Monday, August 04, 2008

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னுடைய எனக்கேயான ஒரு தளத்தில் அடிவைக்கிறேன். அதற்குள் இங்கே பல மாற்றங்கள். இன்று எப்படியும் எழுத வேண்டும் என்று பல நாட்களாக நினைத்ததோடு சரி செயல்படுத்த முடியவில்லை.எனக்கு நேரமே இல்லை என்று பொய் சொல்லவும் முடியவில்லை. அப்படி சொன்னால் முதலில் மறுப்பு தெரிவிக்கும் ஜீவன் என் மறுபாதியாக தான் இருக்கும். நேரமின்மை என்ற வார்த்தையை ஒத்துக் கொள்ளவே மாட்டார். எழுதணும் என்று நினைக்கிறேன் ஆனால் நேரமில்லை என்று சொன்னால்,அது உன்னுடைய தவறு நேரத்தின் தவறு இல்லை என்று ஒரு பெரிய கதாகாலட்சேபமே நடக்கும். சரி நம்ம மக்கள் எல்லாரும் மறந்து போகாமல் இருக்கணும்னு என்னுடைய கவிதை பக்கத்தில் புதிதாக எழுதியுள்ளேன். என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியவர்கள், மடலில் வாழ்த்தியவர்கள், மனத்தால் வாழ்த்தியவர்கள், தொலைபேசியவர்கள் அனைவருக்கும் என் நன்றி. இனி எப்பொழுதும் போல் இங்கு தொடர்ந்து சந்திப்போம். இன்று ஆடிபுரத் திருநாள் , சூடி கொடுத்த சுடர்கொடியின் தாள் வணங்கி மீண்டும் இங்கு எழுத தொடங்குகிறேன் :)

Saturday, May 10, 2008

மீண்டும் சந்திப்போம்.. :)

விடைபெறும் நேரம் வந்துவிட்டது, தனிமையின் கரங்களில் இருந்து மெல்ல விடுபட்டு துணை சேரும் அந்த நொடிகளின் இடைவெளி அருகி கொண்டே வருகிறது.. தனிமையெனும் மொட்டவிழ்ந்து துணையோடு மணம் வீசும் அழகிய இல்லற தோட்டத்தில் அடியெடுத்து வைக்க போகிறேன் உங்கள் அனைவரின் ஆசியோடும்,வாழ்த்துக்களோடும். சுகந்தம் வீசும் வாழ்வில் நுழைய போகும் தருணத்தில் தவிர்க்கமுடியாததாய் பிரிவின் வருத்தமும் அடிமனதில் இழையோடி வரும் இந்நேரத்தில் நான் முன்பே எழுதிய இக்கவிதையை இங்கே பதிவிடுகிறேன். இக்கவிதை என் அம்மாவிற்காக..


இடியைத் தோற்கடிக்கும் வலியைக் கொடுத்து,
நிலத்தில் வீழ்ந்த என் பிஞ்சு விரல்களின் ஈரம் தொட்டு,
உன் வலிகளைத் துடைத்துக் கொண்டாய்.

அடி மேல் அடி வைத்து நடை நான் பழக,
தவறிய அடிகளுக்கு வலி நீ சுமந்தாய்.
பாடம் கேட்க பள்ளி நான் செல்ல,
இங்கு உழைத்து கரைந்தாய் நீ மெழுகாய்.
காலஓட்டத்தில் காதலுற்று நான் தவிக்க,
கசிந்துருகி மேன்வழி நீ காட்டினாய்.

தாயாகி நீ செய்தவைக்கு நான் என் செய்ய?
என்று நான் வினவ,
நீ புன்னகையுடன் பட்டியலிட்டாய்
எனக்கு செய்ய முடியாதவைகள் எவை என்று.

உன் அன்பில் நான் திகைக்க,
பதில் கிடைத்தது என் வினாவிற்கு.

அழியா ஆகாயம் போல்,
அழியா அன்பை வாரித் தெளித்த நீ சொன்னாய்,
"அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,
பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்


பி.கு: மீண்டும் சந்திப்போம் :)

Monday, February 11, 2008

சுத்தத்தமிழும் கல்யாண சாப்பாடும் ஒரு பயோடேட்டாவும் (செம மொக்கை:))

என்னுடைய முந்திய பதிவுல நண்பர் ஒருத்தர் கேள்வி கேட்டிருந்தார் இப்டி சுத்த தமிழ்ல (அதாவது அவருக்கு என் பதிவுகள் படித்தது வாழ்த்துகள் படம் பார்த்த மாதிரி இருந்ததாம்:)) எழுதறதால என்ன பயன்? நல்ல கேள்வி தான். இப்ப இருக்கற காலக்கட்டத்துல ஆங்கில கலப்பில்லாம பேசறது அப்டிங்கறது அரிதாகி வருது, அதுவும் நாம சாதாரணமா பேசினாலே ஆங்கிலம் கலந்து தான் வருது, அப்டி இருக்கும் போது குறைந்தபட்சம் இங்கு ஆங்கில கலப்பில்லாமல் எழுத முயற்சிப்பதில் எனக்கு ஒரு தன்னிறைவு அவ்வளவு தான் :)

