Monday, November 12, 2007

என்றும் நட்புடன்..

என் இனிய தோழனே,

மின்னலாய் நுழைந்து, மேடையில் மழையாய் சொற்களை பொழிந்து, இடியாய் கைத்தட்டல்களை நீ அள்ளிக் கொண்ட தருணத்தில் தான் உன்னை நான் முதன்முதலாய் கண்டேன் . நட்புகளின் முகமறிந்து, அகமறியா குழப்பத்தில் நான் உழன்று கொண்டிருந்த பொழுது, பார்த்த முதல் நொடியே உன் முகத்தில் தெரிந்தது அகம். கருத்த நிறத்தில், உயரமாய், ஒரு வீரனை போன்ற தைரியத்துடனும், நெடுங்காலம் பழகிய தோழமையுடனும் பரிச்சயமற்ற கூட்டத்தினரிடையே நீ பேசிய கணங்களில் உணர்ந்தேன் ஒரு நட்பின் பிறப்பை. கல்லூரி தொடங்கி பல நாட்கள் ஆயினும் இதுவரை உன் இருப்பை நான் உணரவில்லை என்று வியப்புடன் நண்பர்களிடம் உரைத்த போது தான் எனக்கு உறைத்தது, கல்லூரியின் முதல் நாளுக்கு பிறகு இன்று தான் நீ வருகிறாய் என்று. நம் துறையின் இறுதி ஆண்டு மாணவர்களின் பிரிவு உபசார விழா நம் நட்பின் தொடக்க விழாவாக ஆயிற்று.

கரும்பலகையில் நான் எழுதி வைத்த கவிதையை வியந்து என்னை பரிச்சயமில்லாத போதும் மேடையில் நீ பாராட்டியது நம் நட்பின் அச்சாரமாயிற்று. உன்னிடம் பேசிய முதல் வார்த்தைகள் நினைவில் இல்லை, தொடங்கி வைத்தது நீயா இல்லை நானா என்றும் தெரியவில்லை. தொடங்கி வைத்தது யாராயினும் சரிதான், அதன் பின் தொடர்ந்த பல சந்திப்புகள் நம் மன ஒற்றுமையை வியந்தன, சில சமயங்களில் பொறாமை தீயில் கழன்றன. ஆயினும் மெல்ல ஒரு செடியாய் உருவெடுத்து விருட்சமாய் உயர்ந்து நின்றது நம் நட்பு. அந்த சமயங்களில் தான் விருட்சத்தின் வேரில் கொதிக்கும் நீரை ஊற்றியது நம் நட்புவட்டாரத்தின் சில துருப்பிடித்த மனங்கள். வகுப்பில் நுழைந்தவுடன் உன்னைத் தேடும் என் விழிகளில் நட்பைத் தாண்டி காதலை கண்டனர் நம் தோழர்கள். இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி அதற்கு மாலையுமிட்டு ஊர்வலம் நடத்தினர் கல்லூரி சாலையெங்கும்.

ஊர்வலத்தில் கப்பல் ஏறிய நம் நட்பின் மானத்தை மீட்டெடுக்க மனம் உடைந்துப் போய் உன்னை சந்திக்க வந்த அந்த மாலைப் பொழுதில் தான் மெல்லிய ரகசியமாய் நீ என் கைப்பிடித்து உன் காதலை சொன்னாய் ஒரு கவிதையாய். கண நேர அதிர்ச்சியில் நான் உன் கண்களை சந்தித்த பொழுது சட்டென்று விழிகள் தாழ்த்தி, முன்னெழுப்பொழுதும் நான் கேட்டிராத தயங்கிய குரலில் 'எப்படியிருக்கிறது நான் எழுதிய போட்டிக்கவிதை?' என புன்முறுவலுடன் கேட்டாய்.

என் இனிய தோழனே! அந்த கணநேரத்தில் கண்டுக்கொண்டேன் உன் விழிகளில் என் மீதான உன் நேசத்தை. நான் இழந்தது நட்பா? நேசமா? எதுவென்று புரியாமல் இருந்துவிட்டாலும், நீயும் என் கண நேர அதிர்ச்சி அலைகளில் உணர்ந்துக்கொண்டாய் நான் உன்னை நட்பின் உருவாய் வடித்திருப்பதை. சில நொடிகளில் இடம் மாறிய நம் எண்ணங்கள் நாம் பேசிக்கொள்ளாமலே நம்மை நமக்கு உரைத்தன, உன்னிடம் என் நட்பெனும் நிலையையும், என்னிடம் உன் நேசத்தையும்.

