Wednesday, January 09, 2008

அரியர்ஸ் எழுதியாச்சு :)

கல் தோன்றி முன் தோன்றா காலத்து.. அப்டின்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி எப்ப சொன்னாங்கன்னு வரையறுத்தே சொல்ல முடியாத மாதங்களுக்கு முன்னாடி நம்ம தலைவி என்னைய ஒரு சங்கிலி தொடர் எழுத சொல்லியிருந்தாங்க. சமீபத்துல வேற இதே மாதிரி ரெண்டு தொடருக்கு மக்கள்ஸ் நம்மள கூப்டுருந்தாங்களா? அத எழுதறதுக்கு முன்னாடி இதை மரியாதையா எழுதிடுன்னு இல்லேன்னா அரியர்ஸ் தான்னு தலைவி மிரட்டினதின் பொருட்டு(கொஞ்சம் இருங்க மூச்சு வாங்கிக்கறேன்...... ) இந்த பதிவு.

எழுதனும்னு முடிவு பண்ணிட்டப்புறம் தான் ஆகா எதை பத்தி எழுத சொன்னாங்கன்னு மறந்துப் போச்சு, சரின்னு அவசர அவசரமா தலைவிக்கு ஒரு மடலனுப்பி நீங்க நல்லவங்க,வல்லவங்க கருணையுள்ளம் கொண்டவங்க இப்டில்லாம் ஒரு பிட்ட போட்டு என்ன தலைப்புல எழுத சொன்னீங்கன்னு கேட்டா அதை நீயே தேடி கண்டுப்பிடிச்சுக்கோன்னு சொல்லிட்டாங்க. அப்டியே அதிர்ந்து போயிட்டேன் பின்ன ஒரு நாளைக்கு மூணு வேளை சாப்பிடறாங்களோ இல்லியோ அடுத்தடுத்து பதிவுகளா போட்டு பொது தொண்டாற்றும் தலைவியின் வலைப்பக்கத்தில் அந்த தலைப்பை எங்கன்னு தேடறது!!!

இப்டி ஒரு நாள் முழுக்க தேடிப் பார்த்தப்புறம் தலைப்பை கண்டுபிடிச்சேன். ஆனாலும் தலைவியின் தாயுள்ளம் என்னன்னு இப்ப தான் புரிஞ்சது, தன்னோட பழைய பதிவுகளெல்லாம் தன் சிஷ்யை படிச்சு(பின்ன நாமெல்லாம் படிக்காமயே எவ்ளோ பின்னூட்டம் போட்ருக்கோம் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு பழிவாங்கிட்டாங்க)மகிழனும், அதுக்காக தான் என்னய தேட வச்சாங்கன்னு நினைக்கும் போது அப்டியே ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடி என் கணினியின் விசைப்பலகையெல்லாம் நனைஞ்சுப் போச்சு. இப்ப தான் தொடச்சு மாடியில காய வச்சு கொண்டு வந்தேன். சரி தலைவி புகழ் பாடியாச்சு(அமெளண்டெல்லாம் சரியா வந்து சேர்ந்துருனும் எப்பவும் போல:))இப்ப பதிவுக்கு போகலாமா?

தலைவி போட சொன்னது அழகு என்கிற தலைப்பில் ஒரு தொடராமுல்ல, நமக்கு அழகுன்னு சொன்னதும் டக்குன்னு நினைவுக்கு வர்ரது நாந்தான் ஹிஹி ஆனா இந்த பிட்டெல்லாம் ஏற்கனவே நிறைய போட்டு விட்டதால் அதை விட்டுருலாம் :)அழகென்பதும் நினைவுக்கு வரும் விஷயங்கள்...

குழந்தை:

சிரிக்கும் உன் விழிகளில்
வழியும் அன்பு;
சிறு சிணுங்கலிலும்
தெறித்து விழும் நேசம்;
கைகட்டி நிற்பவரையும்
தொடத் தூண்டும் மென்மை;
மனம் கனமாகி
விழிகள் குளமாகி
எண்ணங்கள் உறையும் பொழுது,
உன்னை ஆரத் தழுவி
உச்சி முகர்ந்து
உன் கண்களில் முழுகி தொலைந்து போகும்
ஒவ்வொரு நொடியும் தரிசிக்கிறேன்,
கடவுளை.அம்மா:

இடியைத் தோற்கடிக்கும் வலியைக் கொடுத்து,
நிலத்தில் வீழ்ந்த என் பிஞ்சு விரல்களின் ஈரம் தொட்டு,
உன் வலிகளைத் துடைத்துக் கொண்டாய்.