நாம தினமும் வீட்டுல பேசும் போது எப்போவெல்லாம் முழுக்க ஆங்கிலத்தில் பேசறோம்னு யோசிக்கறதுண்டு, நமக்கே தெரியாம பழக்க தோஷத்துல விழற சில ஆங்கில வார்த்தைகள், அலுவலக விஷயமாக ஏதாவது அழைப்பு வந்தால் அப்பொழுது பேசும் போது(என் தம்பி இல்லாத நேரங்களில் அவன் அலுவல் சம்பந்தமா வர்ர அழைப்புகளை ஏற்கும் போது ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கும்) சில சமயங்களில் முக்கியமா ஏதாவது ரொம்ப தீவிரமான ஒரு விஷயத்தை பத்தி தொலைப்பேசியில் பேசும் போது நான் ஆங்கிலம் பயன்படுத்துவதுண்டு, அதற்கு காரணம் நான் இருக்கற சூழ்நிலை அப்டி. சென்னையில அடுக்குமாடி கட்டிடங்கள் என்றாலே பெரும்பாலும் அடுத்த வீட்டுக்காரன் இருக்கானா செத்தானா அப்டின்னு கூட கவலைப்படாத ஒரு கூட்டம் இருக்கற இடம்.

ஆனா நாங்க இருக்கற இடம் இருக்கே அதுக்கு பேரு தான் ப்ளாட்ஸ் ஆனா அது ஒரு ஒண்டுக்குடித்தனம் மாதிரி. எல்லார் வீட்டுக்கதவும் திறந்து தான் கிடக்கும் அவ்ளோ நம்பிக்கை :) பக்கத்து வீட்டுல, எதிர் வீட்டுல நடக்குற எல்லா விசயங்களும் நாம விரும்பலேன்னா கூட நம்ம வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்துக்கும். இந்த மாதிரி இடத்துல போன் பேசறது இருக்கு பாருங்க அது ரொம்ப கொடுமை. நான் ரொம்ப முக்கியமான விசயம் பேசும் போது தான் யாராவது ஒரு புண்ணியவான்/வதி வந்து கொஞ்சம் பேப்பர் கொடேன், காப்பி பொடி கொடேன், அவள் விகடன் இருக்கா? இப்டி கேட்டுக்கிட்டே நம்ம பக்கத்துல வந்து நிப்பாங்க.

அப்ப 'ஓகே ஓகே, நோ ப்ராப்ளம், ஐ வில் கால் யூ லேட்டர்' இப்டி சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கும்,(அப்ப ஆங்கிலத்துல பேசினா மட்டும் புரியாதான்னு கேட்கறவங்களுக்கு சொல்லிக்கறேன் அதெல்லாம் யாரு என்னன்னு பார்த்து தான பேசுவோம் ஹிஹி:)) அது பெரிய கடுப்பா இருக்கும், நாமளே ஒரு ப்ளோல பேசிக்கிட்டு இருக்கும் போது இப்டி வந்து இடம்,பொருள் புரிஞ்சுக்காம பேசறவங்கள பார்த்தா அப்டியே கோபமா வரும். திட்டவும் முடியாது(ஏன்னா நாளைக்கே ரெண்டு ஸ்பூன் காப்பி பொடிக்கோ, சாம்பார் பொடிக்கோ நாம் போய் நிக்க வேண்டியிருக்கும் :))

அந்த சமயத்துல எழுந்தும் போக முடியாது, சந்தேகம் வந்துரும் என்னடா இவ சரியா நாம வந்த நேரம் பார்த்து எழுந்து போறான்னு யோசிப்பாங்க. சில பேரு தான் நாம சொல்றத புரிஞ்சுக்கிட்டு நாசூக்கா ஒதுங்கிடுவாங்க. சரி இப்ப இதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கறீங்களா? ஒண்ணுமே இல்ல நான் ஏதோ சொல்ல வந்து வேற தலைப்புல எழுதிட்டேன் போலிருக்கு :) அதனால இதனால என்ன சொல்ல வரேனா நாம தினமும் ஆங்கில கலப்போட பேசறது அவசர அவசரமா சாப்பிடறா பாஸ்ட் புட் மாதிரி, இப்டி சில சமயங்களில் இங்கு முடிந்த வரை ஆங்கில கலப்பில்லாம எழுதறது அப்டிங்கறது கல்யாண சாப்பாடு மாதிரி :)

