Friday, November 30, 2007

எங்கே புத்தன்?...

பகவான் புத்தரைத் தரிசித்து விட வேண்டும் என்ற வெறியுடன் வீட்டை விட்டுப் புறப்பட்டான் ஒரு இளைஞன். அவன் எங்குப் போனாலும் புத்தர் அங்கிருந்து கொஞ்சம் முன்பாகத்தான் புறப்பட்டுப் போனார் என்று ஒரே பதில் கிடைத்தது. அவன் முகம் துவண்டு போனது. வழியில் தாம் சந்தித்த மற்றொரு மூத்த புத்த சந்யாசியிடம் பகவான் புத்தரைத் தரிசிக்காமலேயே தம் வாழ்வு முடிந்து விடுமோ என்று கதறினான்.

முதிர்ந்த அந்த சந்யாசி அன்புடன் அவனது கரங்களைப் பற்றி ஆறுதல் கூறினார், "வருத்தப்படாதே மகனே.. உன் வீடு திரும்பு.. நீ புத்தரைத் தரிசிக்கும் பாக்யம் உள்ளவன் என்றால் எப்படியும் தரிசிப்பாய். புத்தர் கருணையானவர்" என்றார்.

அவனோ, "ஐயா.. நான் முன்பின்னாகப் புத்தரைப் பார்த்ததே இல்லை. வழியில் எங்காவது திடீர் என்று புத்தரைக் காண நேர்ந்தால் நான் எப்படி அடையாளம் கண்டுக்கொள்வேன். தவறவிட்டு விடக் கூடாதே" என்று அழுதான்.

"மகனே! வழி முழுவதும் சந்திப்பவர்களின் கால்களை உற்றுநோக்கியபடி போ... யார் தமது வலது கால் செருப்பை இடது காலிலும் இடதுகால் செருப்பை வலது காலிலும் அணிந்திருக்கிறாரோ அவரே புத்தர்.. அந்தத் திருவடிகளைச் சரணம் என்று இறுகப் பற்றிக்கொள்" என்று கூறினார்.

வழி முழுவதும் அவ்வாறு பார்த்தபடியே ஊர் திரும்பினான். ஒருவர் கூட அவ்வாறு காட்சியளிக்கவில்லை. தனக்கு நல்லருள் கிடைக்கவில்லையே என்று வருந்தியபடி தன் வீடு வந்து கதவைத் தட்டினான். அவனது அழைப்பொலியைக் கேட்டதும்,, அடிவயிற்றில் பிள்ளை உதைத்த போது உணர்ந்த ஆனந்த உணர்வுடன் தன்னை தனியே தவிக்க விட்டுச் சென்ற பிள்ளையை காண அவன் வயது முதிர்ந்த தாய் ஓடோடி வந்து கதவை திறந்தாள்.

இனி புத்தரை காண முடியாது என்று தன் சகல நம்பிக்கையையும் இழந்திருந்த மகன், கதவைத் திறந்த தன் தாயின் கால்களைப் பழக்கதோஷத்தால் கவனித்தான். என்ன ஆச்சரியம்? அவள் வலதுகால் செருப்பு இடது காலிலும், இடது கால் செருப்பு வலது காலிலும் இருந்தது. மகனை பார்த்த மகிழ்ச்சியில் செருப்பை மாற்றி அணிந்து வந்திருந்தார் அந்த தாய்.

மகனுக்கு மூத்த சந்யாசியின் சொல் நினைவில் மின்னியது. மெலிந்து மூத்து பாசத்தால் நடுங்கும் தாயின் மெல்லிய பாதங்களைக் கட்டிக்கொண்டு, 'பகவானே' என அழத் தொடங்கினான். புத்தரை விடவும் கருணையானவர் தாயாக மட்டும் தானே இருக்க முடியும்!

நன்றி : இந்த மாத " மங்கையர் மலர் "('பெண்ணே நீ வாழ்க'- சுகி.சிவம்)


தாயின் சிறப்பை பற்றி இவ்வாறு எத்தனையோ கதைகளை நாம் படித்திருக்கிறோம். தாய் தெய்வத்திற்கு சமம், குடும்பத்தை தாங்குபவள் தாய் என்று பல பட்டங்களை நம் தாயின் மீது சுமத்தும் நாம் கூடவே சுமையையும் தானே சுமத்துகிறோம். ஒரு உயிரை உலகுக்கு தருபவள் தாய் என்பதால் இயல்பிலேயே ஒரு பெண்ணிற்கான சில குணங்களாக இவை அமைவதுண்டு. இதையும் தாண்டி நம் தாயும் ஒரு சக மனுஷி அவருக்கும் விருப்பு வெறுப்பு எல்லாம் உண்டு என்பதை நாம் பல சமயங்களில் மறந்து விடுகிறோம்.


