Wednesday, December 26, 2007

போட்டிக்கு அனுப்பாத கவிதை..

நண்பர்களே ஒரு வாரமாகவே என்னுடைய கணினியில் இணையத் தொடர்பில் ஒரே பனிமூட்டம், எப்ப தொடர்பு வரும் எப்ப போகும்னே தெரியலை :) தலைவி ஊருக்கு போகும் போது அவங்க இணைய ராசியை எனக்கு கொடுத்துட்டு போயிட்டாங்க போல, அதனால இந்த வருடத்தின் கடைசி பதிவா இந்த மொக்கை பதிவு :)

சிறில் அலெக்ஸின் கவிதைப் போட்டிக்கு நான் எழுதிய கவிதை என் கவிதைப் பக்கத்தில் உள்ளது, அதே தலைப்பிற்கு நான் இன்னொரு கவிதையும் எழுதினேன் அதை இங்கே கொடுத்திருக்கிறேன். ஏற்கனவே நிறைய ஆட்டோக்கள் படையெடுத்து வருவதால் எங்க வீட்டு கிட்ட ஒரே ட்ராபிக் ஜாம், அதனால நான் கொஞ்ச நாளைக்கு எஸ்கேப். அனைவரையும் அடுத்த வருடம் மீண்டும் சந்திக்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)



பூக்களில் உறங்கும் மெளனங்கள் :




வேரோடு பிடுங்கிய
வலியின் சுவடு தெரியாமல்
பூக்கத் தொடங்குகின்றன
சில செடிகள்..

மாற்றம் மண்ணில் தானே
மனதில் இல்லையென
புன்னகையாய் மலருகின்றன
சில மொட்டுக்கள்..

அங்கு தழுவிய தென்றல்
இங்கேயும் தான்
என சுகிக்கின்றன
சில இலைகள்..

எனினும் ஆசையாய் தடவிப் பார்த்து
சிலாகிக்க உன் விரல்கள் இல்லாமல்
ஏக்கத்தோடு
பூக்களில் உறங்கும் மெளனங்கள்..

சர்வேசனின் சிறுகதை போட்டிக்கான வாக்கெடுப்பும் ஆரம்பாகிவிட்டது, எல்லா கதைகளையும் படித்துப் பார்த்து வாக்களிக்கவும் :)

15 comments:

ரசிகன் said...

// சர்வேசனின் சிறுகதை போட்டிக்கான வாக்கெடுப்பும் ஆரம்பாகிவிட்டது,//
ஓக்கே..
// எல்லா கதைகளையும் படித்துப் பார்த்து வாக்களிக்கவும் :)//
எதுக்குங்க.. இந்த சொ.கா.சூவெல்லாம்.. :))

ரசிகன் said...

// எனினும் ஆசையாய் தடவிப் பார்த்து
சிலாகிக்க உன் விரல்கள் இல்லாமல்
ஏக்கத்தோடு
பூக்களில் உறங்கும் மெளனங்கள்..//

ரொம்பவே ரசிச்சேனுங்க வேதா இந்த வரிகளை.. சூப்பர்..
இந்த கவிதையும் அருமையாதான் இருக்கு..

ரசிகன் said...

// அடுத்த வருடம் மீண்டும் சந்திக்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)//

வேதாவுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Dreamzz said...

Wow! superu kavidhai idhu!

Dreamzz said...

//மாற்றம் மண்ணில் தானே
மனதில் இல்லையென
புன்னகையாய் மலருகின்றன
சில மொட்டுக்கள்..//
adada... adada... superu

G3 said...

//"போட்டிக்கு அனுப்பாத கவிதை.."//

Othukkaren.. Ungalukku aduthavangalum jayikkattumngara nalal manasu irukkungaradha othukkaren :))

Kavitha super.. mothal vaati padichappavae enakku purinjiduchey :D

//மாற்றம் மண்ணில் தானே
மனதில் இல்லையென
புன்னகையாய் மலருகின்றன
சில மொட்டுக்கள்..//

Idhu super :D

ambi said...

// எனினும் ஆசையாய் தடவிப் பார்த்து
சிலாகிக்க உன் விரல்கள் இல்லாமல்
ஏக்கத்தோடு
பூக்களில் உறங்கும் மெளனங்கள்..//

இதனால் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து..? :p

கதையேல்லாம் படித்து பார்த்து யாருக்கு வாக்களிக்கனும்? :))

Compassion Unlimitted said...

//ஏக்கத்தோடு
பூக்களில் உறங்கும் மெளனங்கள்//
Rasittha varigal..Sila murai andha mounam kooda pesume !!

Wish You A very Happy New Year

TC
CU

கோபிநாத் said...

கவிதை நல்லாயிருக்கு...


புத்தாண்டு வாழ்த்துக்கள் ;)

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹி, ரசிகனின் கலக்கலில் சொல்லி இருப்பது மாதிரியே இருக்கே கவிதையும்? :P

கவிதை நல்லாவே இருக்கு, அங்கேயும் போய்ப் பார்க்கிறேன்.

Ravi said...

Hello Veda,
Happy New Year 2008 to you and your family.

ரசிகன் said...

// ஒரு வாரமாகவே என்னுடைய கணினியில் இணையத் தொடர்பில் ஒரே பனிமூட்டம், எப்ப தொடர்பு வரும் எப்ப போகும்னே தெரியலை :)அதனால இந்த வருடத்தின் கடைசி பதிவா இந்த மொக்கை பதிவு :) //

நம்பிட்டோம்ல்ல... :P

அதான் உண்மையான காரணத்தை சொல்லிட்டிங்களே...

//ஏற்கனவே நிறைய ஆட்டோக்கள் படையெடுத்து வருவதால்//

ரசிகன் said...

எல்லா மகிழ்ச்சிகளையும் இப்புத்தாண்டு உங்களுக்கு அள்ளித்தர வாழ்த்துகிறோம்..

WISH YOU&YOUR FAMILY "HAPPY NEW YEAR "...

Sumathi. said...

ஹாய் வேதா,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா வளமும் நலமும் பல்கிபெருக எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ராம்குமார் - அமுதன் said...

அருமையான கவிதை!!! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகக்கள்....