இப்டி தான் பயோடேட்டா என்பதின் தமிழ் வார்த்தை என்னவாக இருக்கும்னு யோசிக்கிட்டு இருந்தேன், அறிமுகம் சரியா இருக்குமான்னு தெரியல, சரி இப்ப எதுக்கு இந்த ஆராய்ச்சி என்றால் நம்ம யூனியன் மக்களின் பிரதாபங்களையெல்லாம் ஒரு குமுதம் பாணி பயோடேட்டா மாதிரி போடலாம்னு ஒரு எண்ணம், நினைச்சுட்டோம் சரி முடிச்சிடலாம்னு யாரை முதல்ல அறிமுகப்படுத்தலாம்னு யோசிக்கவே இல்ல நமக்கே தெரியுமே அது நம்ம தலைவி தான்னு :)

சரி இப்ப அறிமுகம்

பெயர் : சங்கத்தின் தனிப்பெரும் தலைவி(வலி), தானே உதித்த தானைத் தலை(வலி), மொ.ப.கீதா(இதுக்கெல்லாம் அர்த்தம் தரப்படாது :)), தமிழ் டீச்சர்

வயது : என்னது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நிரந்தர தொழில் : முழு காலமும் எவ்வித பிரச்னை வந்தாலும் விடாமல் மொக்கை போட்டு மன்னிக்கவும் பதிவுகள் போட்டு அனைவரையும் மகிழ்விப்பது :)

உபதொழில் : ப்ளாக்கிடுவது, பல தரப்பட்ட குழுமங்களில் எழுதுவது போன்ற சில முக்கிய வேலைகள் முடிந்த பின் எங்கேயாவது பயணம் புறப்படுவது(அதையும் வந்து விடாம பதிவுகளா போட்டு தள்ளுவாங்க என்னே உங்க தொண்டுள்ளம்:))

திடீர் தொழில் : டாடா இண்டிகாமுடன் போராடி போராடி அலுத்துப்போய் தானே ஒரு அகல்கற்றை சேவை அதாங்க பிராட்பேண்ட் ஆரம்பிக்கலாம்னு ஒரு எண்ணம் :)

நண்பர்கள் : அவங்க வயதை குறிப்பிடாத எவரும் :)

எதிரிகள் : வேற யாரு? டாடா இண்டிகாம் தான் :)

பிடித்த பொருள் : அம்பிக்கு பிடிக்காத எதுவும் :)

பிடிக்காத பொருள் : அம்பிக்கு பிடித்த எதுவும் :)

ஒரே பொழுதுபோக்கு : அம்பிக்கு ஆப்பு வைப்பது எப்படி? கண்ணாடி உடைந்து போகாத அளவுக்கு தமிழில் எப்படி எழுத்துப்பிழையில்லாமல் எழுதுவது என்று ட்யூஷன் எடுப்பது :):)

யப்பா ஒரே பதிவுல இவ்ளோ மொக்கையா என்று யோசிக்கறீங்களா? உண்மையில வேற ஒரு விஷயத்தை பத்தி தான் எழுதலாம்னு வந்தேன் ஆனா யோசிக்க அவகாசமே இல்ல. எப்பவும் டிசம்பர் மாசம் வந்தாலே எங்க வீட்டுல என் பாட்டி மூலமா ஏதாவது பிரச்னை வரும் இந்த தடவை ஒன்னும் ஆகலியேன்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டோம் அதுக்கு வந்தது தாமதமா ஒரு ரிவர்ஸ் ஆப்பு :) முதல்ல என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சு அப்புறம் எனக்கு, என் தம்பிக்கு,அப்பாவுக்கு, எங்க வீட்டு கணினி இப்டி வரிசையா வந்து பாட்டிக்கு வந்துடுச்சு, அதனால கொஞ்சம் மருத்துவமனை,வீடுன்னு பிஸி. அப்பப்ப வந்து இப்டி எட்டிப்பார்க்கறேன், இந்த பதிவு கூட முன்னால எழுதி வச்சது தான் :) சரி வரேன் இனிமே போய் எல்லார் பதிவுகளுக்கும் ஒரு வருகை பதிவு செய்யனும் அப்புறம் பார்க்கலாம் :)

Monday, February 04, 2008

எனக்கு பிடிச்சது..