சில நேரங்களில் நான் என் அம்மாவோடு பேசும்போது தான் அவருக்குள்ளே இருக்கும் திறமைகள், அவருடைய மறைத்து வைக்கப்பட்ட சில கனவுகள் எல்லாம் தெரிய வரும். இது பெரும்பாலான குடும்பங்களில் நடப்பதுண்டு. ஆண்களும் குடும்பத்தலைவன் என்ற முறையில் பல தியாகங்கள் செய்வதுண்டு அதை மறுப்பதிற்கில்லை, ஆனா பெண் மீது சுமத்தப்படும் தியாகி, குலவிளக்கு போன்ற சமூக கட்டுபாடுகள் ஆண்களை விட அதிகமாக உள்ளன.

எந்த நேரத்திலும் எந்த நெருக்கடியிலும் எந்த விதத்திலும் நம்மை ஏற்றுக்கொள்பவள் தாய் தான். இதை நமக்கு அனுகூலமாக்கி கொள்ள நாம தவறாத நேரத்தில் அவர்களுடைய விருப்பு,வெறுப்புகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். தெய்வமாய் வணங்குதலோடு கொஞ்சம் தோழமையும் காட்டுவோம். இதே கருத்தை நம்ம வலையுலக நண்பர் ரவி முன்பே எழுதிய இந்த பதிவில ரொம்ப எளிமையா சொல்லியிருக்கார் பாருங்க :)

25 comments:

நாகை சிவா said...

ஒத்துக்குறேன் நீங்க சொன்னதை ஒத்துக்குறேன்.

அப்புறம் மீட் பண்ணுவோம்

ambi said...

அருமையான கதை. நெகிழ செய்து விட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி ஹை. :)

ambi said...

என்ன நீங்களும் கரக்ட்டா வெள்ளி கிழமை பதிவு போடறீங்க? என்ன மேட்டர்? :p

கீதா சாம்பசிவம் said...

என்ன இரண்டு பதிவா ஒரே "அம்மா செண்டிமெண்ட்?" ம்ம்ம்ம்ம்?? ஆனாலும் பதிவு நல்லா இருக்கு, நானும் படிச்சேன், மங்கையர் மலரில், கல்கியில் இல்லை!!! :D

வேதா said...

சிவா,
இப்ப தான் உங்க பதிவுக்கு கமெண்ட் போட்டேன் அதுக்குள்ள இங்க வந்துட்டீங்களா? :)
நீங்க ஒத்துக்கறேன்னு சொல்லும் போதே சந்தேகமா தான் இருக்கு :D

@அம்பி,
யோவ் நாரதரே தேவையில்லாம எரிச்சலை கெளப்பாதீங்க சொல்டேன் :D
இந்த வாரம் தான் வெள்ளிக்கிழமை பதிவு போட்டேன் திங்கட்கிழமை போடறதெல்லாம் உம்ம கண்ணுல படாதே :)

வேதா said...

கீதா,
ஹிஹி ஏதோ தூக்க கலக்கத்துல மாத்தி போட்டுட்டேன் :D

/என்ன இரண்டு பதிவா ஒரே "அம்மா செண்டிமெண்ட்?" /
அந்த கதைய படிச்சவுடன போடனும்னு தோணிச்சு அவ்ளோ தான் :)

நாகை சிவா said...

நான் ஏது சொன்னாலும் சந்தேகப்படுவதே வேலையா போச்சு... :((((

நாகை சிவா said...

தேன்கிண்ணத்தில் இன்று இடம் பெற்ற பாடலில் ஒன்று. எனக்கு இந்த மிகவும் பிடிக்கும். அதை கேட்ட பிறகாவது நம்புவீங்களா...

பாடல் கேட்க இங்கு செல்லவும்

வேதா said...

@சிவா,
என்ன பண்றது எல்லாம் சகவாச தோஷம் :D அந்த பாட்டை கேட்டேன் எனக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு. சரி இதை கேட்டு நான் எத நம்பணும்? :D

ambi said...

//திங்கட்கிழமை போடறதெல்லாம் உம்ம கண்ணுல படாதே//

ஓ! திங்க கிழமை வேறயா? நடக்கட்டும், நடக்கட்டும். :p

G3 said...

karuthu ok.. aana oru technical doubt irukku kadhaila.. adha naan appuram offlinelae kettukaren :)

கோபிநாத் said...