பின் வந்த நாட்களில் அதன் பிறகு என்றுமே என் செவிகள் கேட்கவில்லை அன்று தயக்கத்தை பூசியிருந்த உன் குரலை. நம் நட்பின் மிக நுட்பமான நிமிடங்களை நாம் தாண்டிவிட்டோம். அவை என்றும் நமக்கு உணர்த்திக்கொண்டேயிருக்கின்றன நம் நட்புத்தோட்டத்தில் உனக்கேயான சில பிரத்யேக மலர்களையும் எனக்கேயான சில தூய்மையான பனித்துளிகளையும்.

என்றும் நட்புடன்,
நான்..


பி.கு : நட்பென்னும் தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இருவரில் ஒருவர் அதை காதலுக்கு நகர்த்திச் செல்லும் போது அதில் ஒப்புமை இல்லாத பெண்ணானவள் எதிர்க்கொள்ளும் ஒரு நிலையை கவிதையாக எழுத நினைத்தேன். அது கட்டுரையாக வந்து விட்டது. அதனால இதை கவிதையாய் ஒரு கட்டுரை இல்ல கவிதையாய் ஒரு கதை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். படிச்சுட்டு நல்லா இருந்தா சொல்லுங்க அடுத்த பதிவில் அந்த ஆணின் நிலையை எழுதலாம்னு ஒரு எண்ணம் :)

24 comments:

ambi said...

//பெண்ணானவள் எதிர்க்கொள்ளும் ஒரு நிலையை கவிதையாக எழுத நினைத்தேன். அது கட்டுரையாக வந்து விட்டது.//

அதானே பார்த்தேன்! ஒரு வேளை நீங்க எழுதின கவிதையை பார்த்து கூகிள் தான் பொறாமைபட்டு, Formatting, spacing எல்லாம் தூக்கிடுச்சோனு பார்த்தேன். :p

எல்லாம் சரி, இது ஒரு ஆட்டோ பயோகிராபி மாதிரி எனக்கு தோணுது. மத்த மக்களுக்கு எப்படி?னு பாக்கறேன். :p

ambi said...

நான் தான் பஷ்ட்டு போலிருக்கு.

போன பதிவுக்கு அப்புறமா பதில் போடலாம்னு சும்மா இருந்துட்டேன். :)

வேதா said...

அம்பி ஏனிந்த கொலவெறி? வந்ததுக்கு உம்ம நாரதர் வேலையை காமிச்சுட்டீங்க. இப்டி ஏதாவது கொளுத்தி போடறத உங்க தொழிலா வச்சுக்கிட்டு இருக்கீங்களா? :)

தலதீவாளி எப்டி போச்சு? செம கலெக்ஷனா? ;)

Raji said...

Nice one ...
sikkiram avanga perspectiveum poadunga Veda:)

G3 said...

yakka. sonnadhellam sari.. aana kadaisila enna solla vareengannu dhaan puriyala.

//பின் வந்த நாட்களில் அதன் பிறகு என்றுமே என் செவிகள் கேட்கவில்லை அன்று தயக்கத்தை பூசியிருந்த உன் குரலை. நம் நட்பின் மிக நுட்பமான நிமிடங்களை நாம் தாண்டிவிட்டோம். அவை என்றும் நமக்கு உணர்த்திக்கொண்டேயிருக்கின்றன நம் நட்புத்தோட்டத்தில் உனக்கேயான சில பிரத்யேக மலர்களையும் எனக்கேயான சில தூய்மையான பனித்துளிகளையும் //

Friendship cut aayiduchungareengala? illa loversa maaritaangangareengala? illa friendsaavae continue pandraangala??

onnumae puriyalae ulagathilae :((

G3 said...

//அதானே பார்த்தேன்! ஒரு வேளை நீங்க எழுதின கவிதையை பார்த்து கூகிள் தான் பொறாமைபட்டு, Formatting, spacing எல்லாம் தூக்கிடுச்சோனு பார்த்தேன். :p
//

LOL @ Ambi's comment :))

Dreamzz said...

//அதானே பார்த்தேன்! ஒரு வேளை நீங்க எழுதின கவிதையை பார்த்து கூகிள் தான் பொறாமைபட்டு, Formatting, spacing எல்லாம் தூக்கிடுச்சோனு பார்த்தேன். :p//
LOL

Dreamzz said...

ஆனால்.....
சொல்குற்றம் இல்லை! பொருள் குற்றம் இருக்குது!

Compassion Unlimitted said...