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடுச்சாம், அது மாதிரி நம்ம கணினி தான் படுத்துக்கிச்சு நம்ம அண்ணன் இருக்கும் போது என்ன கவலைன்னு பார்த்தா என் ராசி போலிருக்கு அவரோடது டாடா இண்டிகாம் கனெக்ஷன் அதுலேயும் வச்சாங்க ஆப்பு(டாடா இண்டிகாம் பத்தி சொல்லவே வேணாம் அந்த மகிமையை பத்தி தான் நம்ம தலைவி நிறைய எழுதிட்டாங்களே :)

நாம தான் எதுவும் எழுத முடியல நம்ம நண்பர்கள் எழுதறதையெல்லாம் படிக்கலாம்னு ஒரு திருப்தி இருந்தது. எழுதலியே தவிர எல்லா வலைப்பக்கங்களையும் படிச்சுட்டு தான் இருந்தேன். நல்ல வேளை கடைசில நேத்திலிருந்து எங்க கணினியே சரி பண்ணியாச்சு. அதான் மறுபடியும் அதிரடியா திரும்ப வந்தாச்சு(அடங்க மாட்டோம்ல:))

நம்ம நண்பர் கோபி ஒரு தொடர் ஆட்டத்துக்கு அழைச்சிருந்தார். போன வருடத்தில் நான் எழுதிய பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவை பற்றி குறிப்பிட வேண்டுமாம்.

உண்மைய சொல்லனும்னா நான் போடற எல்லா பதிவுகளையும் எனக்கு பிடித்து தான் நான் போடறேன். விதிவிலக்குகள் உண்டு சில பதிவுகள் படு மொக்கையாக இருக்கும், சிலது தேவையற்ற ப்ரச்னைகளை கிளப்பி விட்டுருக்கும், சிலது ஏண்டா எழுதினோம் என்று தோன்றும் அளவு இருக்கும். இதையெல்லாம் மீறி என் அளவில் சில வகைகளில் பிடித்தவை என்றால்,

1. என் திறமையை ஓரளவு வெளிக்கொணர்ந்து என் பெயரை ஓரளவு வலையுலகில் பரிச்சயமாக்கிய கவிதை போட்டியை பற்றி நான் எழுதிய பதிவு,

அன்புடன்..

2.இது வரை கதைகள் என்ற பெயரில் சில முயற்சிகள் செய்திருந்தாலும் சமீபத்தில் சர்வேசன் நடத்திய கதைப்போட்டிக்கு நான் அனுப்பிய கதை எனக்கு பிடித்த ஒன்று

கலியுக பாஞ்சாலிகள்..

3.நகைச்சுவை என்ற பெயரிலும் வாழ்த்துகிறேன் என்ற பெயரிலும் முடிந்த வரை எல்லாரையும் வம்புக்கிழுத்த பதிவு :)

நலம் வாழ என்றும் என் வாழ்த்துக்கள்..


இதை தவிர என்னுடைய பயணக்கட்டுரைகள் எல்லாமே எனக்கு பிடித்தவை. இப்டி சொல்லிக்கிட்டே இருந்தா எல்லா பதிவுகளையும் சொல்ல வேண்டியிருக்கும் அதனால இதோட நிறுத்திக்கிறேன் :)

உங்களுக்கு ஏதாவது தோணுச்சுன்னா சொல்லிட்டு போங்க :)

Thursday, January 31, 2008

சும்மா......

என்னடா இது ஒரு மாசம் ஆகும்னு சொல்லிட்டு அதுக்குள்ள திரும்பி வந்துட்டான்னு பயப்படாதீங்க :) அப்பப்ப நானும் உயிரோட இருக்கேன்னு நிரூபிக்கணும் இல்ல அதான் சும்மா ஒரு பதிவு. எப்டியும் அடுத்த வாரத்துல என்னோட கணினி சரியாகிடும்னு நினைக்கறேன்(சும்மாவா? என் தம்பிய மிரட்டி வச்சுருக்கேன் மவனே! சீக்கிரம் சரி பண்ணல அடுத்தடுத்து ஏதாவது கவிதை கட்டுரை எழுதி உன்னைய படிக்க வச்சுருவேன்னு, பதிவுலகத்துக்கு தான் ஒரு தொல்லைன்னா வீட்டுல வேற தனியாவான்னு பயந்துட்டான்:)) அதனால இப்போதைக்கு இந்த ஜோக்ஸை(!) படிச்சு சிரிச்சு சந்தோஷமா இருங்க :)

"இந்த உலகத்துல அதிகமான டிகிரி வாங்குன ஆளு யாருன்னு தெரியுமா?
வேற யாரு? சூரியன் தான் நேத்து மட்டும் 108 டிகிரி"சேல்ஸ்மேன் : ஸார் எறும்புக்குப் பவுடர் வாங்கிட்டுப் போங்க
ஸர்தார் : வேண்டாம், இன்னிக்கு எறும்புக்கு பவுடர் வாங்கிட்டுப் போனா, அது நாளைக்கு லிப்ஸ்டிக் கேக்கும்


எப்பவும் இளமையா இருக்கனுமா?
"கரெக்டா தூங்குங்க, நல்ல விஷயங்களைப் படியுங்க. சரியான உணவைச் சாப்பிடுங்க, ஆனால வயதை மட்டும் தப்பா சொல்லுங்க
"

