Thursday, November 15, 2007

என்றும் நேசமுடன்...

என் இனிய தோழியே,

அது வரையில் பெண்களுக்கு இடமேயில்லாத என் நட்புவட்டத்தில், மலரிலும் பிறக்கும் சூறாவளியாய், விழிகளில் வீரம் ஏந்தி, மனம் உரைப்பதை நேருக்கு நேர் சொல்லும் வேங்கையாய் வந்தவள் நீ. அன்று மேடையில் நான் உரையை முடித்த வேளையில் என்னை அறிமுகமில்லாத தருணத்தில் சிறிதும் தயக்கமில்லாமல் புயலாய் எதிரில் வந்து நின்று பாராட்டிய கணங்கள் நம் நட்பின் உன்னத கணங்கள். ஆண்டாண்டு காலமாய் புற உலகில் நான் தேடியலைந்த ஒருமித்த அகத்தின் முழு உருவமாய் என் எதிர் நின்றாய் நீ. பெண்களின் அருகாமை சிறிதும் அறியாத என் மனம் புரிந்து, மெல்ல புன்சிரிப்புடன் நீ சொன்ன முதல் வார்த்தைகள், 'நாம் இனி நண்பர்கள்'. ஆண்களின் உலகில் மட்டுமே திரிந்துக்கொண்டு ஆணின் பார்வையில் மட்டுமே விரிந்திருந்த என் உலகம், உன் விழி வழியே பெண்ணுலகை ரகசியமாய் எட்டிப்பார்த்தது. நட்பெனும் பாலம் மெல்ல உருவெடுத்தது நம்மிடையே.

எனக்கென தனியேயான நண்பர்களாக சில ஆண்களும், உனக்கென தனியேயான தோழிகளாக சில பெண்களும் சூழ்ந்திருந்த வேளையிலும் நமக்கேயென தனியாக உனக்கு நானும், எனக்கு நீயும் மட்டுமே என முதிர்ச்சியடைந்தது நம் நட்பு. நமக்கிடையே இரகசியங்கள் ஏதுமில்லையெனும் நிலையில், நானே அறியாத வகையில் புதையலாய் ஒரு இரகசியம் புதையுண்டு கிடந்தது என் மனப்பரப்பில். காலப்போக்கில் நீண்ட நெடும்பாதையில் மெல்லிய பூங்காற்றை சுவாசித்துக்கொண்டு காலாற நாம் நடந்துக்கொண்டிருந்த வேளையில் எங்கிருந்து வந்ததென்று புரியாமலே உள்நுழைந்தது உன் மீதான நட்பையும் மீறிய ஒரு வரையறுத்து சொல்லமுடியா ஒன்று. சட்டென பின்வாங்கின என் கால்கள். வியப்பை சுமந்த உன் விழிகள் கேட்டன ஆயிரம் கேள்விகள். நீ பார்த்துக்கொண்டிருக்கும் போதே மெல்ல பின்னடைந்தேன், நாம் கடந்து வந்த வழியில் உன் காலடிச்சுவடுகள் தேடி. நம் நட்பு தொடங்கிய இடத்தில் நிமிர்ந்த நன்னடையின் பிம்பமாய் அழுந்த பதிந்த உன் காலடிகள் பயணம் முழுவதிலும் எங்கும் தயங்கி திசை மாறவில்லை, என்னுடையவை போல்.

நட்பாய் பூத்த மலர் நேச மழையில் நனைவதைக் கண்டு சிலிர்த்த என் மனம் சிந்திக்க மறுத்தது உன் நிலையை. மீண்டும் தொடர்ந்த நம் பயணத்தில் நீ என்றும் கேட்கவேயில்லை என் தயக்கத்தின் காரணத்தை. நீ கேட்காமலே புரிந்துக்கொண்டிருக்கலாம், ஆயினும் குற்ற உணர்வுடன் தொடர முடியா நான் கேட்டேன் உன்னிடம், உன் கைகள் ஏந்தி உன் விழிகள் நோக்கி. நோக்கிய என் விழிகளிடம் பேசியவை உன் விழிகள் அல்ல, கண்ணீர் துளிகள். தூய்மையான பனித்துளிகளென அவை உணர்த்தின என் நிலைக்கு எதிரான உன் நிலையை. உன் அதரங்கள் அசையாமலே உன் நிலையை உணர்ந்தேன் நான் ஏந்தி நின்ற உன் கரங்கள் வழி. என் புரிதலை உணர்ந்துக்கொண்ட நீ மெல்ல புன்சிரிப்புடன் பயணத்தை தொடர்ந்தாய் அதே நிமிர்ந்த நன்னடையுடன்,நானும் தான்.