Aan paarvvai ..penn paarvai undu enbadhai arumaiyaga veli paduthhi irukkireergal..Palar Iru konangal undu enbadhai namba maattargal..avargal ishtam..
Irandaavadhu paguthikkaga kaathu irukkiren

Unmaigal katturaigalaga veli vandhu vidugindrana.

Tc
CU

Dreamzz said...

enakku full details theriyaathu.. so freeya viduren ;)

ரசிகன் said...

// மெல்லிய ரகசியமாய் நீ என் கைப்பிடித்து உன் காதலை சொன்னாய் ஒரு கவிதையாய். கண நேர அதிர்ச்சியில் நான் உன் கண்களை சந்தித்த பொழுது சட்டென்று விழிகள் தாழ்த்தி, முன்னெழுப்பொழுதும் நான் கேட்டிராத தயங்கிய குரலில் 'எப்படியிருக்கிறது நான் எழுதிய போட்டிக்கவிதை?' என புன்முறுவலுடன் கேட்டாய்.//
இது அந்தர் பல்ட்டிங்கோ..........(நம்ம கவுண்டரு வாய்ஸ்ல படிக்கவும்)..(கவுண்டமணிதானுங்க..)

//இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி அதற்கு மாலையுமிட்டு ஊர்வலம் நடத்தினர் கல்லூரி சாலையெங்கும்.//
// இழந்தது நட்பா? நேசமா? எதுவென்று புரியாமல் இருந்துவிட்டாலும், நீயும் என் கண நேர அதிர்ச்சி அலைகளில் உணர்ந்துக்கொண்டாய் நான் உன்னை நட்பின் உருவாய் வடித்திருப்பதை//
அடடா.. வரிகளுல வார்த்தைகள் சும்மா பூந்து வெளயாடியிருக்கு..

// அடுத்த பதிவில் அந்த ஆணின் நிலையை எழுதலாம்னு ஒரு எண்ணம் :)//
ஆஹா.. .. பெண்ணோட நெலமை உங்களுக்கு புரியும் .இது நியாயம்.. ஆணோட மன நிலைய புரிஞ்சிக்கிற அளவு பெண்கள் அவ்வளவு பக்குவமடைஞ்சிட்டாங்களா..என்ன?.
கருத்து ரொம்பவே நல்லாயிருக்குதுங்க வேதா..

ரசிகன் said...

இது பின்னூட்டத்துக்காக அல்ல..

பின்னூட்டத்துல சொன்னது பதிவுல எனக்கு பிடிச்சவை மற்றும் தோழியை ஊக்கப் படுத்துவதற்க்காக...
இது தோழி மேல வந்த கோவத்த சொல்லாம இருக்க முடியலீங்க..வெளிப்படையா சொல்லறத்தும் நட்புதானுங்க..

நீங்க ஆட்டோ (இல்ல..இல்ல.. லாரி) அனுப்ப முகவரி இன்னும் கொடுக்காததால.. இங்கயே சொல்லறேன்..
"

ஏனுங்க வேதா.. என்ன இது ???..

எவ்வளவு அருமையான கவிதைக்குறிய கரு.. இதை அவசரப்பட்டு ஆம்லெட் போட்டுடீங்களே..
இத கொஞ்சம் பொறுமையா மனசுக்குள்ள போட்டு வைச்சிருந்தீங்கன்னா.. இந்நேரம்..நாலஞ்சி கவிதை வரிகள் பூத்திருக்குமில்ல..
ரொனால்டோகிட்ட எப்ப பந்து சிக்கினாலும் கோல்தா ம்பாங்க..உங்க கிட்ட இம்புட்டு நல்ல ஸ்கிரிப்ட் கெடச்சும்,அருமையான கவித்திறமை இருந்தும் மிஸ் பண்ணிட்டீங்களே....ம்.ம்.
உங்கள யாரு கட்டுரையெல்லாம் எழுத சொன்னாங்க..?..
ஆனாலும். நடுநடுவுல கவித தல காட்டுது..பழக்கதோஷம்.
(உண்மையா சொல்லனுமின்னாக்கா.. கடைசி பத்திய படிக்கிற வரைக்கும்,இது நெசமாவே. உங்க அனுபவமின்னு நெனச்சிக்கிட்டு.. ரொம்ப சீரியஸ்ஸா..மனசெல்லாம் பாரமா.. உங்க மன நிலையை உணர முயன்றதென்னவோ உண்மைதான்.. ஆனாக்கா கடைசி பத்திய படிச்சிப்புட்டு...என்னிய கண்ணாடில பாத்த போது இஞ்சி தின்ன கொழந்த(ஏன்னாக்கா நானாச்சே)மாதிரி இருந்துச்சி... ) சிரிக்காதிங்க.. நெசமாத்தேன்..என்னோட மொக்கைக்கு பழிவாங்குதல் நடவடிக்கையாயிருக்குமோன்னு கூட தோனுச்சு..
இந் நேரம் கவிதையா குடுத்திருந்தாக்கா.. அத படிச்சிப்புட்டு,ரொம்ப நேரம் காப்பியை குடிச்சிக்கிட்டே ஃபில் பண்ணிக்கிட்டு.. பழைய நெனவெல்லாம் திருப்பி தூசு தட்டி,வரிவரியா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு சுவரஸ்யமா நேரத்த ஓட்டியிருப்போமில்ல?..
எனக்கென்னவோ..
வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைத்த கதைதான் ஞாபகத்துக்கு வந்துச்சி...
எழுதிட்டு..அனுப்பலாமா வேணாமான்னு ரொம்ப யோசிச்சேனா...அப்பறமா..
நாம தப்பா எழுதுனா வந்து வெளிப்படையா திட்றவங்க..அவிங்களுக்கு சொன்னா புரிஞ்சிக்குவாங்கன்னு ,
உண்மைய சொன்னா என்னிய திட்டமாட்டீங்கன்னு தோனுச்சி..அத்தான் சொன்னேன்.. தப்பில்லியே..