சமீபத்தில் படித்து சிரித்த குறுஞ்செய்தி

computer commands in Tamil

Save - vechiko
save as- aiye apdiye vechiko
save all - allathaiyum vechiko
Find - Thedu
Find Again - inoru thaba thedu
Move - jaga vaangu
Zoom - perisa kaatu
open - Thora naina
Replace - itho thooki appalika potu atha thooki ippadika podu
cut - vetti kadasu
paste - ottu
paste special - nalla echa thottu ottu
Drag & Hold - Nalla isthu pudi
Do u want to delete selected item - Meiyalum thookidava?
Access Denied - Kaiya vecha keesiduven

மீண்டும் அடுத்த வாரத்தில் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் வர்ட்டா? :D

Friday, January 25, 2008

தப்பிச்சுட்டீங்க :)

இப்ப தான ஒரு தொடர் பதிவு போட்டோம் அதுக்குள்ள அடுத்து இன்னொன்று போட சொல்லிட்டார் நம்ம நண்பர் கோபிநாத். சரி இப்டி தெளிய வச்சு அடிக்கறாங்களேன்னு பழைய பதிவுகளை படிக்க போனேன்(பிடிச்ச பதிவு போடனுமாம்)அவ்வ்வ்வ் அதுக்குள்ள திரும்ப இணைய தொடர்பு போயிடுச்சு(ஒரு வேளை நம்ம எழுதினதை நம்மளாலேயே படிக்க முடியலியோ?:))உடனே என் தம்பிய கூப்டு போடறா போனை ஹெல்ப்லைனுக்கு சொன்னா அவன் என் தலைல ஒரு குண்டை போட்டுட்டான். இன்னும் எத்தன நாளைக்கு தான் இணையப் பிரச்னைன்னு ஊரை ஏமாத்துவ? கணினியே தொங்கிடுச்சுன்னு சொல்லிட்டான் :( என்ன கொடுமைங்க இது? இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்டி ஓசில தான் வந்து பதிவுகள் படிக்கனும் போல இருக்கு. அதனால எல்லாம் சரியானப்புறம் வந்து மீண்டும் மொக்கை போடுவேன்னு இந்த பதிவு போல தெரிவிச்சுக்கறேன். நீங்க வந்து அன்பா நாலு வார்த்தை பின்னூட்டம் போட்டாலும் உடனே வெளியிட முடியாது ஹிஹி :):) வர்ட்டா? :)(மீண்டும் வருவேன் அவ்ளோ சீக்கிரத்துல விட்ருவேனா?:)

Thursday, January 17, 2008

மொக்கையும் போடுவோம்ல :)

நண்பர்களே எல்லாரும் எப்டி இருக்கீங்க? பொங்கல் பண்டிகையெல்லாம் நல்லா கொண்டாடியிருப்பீங்க :) தொடர்ந்து கொஞ்சம் சீரியஸா பதிவுகள் போட்டு உங்க எல்லாரையும் ரொம்ப படுத்தி எடுத்துட்டேன்னு நினைக்கறேன் :) அதனால இந்த தடவை கொஞ்சம் மொக்கை(என்னமோ புதுசா மொக்கை போடற மாதிரி சொல்றான்னு நினைச்சுக்காதீங்க) இந்த தடவை கொஞ்சம் அதிகமாவே மொக்கை போட போறேன்னு இதை படிச்சுட்டு உங்களுக்கு ஏதாவது சொல்லனும்(அதாவது கல்லெறியணும்,ஆட்டோ அனுப்பனும் என்று அர்த்தம்:)) அப்டின்னு தோணுச்சுன்னா அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது, ஏன்னா மொக்கை போட சொன்னது நம்ம தன்னிகரில்லா தலைவியிடம் தமிழ் கற்றுக்கொள்ளும் மாணவர் ரசிகன்..

முதல்ல மொக்கை போடறதுன்னா என்னன்னு தெரியல(ஹிஹி ஓகே அதெல்லாம் எப்பவும் சொல்றது தான்). ஏதாவது "லாங் லாங் அகோ ஸோ லாங் அகோ" அப்டின்னு பழைய கதையை ஓட்டலாம்னு பார்த்தா அதை கூட செஞ்சுட்டாங்க நம்ம மக்கள். சரி ஏதாவது புரியாத மாதிரி எழுதலாம்னா அது பின்,முன்,மேல்,கீழ்,இடது,வலது நவீனத்துவம் பட்டியல்ல சேர்ந்துடுமாம்ல. அப்புறம் அதை படிச்சுட்டு நம்ம நண்பர்கள் சும்மாவே இவ எது எழுதினாலும் புரியாது இதுல இது வேறயான்னு யோசிச்சு என்னையும் இலக்கியவாதின்னு அறிவிச்சுட்டா அது ரொம்ப அபாயமாகிடும்(ஹும் நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்).