அழகான அம்மா கதை ;))

\\சில நேரங்களில் நான் என் அம்மாவோடு பேசும்போது தான் அவருக்குள்ளே இருக்கும் திறமைகள், அவருடைய மறைத்து வைக்கப்பட்ட சில கனவுகள் எல்லாம் தெரிய வரும்.\\

அவுங்களுக்குள்ள மறைத்து வச்சிருந்த விஷயங்களை பிள்ளைகள் கூட பகிர்ந்து கொள்ளும் போது அந்த முகங்களை பார்க்க வேண்டுமே...அட அட அவ்வளவு சந்தோஷமாகவும், அழகாகவும் இருக்கும் ;))

\\எந்த நேரத்திலும் எந்த நெருக்கடியிலும் எந்த விதத்திலும் நம்மை ஏற்றுக்கொள்பவள் தாய் தான்.\\

ரொம்ப சரியாக சொல்லியிருக்கிங்க...உண்மையிலும் உண்மை ;)

கோபிநாத் said...

\\G3 said...
karuthu ok.. aana oru technical doubt irukku kadhaila.. adha naan appuram offlinelae kettukaren :)\\

வீட்டுல எப்படி செருப்பு போடுவாங்கன்னு தானே?

வேதா said...

@அம்பி,
அடங்கமாட்டீங்களே ;D

@காயத்ரி,
நீ சொல்றது கோபி கேட்டுருக்கற சந்தேகம் தான? எனக்கும் சந்தேகம் வந்தது, கதை நடந்த இடம் நமக்கு தெரியாது, ஒரு வேளை அப்படி ஒரு பழக்கம் அங்கே இருந்திருக்கலாம், இல்லையென்றால் ஒரு உதாரணத்திற்கு அதாவது தாயை புறக்கணித்து வேறு தெய்வத்தை நாடினால் அது சரியில்லை என்று சொல்வதற்கு ஏற்பட்ட ஒரு கதையாக இருக்கலாம், நமக்கு அதுவா முக்கியம்? கருத்து தான முக்கியம் அதான் அந்த சந்தேகத்தை ஒதுக்கிட்டேன் :)

ரசிகன் said...

// ஆண்களும் குடும்பத்தலைவன் என்ற முறையில் பல தியாகங்கள் செய்வதுண்டு அதை மறுப்பதிற்கில்லை, ஆனா பெண் மீது சுமத்தப்படும் தியாகி, குலவிளக்கு போன்ற சமூக கட்டுபாடுகள் ஆண்களை விட அதிகமாக உள்ளன.

எந்த நேரத்திலும் எந்த நெருக்கடியிலும் எந்த விதத்திலும் நம்மை ஏற்றுக்கொள்பவள் தாய் தான்.//

இதை நான் முழுமையா ஆதரிக்கிறேனுங்க...பல பேருக்கு காலம் கடந்துதான் இது புரியுது..

ரசிகன் said...

\\G3 said...
karuthu ok.. aana oru technical doubt irukku kadhaila.. adha naan appuram offlinelae kettukaren :)\\

வீட்டுல எப்படி செருப்பு போடுவாங்கன்னு தானே?//

ஹா..ஹா...

Compassion Unlimitted said...

Indha amma sentiment potte maamiyaar marumagal sandai valargiradhu..aan pillai enna seyyvaan ..paavam
TC
CU

Dreamzz said...

naanum othukiren! obviously women are more adjusting and make more sacrifices... :)

Arunkumar said...

sentiment balamma irukke.. aana unmayo unmai unga karuthu !!!

@ambi
every friday padhivu podravanga ellam ambi aagida mudiyuma?

தி. ரா. ச.(T.R.C.) said...

மறு ஒலிபரப்பு நல்லாவே இருக்கு வேதா.
@G3 நமக்கு எதுக்கு ஆன்லைன் எல்லாம் ஹோட்டல்லே மீட் பன்னுவோமேஅப்ப கேட்டுக்கலாம்

கீதா சாம்பசிவம் said...

அது என்ன "உஷா'ங்கிற பேரிலே இருக்கிற பதிவு, அழைப்பு உள்ளவங்களுக்குத் தான் என்று பதில் வருதே? அப்படி என்ன ரகசியமா எழுதி இருக்கீங்க அந்தப் பதிவுகளிலே? :D

மதுரையம்பதி said...

இப்போதான் படிக்க முடிந்தது.....

Ravi said...

Hi Veda,
In similar lines, there was a movie on Buddha named "Samsara", where the film is depicted from the angle of Buddha's wife - Yasodhara. The sacrifice and pain of this woman is hardly spoken about. Jo has also written about this in his blog at : http://jocalling.blogspot.com/2006/12/samsara-fighting-self.html

Appuram, romba nandri andha velambarathukku :) Engada, Rameswaram, appuram sila posts pottum en post-la comment-e (Diwali vaazhthu thavira) kanomenu vandhen. Vandhu paartha innoru post, kadaisila oru surprise vera. Thanks Veda.

Compassion Unlimitted said...

Appadi kelunga கீதா சாம்பசிவம்..!!
athukkule poga mudiyaliye..enna ragasiyam solluma vedha.
TC
CU

My days(Gops) said...

aah ah "amma"va pathi post...

nalla irundhadhu veda :)