கோபிநாத் said...

\படிச்சுட்டு நல்லா இருந்தா சொல்லுங்க அடுத்த பதிவில் அந்த ஆணின் நிலையை எழுதலாம்னு ஒரு எண்ணம் :)\\

அருமை...அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் :)

ரசிகன் said...

ஆங்...... ஒரு விசயம் மறந்துட்டேன்..
நம்ம அம்பி அண்ணாவுக்கு ஒரு ரிப்பீட்டே....ஹிஹி...

வேதா said...

@ராஜி,
சீக்கிரம் போடணுமா? ஹிஹி யோசிக்க கொஞ்சம் டைம் கொடுங்க :)

@காயத்ரி,
பாவம் ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்திருக்க வந்தவுடன குழப்பி விட்டுட்டேனா? :)

@ட்ரீம்ஸ்,
சொற்குற்றமா? நக்கீரரே! அதையும் சொல்லிட்டு போறது :)

/enakku full details theriyaathu.. so freeya viduren ;)/
அது!!!!!! ;)

@cu,
/Irandaavadhu paguthikkaga kaathu irukkiren
Unmaigal katturaigalaga veli vandhu vidugindrana./
இது என்னால் கற்பனை செய்யப்பட்ட ஒன்று, அதனால நீங்க நினைக்கற அளவுக்கு வருமான்னு தெரியல நீங்க தான் படிச்சு சொல்லனும் :)

நாகை சிவா said...

நல்லா இருக்கு அடுத்த பாகம் எழுதலாம் :)

நாகை சிவா said...

அம்பி அந்த ஆட்டோபயோகிராபி அவங்களுக்கு இல்லனு பொய் சொல்ல மாட்டங்க... அதே போல எங்களுக்கும் இல்லைனு எவரும் மறுக்கவும் மாட்டாங்க... :)

வேதா said...

@ரசிகன்,
/அடடா.. வரிகளுல வார்த்தைகள் சும்மா பூந்து வெளயாடியிருக்கு../
வார்த்தைகள் மட்டுமா? உணர்வுகளும் தான் :)

/ஆணோட மன நிலைய புரிஞ்சிக்கிற அளவு பெண்கள் அவ்வளவு பக்குவமடைஞ்சிட்டாங்களா..என்ன?. /
ஆணோட மனநிலையை புரிஞ்சிக்க அவ்வளவு பக்குவமடையுணுமா என்ன? :) என்னை பொறுத்தவரை இதில் ஆண் பெண் பேதமில்லை எல்லாம் அவரவர் மனநிலை பொறுத்தது தான் :)

/இது தோழி மேல வந்த கோவத்த சொல்லாம இருக்க முடியலீங்க..வெளிப்படையா சொல்லறத்தும் நட்புதானுங்க../
அதை நீங்க இங்க பொதுவில தாராளமா சொல்லலாம் அதனால தான் இந்த மறுமொழியை வெளியிட்டுட்டேன் :)

/நீங்க ஆட்டோ (இல்ல..இல்ல.. லாரி) அனுப்ப முகவரி இன்னும் கொடுக்காததால.. இங்கயே சொல்லறேன்../
அவ்ளோ கொலவெறியோட இருக்கீங்களா என்ன? நான் எங்கேயாவது தலைமறைவா போயிடறேன் :)

