கு
உண்மையான வேலி..
சுய கெளரவம் சுறுக்கென குத்த..
ஏற்றுக் கொண்டாள்
எட்டு ரூபாய் மட்டும்...
பூத்த மல்லிகைகள்
மணம்வீசின..இப்போதும்
நினைவில்....

ரசிகன் said...

// நடப்பதை, உணவு உட்கொள்வதை, அடுத்தவரிடம் அன்பு காட்டுவதை என் ஒவ்வொரு செயலையுமே பிரார்த்தனை போல் செய்யுங்கள்!//-(பிளாங்க் எழுதுவதையும் கூடத்தான்.(ஆனா அடிக்கடி நா மிஸ் பண்ணுவேன்).)
//வாழ்க்கை அப்படித்தான்,வேறு லயத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அமைதியாக, உன்னிப்பாகக் கவனித்தால் போதும்.. நீங்கள் விரும்பியதெல்லாம் எங்கே இருக்கிறது என்பது புலப்படும்.//

உண்மையிலேயே.. நான் இதை ரொம்ப ரசித்தேன்..
good அப்சர்வர் ரியலி good கெயினர்..
தொகுப்பு நன்றாக இருக்கிறது வேதா .. வாழ்த்துக்கள்..

வேதா said...

@திராச,
அட இது கூட நல்லா இருக்கு :)

@cu,
புது ஸ்டைலெல்லாம் இல்லீங்க எதுவும் எழுத தோணலேன்னா இப்டி தான் எதையாவது ஜி3 செஞ்சு போடறது(அதாவது சுடறது;))

தமிழ் சொல்லிக்கொடுக்கணுமா? என்னையும் நம்பி சொல்லியிருக்கீங்க போல ஹிஹி சரி இயன்ற வரை உதவறேன் :)

@ரசிகன்,
/ஏன்னாக்கா எப்பவுமே..கடைசி வரிய தான டீபால்ட்டா..தீர்ப்பா எடுத்துக்கிறோம்.ஹிஹி...]/
ஹிஹி அப்டியா நாங்க எப்பவுமே நாங்க சொல்றத தான் தீர்ப்பா எடுத்துப்போம் அது கடைசி வரியா இருந்தாலும் சரி முதல் வரியா இருந்தாலும் சரி ;)

/யாருங்கோ.. அந்த சூப்பர் டீச்சரு..நம்ம கீதா அக்கா இல்லியே..ஹிஹி.../
டீச்சர் கிட்ட இவ்ளோ பயமா?

/அப்பிடியே.. ரெண்டு இட்டிலி(சட்னி ரொம்ப முக்கியம்),ஒரு வடை கெடைக்குமான்னு பாருங்களேன்..ஹிஹி../
அது சரி டிபனோட நிறுத்திக்கிட்டீங்க காபியெல்லாம் வேண்டாமா? :)

/பொண்ணுங்க..இப்பிடி சொம்மா சொம்மா..பேரம்பேசிரதாலதான்..
பொடவை கடைக்கு கூப்பிட்டாலே..ஆம்பிளைங்க.. பயந்து ஓடராய்ங்க.../

அப்டியெல்லாம் பொதுவா சொல்லப்படாது, நானெல்லாம் புடவை கடைக்குள்ள நுழைந்தா சேல்ஸ்மென் அதிசயமா பார்ப்பாங்க 10 நிமிஷத்துல புடவை எடுத்துடுவோம் :) எங்கண்ணன் அதுக்கு நேர்மாறு ரெம்ப பொறுமையா தான் எடுப்பான் :)

/உழைப்புக்கேற்ற கூலி-பேராசைக்கு
உண்மையான வேலி..
சுய கெளரவம் சுறுக்கென குத்த..
ஏற்றுக் கொண்டாள்
எட்டு ரூபாய் மட்டும்...
பூத்த மல்லிகைகள்
மணம்வீசின..இப்போதும்
நினைவில்..../
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

/உண்மையிலேயே.. நான் இதை ரொம்ப ரசித்தேன்../
நானும் தான் :)

Compassion Unlimitted said...

Vanakkamungo..unga kitte irundu ..fedjet suttu tenungo..nandri..onnum puriyale aanaal..neenga pottu irukkeenga..sariya than irukkum..sidela odinu irukku ennoda blog page la
TC
CU

கீதா சாம்பசிவம் said...

பதிவா, பின்னூட்டங்களா? எது நல்லா இருக்குனு யோசிக்கிறேன்! :))))))

நாகை சிவா said...

சிவஸ்ரீ கவிதை கரு நல்லா இருக்கு.. :)

Dreamzz said...

நல்ல quotes!

//எந்தக் கடைசியாலோ
அந்தக் கடைசிக்குக்
கொண்டு நிறுத்திய பேரம்
உறுத்தியது//
superu!

ரசிகன் said...

// அது சரி டிபனோட நிறுத்திக்கிட்டீங்க காபியெல்லாம் வேண்டாமா? :)//
நன்றிங்க..வேதா..அது உங்க செளகரியத்த பொருத்ததுங்க..நமக்கு ஆட்சேபனை இல்லை..(நட்போட கொடுக்கறத வேண்டாமுன்னு சொல்லறது அவ்வளவு நல்லாயிருக்காதுல்ல..:))
ரொம்ப நல்லவீங்களா இருக்கீங்களே..அப்பிடியே மதியான சாப்பாடுக்கும் அரேஞ்ச் பண்ணிட்டாக்கா.. பெட்டராயிருக்குமில்ல..ஹிஹி..:D)

கோபிநாத் said...

\\பதினைந்தைக் கொடுத்தேன்
சில்லறை தேடியவளின் கை பிடித்து
இருக்கட்டும் என்றதற்கு
அவள் நிமிர்ந்து பார்த்தபோது
எங்களிடையே பூத்தவை
எத்தனை மல்லிகைகள்...
நினைவில் இல்லை!

நன்றி : சிவஸ்ரீ கவிதைகள், ஆனந்த விகடன்.\\

ஆஹா மிஸ் பண்ணிட்டேனே...நன்றி வேதா :)

இந்த மாதிரி படிச்சதையும், பிடித்ததையும் போடுங்கள் நன்றாக இருக்கும் :)

வேதா said...

@cu,
அட இதுக்கெல்லாம் எதுக்கு அறிவிப்பு :) நான் மட்டும் என்ன தெரிஞ்சா எல்லாத்தையும் போடறேன் சும்மா முயற்சி செய்ய வேண்டியது தான் :)

@கீதா,
ஹிஹி பின்னூட்டங்கள் அதிக காமெடியா போயிக்கிட்டு இருக்கு :)

@சிவா,
ஆமா எனக்கும் அந்த கவிதையோட கரு ரொம்ப பிடிச்சிருந்தது. அவங்களோட இன்னொரு கவிதையும் அந்த இதழ்ல வெளிவந்திருக்கு அதுவும் நல்லா இருக்கும் :)

@ட்ரீம்ஸ்,
சூப்பர் தான் :)

@ரசிகன்,
இதுக்கு பேரு தான் இடத்தை கொடுத்தா மடத்தை பிடுங்கறதா? :)

@கோபி,
கண்டிப்பா இனி இந்த மாதிரி நிறைய இங்க பதிவு செய்யறேன் :)