வாழ்க்கை பயணத்தில் கல்லூரி சாலை முடிவுக்கு வந்துவிட்டாலும், நட்பின் பாதை என்றும் நேர் கோடுகளால் ஆனதல்ல வளைந்து நெளிந்து செல்லும் சாலையாகவே அது செப்பனிடப்படுகின்றது, எதிரெதிர் திசையில் பயணித்த போதிலும் பாதையின் ஏதாவது ஒரு திருப்பத்தில் மீண்டும் சந்திப்போம்.

என்றும் நேசமுடன்,
நான்..

24 comments:

G3 said...

//வகை கதை //

nalla kadha udareenga :)

வேதா said...

ஆமா நல்ல கதை தான் காயத்ரி :) நன்றி :)

வேதா said...

மக்களே இன்னொரு முக்கியமான விஷயத்தை பத்தி ஒரு பதிவு அடுத்து போட போறேன். திங்கட்கிழமை எல்லாரும் தவறாம வந்து படிச்சுடுங்க :)

ரசிகன் said...

இது பின்னூட்டத்துக்காக அல்ல..

(அப்பிடி டைட்டிலுல தெளியா போட்டாத்தேன்.. நீங்க ஒடனே.. மொத வேளையா வெளியிட்டுடுவீங்கன்னு ஊருக்குள்ல ஒரு பேச்சிருக்குதில்ல..அதனாலத்தேன்..)..

// நோக்கிய என் விழிகளிடம் பேசியவை உன் விழிகள் அல்ல, கண்ணீர் துளிகள். தூய்மையான பனித்துளிகளென அவை உணர்த்தின என் நிலைக்கு எதிரான உன் நிலையை//
ஒன்னுக்கொன்று தொடர்புடைய ரெண்டு பதிவையும் ஒன்னா போட்டிருந்தா.. ஒரு முழுக்கதையாவே..மாறியிருக்கும்..
ஆணோ,பெண்ணோ .. உணர்வுகள்.. உண்மைதான்.. ஒத்துக்கிறேன்.. நல்லாயிருக்கு..
எல்லா பழியையும் ஹீரோ மேல போடாம.. அவனோட மனப்போராட்டங்களையும் புரிஞ்சிக்கிட்டு எழுதனது யதார்த்தமாயிருக்கு.. வாழ்த்துக்கள்..

// திங்கட்கிழமை எல்லாரும் தவறாம வந்து படிச்சுடுங்க :)//
பீடிகையெல்லாம் பலமாயிருக்கு.???..
என்னன்னு பாக்கலாமுங்கோ..!!!

மு.கார்த்திகேயன் said...

ஒரு நல்ல முயற்சி வேதா.. ஆண்களின் மனதின் வெளிப்பாடுகளை ஒரு பெண் எழுத்தால் வெளிப்படுத்துவது.. ஆண்டாண்டு காலம், ஆண் புலவர்களே பெண்களுக்கும் சேர்த்து கனவு கண்டு வந்தனர்.. கவிதை எழுதி தந்தனர்.. அதையெல்லாம் நன்றாக உடைக்க செய்திருக்கிறீர்கள் வேதா.. இன்னும் அதிகமாக இது போல முயற்சிக்கலாம்.. வாழ்த்துக்கள்!

மு.கார்த்திகேயன் said...

இது போலவே கவிஞர் தாமரை, வசீகரா என்னும் மின்னல் படத்தின் பாடலை எழுதிய போதும் (பெண்ணை பற்றி பெண்ணே சொல்வது), வேட்டையாடு விளையாடுவில் ராகவன் என்னும் அறிமுக பாடலை (ஆணின் வீரங்கள், வேகங்களை பெண்ணின் பார்வையிலிருந்து) எழுதிய போதும் நான் ஆச்சர்யப்பட்டு அதை வெகுவாக ரசித்தேன்.. அது போல இன்னும் நிறைய முயற்சிக்க வாழ்துக்கள் வேதா

Compassion Unlimitted said...

//உன் விழி வழியே பெண்ணுலகை ரகசியமாய் எட்டிப்பார்த்தது.//
manadai thodum vaarthaigal
TC
CU

Compassion Unlimitted said...

//உன் மீதான நட்பையும் மீறிய ஒரு வரையறுத்து சொல்லமுடியா ஒன்று. சட்டென பின்வாங்கின என் கால்கள். வியப்பை சுமந்த உன் விழிகள் //
ennavendru solvadhu
tc
cu

Compassion Unlimitted said...