/இத கொஞ்சம் பொறுமையா மனசுக்குள்ள போட்டு வைச்சிருந்தீங்கன்னா.. இந்நேரம்..நாலஞ்சி கவிதை வரிகள் பூத்திருக்குமில்ல../
இருக்கலாம் ஆனா அந்த அளவுக்கு பொறுமையில்லாம போச்சு :(

/என்னிய கண்ணாடில பாத்த போது இஞ்சி தின்ன கொழந்த(ஏன்னாக்கா நானாச்சே)மாதிரி இருந்துச்சி... ) சிரிக்காதிங்க.. நெசமாத்தேன்..என்னோட மொக்கைக்கு பழிவாங்குதல் நடவடிக்கையாயிருக்குமோன்னு கூட தோனுச்சு../
ஹாஹா விவிசி :):):)

/உண்மைய சொன்னா என்னிய திட்டமாட்டீங்கன்னு தோனுச்சி..அத்தான் சொன்னேன்.. தப்பில்லியே../
இப்ப என்ன தப்புன்னு சொன்னா பெஞ்ச் மேல ஏறி நிக்க போறீங்களா என்ன? :):)
எப்படியிருந்தாலும் உங்க கருத்தை வெளிப்படையா சொன்னதுக்கு நன்றி :)

@கோபி,
அப்ப அடுத்த பதிவு எழுதலாம்னு சொல்றீங்க :) எழுதிடுவோம் :)

@சிவா,
/நல்லா இருக்கு அடுத்த பாகம் எழுதலாம் :)/
ஓகே தங்கள் சித்தம் குரு ;)

/அவங்களுக்கு இல்லனு பொய் சொல்ல மாட்டங்க... அதே போல எங்களுக்கும் இல்லைனு எவரும் மறுக்கவும் மாட்டாங்க... :)/

ஏன்? ஒரு முடிவோட தான் திரியறீங்க போல :) நான் எதுவும் சொல்லலப்பா :)

Compassion Unlimitted said...

///நீங்க நினைக்கற அளவுக்கு வருமான்னு தெரியல //

Naan enna periya kombanaa..neenga vera..amakkalama ezhudareenga..nadakkattum
TC
CU

Raj said...

Akka...or...Mami....or Aunty...or Thozhi,
sorry..innum profile parkkavillai...

Kavithuvammana inthak kathai
padikka suvaiyay irunthathu....
intha Vetham enrum puthithu thaan...
Natpu Kathal irandukkum orrumai niraiya...
eppothu intha kathaiyil varum aan penn iruvarum vinadi kooda piriyaamal vazhkaiyil enrenrum sernthu irukka vendum enru ninaithaarkaloo antha vinaadiyil irunthu no more natpu...
Athmaarththamanaa Kathal thaan...

intha blog areavukku puthithu naan.. yaar intha AMBI...
NALLA KALAIKKIRAREE ELLARAIYUM..
Thalai Deepavalinnu pottirunthanga..Mr.Ambi Valthukkal.

கீதா சாம்பசிவம் said...

காத்திருக்கேன்.

மு.கார்த்திகேயன் said...

//அதானே பார்த்தேன்! ஒரு வேளை நீங்க எழுதின கவிதையை பார்த்து கூகிள் தான் பொறாமைபட்டு, Formatting, spacing எல்லாம் தூக்கிடுச்சோனு பார்த்தேன்.//


LOLluyaa ambi unakku..

aduththa part, athaavathu Ankalin mananilaiyai padikka avaludan vetha

வேதா said...

@cu,
அப்டியெல்லாம் சொல்லாதீங்க. எதுவும் தவறு இருந்தா நீங்க தாராளமா சுட்டிக்காட்டலாம்.

@ராஜ்,
அக்காவா? அதெல்லாம் வேண்டாம். பெயரிட்டு அழைத்தாலே போதும் :) தங்கள் வரவுக்கு நன்றி.

@கீதா,
:)

@கார்த்திக்,
என்ன இது அதிசயமா இருக்கு? :) வந்ததுக்கு அம்பிக்கு சப்போர்ட்டா?
அடுத்த பகுதி போட்டாச்சு படிச்சுப் பாருங்க :)

Compassion Unlimitted said...

//அப்டியெல்லாம் சொல்லாதீங்க. எதுவும் தவறு இருந்தா நீங்க தாராளமா சுட்டிக்காட்டலாம்//
ennai nakkeeran vamsathula sethute...vishwamithrar vamsampa naan
Tc
CU