அதனால அந்த யோசனையும் கைவிடப்பட்டது. என்னடா இது எனக்கு வந்த சோதனை? ஒரு மொக்கை பதிவு எழுத இவ்ளோ யோசனையா? அதுவும் "எல்லா மொக்கையும் மொக்கை அல்ல -பதிவுலகில் நான் போடும் மொக்கையே சிறப்பு." அப்டின்னு ஒரு புது குறளே படைத்த எங்க தனிப்பெரும் தலைவியின் கட்சியில் இருந்துக்கிட்டு இப்டி சொன்னா அது எங்க தலைவிக்கு தான இழுக்கு? என்ன கொடுமை இது? சரி! அனேகமா நான் இவ்ளோ தூரம் எழுதினதே உங்களுக்கு பெரிய மொக்கையா இருந்திருக்கும் ,இதுக்கும் மேல மொக்கை வேணும்னா நான் எழுதின பழைய பதிவுகளில் நான் மொக்கைன்னு நினைக்கறத இங்க திரும்ப கொடுக்கறேன் அதை படிச்சுட்டு நல்லாவே மொக்கைய அனுபவிங்க :) தமிழ்ல எழுதற பதிவே மொக்கையா இருக்கும் போது நான் தங்கிலீஷில் எழுதிய பதிவு இது :)

எனக்கும் என் அண்ணன் மகளுக்கும் நடந்த உலக பிரசித்தி பெற்ற சம்பாஷைனை இது(அப்ப அவளுக்கு 7 வயதிருக்கும் :) )


my niece and i.

n(niece) : athai antha mama kitta enna letter kudutha?

me: adi paavi, nalla vela yaar kathuleyum vizhala, ipdiya kepa? athu courier office-di.

n: apdina enna?

me: namma kodukara letter-a avanga kondu poi antha address-la koduthuduvanga.

n: appa post-office ethuku?

me: well, athu vera ithu vera.

n: yenaku puriyala!

me: namma post-boxla podura letters ellam post man vanthu collect panni postofficela koduthuduvar, ange yirunthu ella edathukum post man poi deliver paniduvaar.

she somewhat got interested in this and decided to write a letter and trace its journey.

n: appa naan letter ezhuthi post boxla pottu paaka poren.

me: yaaruku ezhutha pora? un cousin-ku ?

n: no , antha nai enna panni-nu thitithu , so avaluku kedaiyathu.
(ithey cousin thanaku bestfriend-nu rendu naal munnadi sonna!)

me: appa un perima ponnuku?

n: illa vendaam ,naan unaku ezhuthareney?

me:ennathu, namma rendu perum pakkathu pakkathu veetula irukom-di.

n: parava illa, naan unaku thaan ezhuthuven

wow, enna pasam, enna pasam, apdiye pullarachi poi, enaku letter ezhutha naaney avaluku help paninen :)

n: ok naan poi post panren.

me: thaniya pogatha, road cross pananum.

n: illa naan thaniya thaan poven.(she came back within seconds.)

n: athai !post paniten.

me: what? athukuleya, thaniya epdi road cross panina?

n: ethuku road cross pananum, namma theruvala irukey?

me: what namma theruleya?

n: athuvum namma veetuleye?

me: whaaaaaat?

n: athaan athai, namma veetu vasal gate-la oru post box maatiyiruke, athula thaane post pananum?

me: whaaaaaaaaaaaaaaaaaaaaaaaat? (bulb bulb -nu solraangaley? athu ithu thaana?)


ஹிஹி மொக்கை எப்டி? :):):)

Sunday, January 13, 2008

சபதமும் போட்டாச்சு...

இனிமே கோபப்படக் கூடாது, வேலைய தள்ளி போடக் கூடாது, நகம் கடிக்கக் கூடாது இப்டியெல்லாம் சபதம் போட்டு அப்பப்ப அதை உடைக்கறவ நானு, என்னைய போய் புத்தாண்டு சபதம் போடுன்னு சொல்லிட்டாங்க நம்ம ட்ரீம்ஸ் தம்பியும், மஞ்சூர் அண்ணாவும் :).