//எதிரெதிர் திசையில் பயணித்த போதிலும் பாதையின் ஏதாவது ஒரு திருப்பத்தில் மீண்டும் சந்திப்போம்//
Idhu konjam danger illaya
TC
CU

Compassion Unlimitted said...

//நட்பின் பாதை என்றும் நேர் கோடுகளால் ஆனதல்ல வளைந்து நெளிந்து செல்லும் சாலையாகவே அது செப்பனிடப்படுகின்றது//

Yaaraal endru koori irundaal nandraga irundhu irukkumo !!

TC
CU

Compassion Unlimitted said...

aahhaa author linela irukkeengalo ?
cu

வேதா said...

@ரசிகன்,
/நீங்க ஒடனே.. மொத வேளையா வெளியிட்டுடுவீங்கன்னு ஊருக்குள்ல ஒரு பேச்சிருக்குதில்ல..அதனாலத்தேன்..)..
இது பயங்கர உள்குத்தால இருக்குது :)

/ஒன்னுக்கொன்று தொடர்புடைய ரெண்டு பதிவையும் ஒன்னா போட்டிருந்தா.. ஒரு முழுக்கதையாவே..மாறியிருக்கும்../
சரி தான் ஆனா முதல்ல முந்தைய பதிவு எழுதினப்புறம் தான் இதை எழுதனும்னு தோணுச்சு :) இது ஒரு சோதனை முயற்சி தான்(ஹிஹி படிக்கற உங்களுக்கும் தான்:))

/பீடிகையெல்லாம் பலமாயிருக்கு.???..
என்னன்னு பாக்கலாமுங்கோ..!!!/
அதுக்கு நீங்க திங்கட்கிழமை வரைக்கும் காத்திருக்கணும் :)

/ அவனோட மனப்போராட்டங்களையும் புரிஞ்சிக்கிட்டு எழுதனது யதார்த்தமாயிருக்கு.. வாழ்த்துக்கள்../

நன்றி :)

@கார்த்தி,
/அதையெல்லாம் நன்றாக உடைக்க செய்திருக்கிறீர்கள் வேதா.. இன்னும் அதிகமாக இது போல முயற்சிக்கலாம்.. வாழ்த்துக்கள்!/
நன்றி தலைவரே எல்லாம் உங்க ஆசி தான் :)


@cu,
/Idhu konjam danger illaya/
இதெல்லாம் வாழ்க்கையில சகஜம் தான் :)

/Yaaraal endru koori irundaal nandraga irundhu irukkumo !!/
நட்பின் பாதையில் நடப்பவர்களால் தான் :)

/aahhaa author linela irukkeengalo ?/
ஆமா :):)

நன்றி :)

Dreamzz said...

மீண்டும் ஒத்துக்க மாட்டேன்.. இது என்ன அநியாயம்? காதல் தப்பு, நட்பு புனிதம் மாதிரி? நட்பு புனிதம் தான்.. ஆனால் காதலும் புனிதம் தான்.. commitment இல்லாம friendsa நேரத்த போக்கலாம் ஆனால் காதல் பண்ண பயம்.. இதுக்கு காதல ஏன் குற்றம் சொல்லணும்?

I think it is more of the "You good enough for a hi, not good enough to be my friend, you are good enough to be a friend, but not good enough to be a lover" mentality

காதல் நட்பின் அடுத்த படி.. atleast for really close male-female relations.. பொண்ணுங்களுக்கு அதில் ஏற பயம் - காரணம் ஆயிரம் இருக்கலாம் -- வசதி, வீட்டுல என்ன சொல்லுவாங்கன்னு பயம், os she loves someone else.. whatever, அதுக்கு காதல நட்புக்கு கீழ தள்ளி சாக்கு சொல்றத ஒத்துக்க முடியாது! (உன்னை யாரு ஒத்துக்க சொன்னா அப்படின்னு எல்லாம் கேட்க கூடாது! )

கோபிநாத் said...

பின்னிட்டிங்க வேதா...அழகாக எழுதியிருக்கிங்க..வாழ்த்துக்கள் :)

மூன்றாவது பத்தி அட்டகாசம் :)

கோபிநாத் said...

\\வேதா said...
மக்களே இன்னொரு முக்கியமான விஷயத்தை பத்தி ஒரு பதிவு அடுத்து போட போறேன். திங்கட்கிழமை எல்லாரும் தவறாம வந்து படிச்சுடுங்க :)\\

ஆஹா...இன்னொரு விஷயமா!? அதுக்கு முன்னாடி தெரிஞ்சிக்க வாய்ப்பு இல்லையா!? ;)

வேதா said...