உண்மைய சொல்லனும்னா எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை, ஏன்னா நாளை என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. பெரும்பாலும் நான் அடிக்கடி மனசுல நினைச்சுக்கறது எதிர்ப்பார்ப்புகளை இனி குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். அது ரொம்ப கஷ்டம்னு எனக்கே தெரியும் ஏன்னா ஆசைகளும்,கனவுகளும் நிறைந்த ஒரு சராசரி பெண் தான் நானும். அதனால எதிர்ப்பார்ப்புகள் இல்லாத ஒரு மனதை வேண்டுவதை விட கூடவே ஏமாற்றத்தையும் தாங்கிக்கற சக்திய எனக்கு கொடுன்னு தான் நான் கடவுளை வேண்டிக்கறது(இதை எழுதும் போது ஏனோ என் கண்களில் நீர் படர்வதை என்னால தடுக்கவே முடியல எதையும் சொல்றது எளிது ஆனா அதை தாங்கிக்கறது எவ்ளோ கடினம்னு புரியுது. பல சமயங்களில் நம்ம குற்றமே இல்லாம சிலுவைகள் சுமக்க நேரிடுது. என்ன பண்றது? எவ்வளவோ தாங்கியாச்சு இத தாங்கிக்க முடியாதா? என்று என் பயணத்தை தொடர்கிறேன்) அதனால சபதம்னு தனியா எதையும் குறிப்பிட முடியாததால் நான் அடிக்கடி மனதில் எடுத்துக் கொள்ளும் தீர்மானத்தை பற்றி முன்னாடி எழுதின பதிவையே இங்க மறுபடி தரேன்.
Life brings us lots of surprises every moment. we may plan something to do but it may never happen. as people say "man proposes, god disposes". whatever we plan in our life, is not guaranteed to happen. dont think i am a pessimist. i am an optimist. i think positively, but i do know that expectations in all of its kinds gives us dissappointments. sometimes i used to think "hi whats this? what am i doing now? whats am i supposed to do? did i ever even think that i would be doing this in my life!" every day is a surprise and we should be ready to welcome it, sorrow or happiness whatever it is.

The art of living sucessfully,
consists of being able to hold
two opposite ideas in tension at the same time;
first, to make long-term plans,
as if we were going to live forever,
and second, to conduct ourselves daily
as if we were going to die tomorrow.
- Sydney J. Harris

அவரவர் பிராரப்தப்பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன்;
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது;
இதுவே திண்ணம் ஆகலின்
மெளனமாய் இருக்கை நன்று!...
- ரமண மகரிஷி


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :)

Wednesday, January 09, 2008

அரியர்ஸ் எழுதியாச்சு :)

கல் தோன்றி முன் தோன்றா காலத்து.. அப்டின்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி எப்ப சொன்னாங்கன்னு வரையறுத்தே சொல்ல முடியாத மாதங்களுக்கு முன்னாடி நம்ம தலைவி என்னைய ஒரு சங்கிலி தொடர் எழுத சொல்லியிருந்தாங்க. சமீபத்துல வேற இதே மாதிரி ரெண்டு தொடருக்கு மக்கள்ஸ் நம்மள கூப்டுருந்தாங்களா? அத எழுதறதுக்கு முன்னாடி இதை மரியாதையா எழுதிடுன்னு இல்லேன்னா அரியர்ஸ் தான்னு தலைவி மிரட்டினதின் பொருட்டு(கொஞ்சம் இருங்க மூச்சு வாங்கிக்கறேன்...... ) இந்த பதிவு.

எழுதனும்னு முடிவு பண்ணிட்டப்புறம் தான் ஆகா எதை பத்தி எழுத சொன்னாங்கன்னு மறந்துப் போச்சு, சரின்னு அவசர அவசரமா தலைவிக்கு ஒரு மடலனுப்பி நீங்க நல்லவங்க,வல்லவங்க கருணையுள்ளம் கொண்டவங்க இப்டில்லாம் ஒரு பிட்ட போட்டு என்ன தலைப்புல எழுத சொன்னீங்கன்னு கேட்டா அதை நீயே தேடி கண்டுப்பிடிச்சுக்கோன்னு சொல்லிட்டாங்க. அப்டியே அதிர்ந்து போயிட்டேன் பின்ன ஒரு நாளைக்கு மூணு வேளை சாப்பிடறாங்களோ இல்லியோ அடுத்தடுத்து பதிவுகளா போட்டு பொது தொண்டாற்றும் தலைவியின் வலைப்பக்கத்தில் அந்த தலைப்பை எங்கன்னு தேடறது!!!

இப்டி ஒரு நாள் முழுக்க தேடிப் பார்த்தப்புறம் தலைப்பை கண்டுபிடிச்சேன். ஆனாலும் தலைவியின் தாயுள்ளம் என்னன்னு இப்ப தான் புரிஞ்சது, தன்னோட பழைய பதிவுகளெல்லாம் தன் சிஷ்யை படிச்சு(பின்ன நாமெல்லாம் படிக்காமயே எவ்ளோ பின்னூட்டம் போட்ருக்கோம் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு பழிவாங்கிட்டாங்க)மகிழனும், அதுக்காக தான் என்னய தேட வச்சாங்கன்னு நினைக்கும் போது அப்டியே ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடி என் கணினியின் விசைப்பலகையெல்லாம் நனைஞ்சுப் போச்சு. இப்ப தான் தொடச்சு மாடியில காய வச்சு கொண்டு வந்தேன். சரி தலைவி புகழ் பாடியாச்சு(அமெளண்டெல்லாம் சரியா வந்து சேர்ந்துருனும் எப்பவும் போல:))இப்ப பதிவுக்கு போகலாமா?

தலைவி போட சொன்னது அழகு என்கிற தலைப்பில் ஒரு தொடராமுல்ல, நமக்கு அழகுன்னு சொன்னதும் டக்குன்னு நினைவுக்கு வர்ரது நாந்தான் ஹிஹி ஆனா இந்த பிட்டெல்லாம் ஏற்கனவே நிறைய போட்டு விட்டதால் அதை விட்டுருலாம் :)அழகென்பதும் நினைவுக்கு வரும் விஷயங்கள்...

குழந்தை:

சிரிக்கும் உன் விழிகளில்
வழியும் அன்பு;
சிறு சிணுங்கலிலும்
தெறித்து விழும் நேசம்;
கைகட்டி நிற்பவரையும்
தொடத் தூண்டும் மென்மை;
மனம் கனமாகி
விழிகள் குளமாகி
எண்ணங்கள் உறையும் பொழுது,
உன்னை ஆரத் தழுவி
உச்சி முகர்ந்து
உன் கண்களில் முழுகி தொலைந்து போகும்
ஒவ்வொரு நொடியும் தரிசிக்கிறேன்,
கடவுளை.அம்மா:

இடியைத் தோற்கடிக்கும் வலியைக் கொடுத்து,
நிலத்தில் வீழ்ந்த என் பிஞ்சு விரல்களின் ஈரம் தொட்டு,
உன் வலிகளைத் துடைத்துக் கொண்டாய்.

அடி மேல் அடி வைத்து நடை நான் பழக,
தவறிய அடிகளுக்கு வலி நீ சுமந்தாய்.
பாடம் கேட்க பள்ளி நான் செல்ல,
இங்கு உழைத்து கரைந்தாய் நீ மெழுகாய்.
காலஓட்டத்தில் காதலுற்று நான் தவிக்க,
கசிந்துருகி மேன்வழி நீ காட்டினாய்.

தாயாகி நீ செய்தவைக்கு நான் என் செய்ய?
என்று நான் வினவ,
நீ புன்னகையுடன் பட்டியலிட்டாய்
எனக்கு செய்ய முடியாதவைகள் எவை என்று.

உன் அன்பில் நான் திகைக்க,
பதில் கிடைத்தது என் வினாவிற்கு.

அழியா ஆகாயம் போல்,
அழியா அன்பை வாரித் தெளித்த நீ சொன்னாய்,
"அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,
பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்"


அன்பு:

உன் மனநிலத்தில் விதைத்திருந்த நேசம்
முளை விட்டு அறுக்கிறது
என் நெஞ்சத்தை!

தொண்டை வற்றி பாலையில் திரியும் நாட்களில்
அமுதமென நீரில் மிதந்து வருகிறது
உன் காதல்!

உன் உயிர்மூச்சை சுமந்து வரும் காற்று
வருட மறுக்கிறது இலைகள் தாங்கிய பனித்துளிகளை
என் மேனியை தழுவுதலே
முதல்பணியென்று!

ஆதியும் அந்தமுமில்லா ஆகாயத்தை ஒத்திருக்கும்
உன் அன்பு வாரி அணைக்கிறது
என் அண்ட சராசரங்களையும்!

தீயில் மெழுகாய் உருகினாலும்
நாற்புறமும் பிரகாசிக்கிறது
உன் இருப்பு!

என் எல்லா திசைகளிலும் நிறைந்து
தாளாத நேசத்துடன்
இதயத்தை கீறும்
உன் அன்பெனும் வாளை
சற்றே இறக்கி வை
நான் அழுது விட்டு வருகிறேன்!


கடல்:

ஏதோ சொல்ல வந்து
பின் சொல்லாமலே
கால்களை வருடிச் செல்லும்
கடலலைகள் போல்,
உன் முகம் கண்டவுடன்
பின் வாங்குகின்றன,
மன அலைகளாய் எழுந்த
என் ரகசியங்கள்.

சொல்லாத ரகசியங்கள்
என் மனக் கடலில்
புதைந்து கிடக்கின்றன
முத்துக்களாய்.
அவற்றை எடுக்க வா(?) தொடுக்க வா(?)


பி.கு : இவையெல்லாம் நான் ஏற்கனவே எழுதிய கவிதைகள் தாம் :) தலைப்புக்கு பொருத்தமாக இருக்கவே அதையே எடுத்துக்கொண்டேன். தலைவி அரியர்ஸ் எழுதிட்டேன் தேறிடுவேனா? :)