@ட்ரீம்ஸ்,
ஒரு விஷயத்தை நீ தெளிவா புரிஞ்சுக்கணும், போன பதிவிலேயே நான் சொல்லிட்டேன் நண்பர்கள் ரெண்டு பேரில ஒருத்தருக்கு மட்டும் தான் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப் போகும் எண்ணம் வருது. அந்த நேரத்துல அவங்க ரெண்டு பேர் மனநிலை எப்படி இருக்கும்? அதை அவங்க எப்படி எதிர்கொள்ளறாங்க? என்பதை தான் நான் இங்க பதிவு செஞ்சிருக்கேன்.

/ஆனால் காதல் பண்ண பயம்.. இதுக்கு காதல ஏன் குற்றம் சொல்லணும்? /
இதை ரெண்டையும் நான் ஒத்துக்கமாட்டேன். இந்த கதையின் படி அந்த பெண்ணுக்கு காதல் செய்ய பயமும் இல்லை, அதே மாதிரி காதலை குற்றமாகவும் சொல்லல, அப்டி நினைச்சுருந்தா மீண்டும் அந்த நட்பு தொடர்ந்திருக்காது :)

/அதுக்கு காதல நட்புக்கு கீழ தள்ளி சாக்கு சொல்றத ஒத்துக்க முடியாது!/
அப்டி நான் எங்கேயும் குறிப்பிடவேயில்ல ட்ரீம்ஸ் :)

வேதா said...

@கோபிநாத்,
நன்றி நன்றி :) ரொம்ப யோசிச்சு தான் இந்த பதிவை நான் போட வேண்டியதாயிடுச்சு, ஏதோ ஓரளவு நல்லா வந்திருக்குன்னு உங்க விமர்சனத்திலிருந்து தெரியுது :)

/ஆஹா...இன்னொரு விஷயமா!? அதுக்கு முன்னாடி தெரிஞ்சிக்க வாய்ப்பு இல்லையா!? ;)/
ஆஹா ரொம்ப அதிகமா பில்டப் கொடுத்துட்டேன்னு நினைக்கறேன்,ரொம்ப எதிர்ப்பார்க்காதீங்க கடைசியில இதுக்கு தான் இவ்ளோ வெளம்பரமான்னு திட்டப்போறீங்க :)

ambi said...

நல்லா, நடந்த கதையை சொல்றீங்க.(உடறீங்க!னு சொல்ல கூடாது ஜி3 அக்கா) :)))

இங்கு 'நடந்த' என்பது இருவரும் சேர்ந்து நடந்ததையே குறிக்கும். :p

G3 said...

//உடறீங்க!னு சொல்ல கூடாது ஜி3 அக்கா)//

தவறை திருத்திக்கொள்கிறேன் அம்பி :)

//இங்கு 'நடந்த' என்பது இருவரும் சேர்ந்து நடந்ததையே குறிக்கும். :p//

:D (இத விட பெரிய ஸ்மைலி ஏதாவது இருந்தா இங்க போட்டுக்கோங்க :))

சான்ஸே இல்லாத கமெண்ட் அம்பியோடது. இந்த ஆண்டின் சூப்பர் கமெண்ட் விருது இந்த கமெண்ட்டுக்குத்தான் :D

Priya said...

Hi Veda!!
I was reading some of your posts and I happened to see your thirupaavai. That reminded me of my trial to learn thirupaavai earlier and how I stopped after 2-3 songs..

Then I decided to write this post..
I should have told and thanked abt it earlier..
I am sorry abt that!!
Thank you for the motivation
and btw, I really loved many of your posts !!

நாகை சிவா said...

ம்ம்ம்.. சில மாற்று கருத்துக்கள் வருது.. ஆனா சொல்வதற்கு இல்லை.. என்னிக்காத மாட்டும் போது மொக்கை போடுறேன்...

ரசிகன் said...

இன்னிக்கு திங்க கெழமைங்கோ..
நினைவிலிருக்கா?..

Divya said...

அழகான எழுத்து நடை,

\\என் நிலைக்கு எதிரான உன் நிலையை. உன் அதரங்கள் அசையாமலே உன் நிலையை உணர்ந்தேன் நான் ஏந்தி நின்ற உன் கரங்கள் வழி\\

ரசித்தேன் இந்த வரிகளை!

வேதா said...

நன்றி திவ்யா ட்ரீம்ஸ் பதிலிருந்து இங்க வந்திருப்பீங்கன்னு நினைக்கறேன். அங்க உங்களோட கருத்துக்களை படிச்சேன் நல்லா இருந்தது :)