அடி மேல் அடி வைத்து நடை நான் பழக,
தவறிய அடிகளுக்கு வலி நீ சுமந்தாய்.
பாடம் கேட்க பள்ளி நான் செல்ல,
இங்கு உழைத்து கரைந்தாய் நீ மெழுகாய்.
காலஓட்டத்தில் காதலுற்று நான் தவிக்க,
கசிந்துருகி மேன்வழி நீ காட்டினாய்.

தாயாகி நீ செய்தவைக்கு நான் என் செய்ய?
என்று நான் வினவ,
நீ புன்னகையுடன் பட்டியலிட்டாய்
எனக்கு செய்ய முடியாதவைகள் எவை என்று.

உன் அன்பில் நான் திகைக்க,
பதில் கிடைத்தது என் வினாவிற்கு.

அழியா ஆகாயம் போல்,
அழியா அன்பை வாரித் தெளித்த நீ சொன்னாய்,
"அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,
பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்"


அன்பு:

உன் மனநிலத்தில் விதைத்திருந்த நேசம்
முளை விட்டு அறுக்கிறது
என் நெஞ்சத்தை!

தொண்டை வற்றி பாலையில் திரியும் நாட்களில்
அமுதமென நீரில் மிதந்து வருகிறது
உன் காதல்!

உன் உயிர்மூச்சை சுமந்து வரும் காற்று
வருட மறுக்கிறது இலைகள் தாங்கிய பனித்துளிகளை
என் மேனியை தழுவுதலே
முதல்பணியென்று!

ஆதியும் அந்தமுமில்லா ஆகாயத்தை ஒத்திருக்கும்
உன் அன்பு வாரி அணைக்கிறது
என் அண்ட சராசரங்களையும்!

தீயில் மெழுகாய் உருகினாலும்
நாற்புறமும் பிரகாசிக்கிறது
உன் இருப்பு!

என் எல்லா திசைகளிலும் நிறைந்து
தாளாத நேசத்துடன்
இதயத்தை கீறும்
உன் அன்பெனும் வாளை
சற்றே இறக்கி வை
நான் அழுது விட்டு வருகிறேன்!


கடல்:

ஏதோ சொல்ல வந்து
பின் சொல்லாமலே
கால்களை வருடிச் செல்லும்
கடலலைகள் போல்,
உன் முகம் கண்டவுடன்
பின் வாங்குகின்றன,
மன அலைகளாய் எழுந்த
என் ரகசியங்கள்.

சொல்லாத ரகசியங்கள்
என் மனக் கடலில்
புதைந்து கிடக்கின்றன
முத்துக்களாய்.
அவற்றை எடுக்க வா(?) தொடுக்க வா(?)


பி.கு : இவையெல்லாம் நான் ஏற்கனவே எழுதிய கவிதைகள் தாம் :) தலைப்புக்கு பொருத்தமாக இருக்கவே அதையே எடுத்துக்கொண்டேன். தலைவி அரியர்ஸ் எழுதிட்டேன் தேறிடுவேனா? :)

19 comments:

G3 said...

உள்ளேன் ஐயா சாரி அம்மணி :P

Sumathi. said...

ஹாய் வேதா,

ஒருவழியா இப்பவாவது அரியர்ஸ் முடிஞ்சுதா? எல்லாம் சரி,ஒ.கே. பாஸ் பண்ணியாச்சு.

கீதா சாம்பசிவம் said...

//ஆனாலும் தலைவியின் தாயுள்ளம் என்னன்னு இப்ப தான் புரிஞ்சது, தன்னோட பழைய பதிவுகளெல்லாம் தன் சிஷ்யை படிச்சு(பின்ன நாமெல்லாம் படிக்காமயே எவ்ளோ பின்னூட்டம் போட்ருக்கோம் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு பழிவாங்கிட்டாங்க)மகிழனும், அதுக்காக தான் என்னய தேட வச்சாங்கன்னு நினைக்கும் போது அப்டியே ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடி என் கணினியின் விசைப்பலகையெல்லாம் நனைஞ்சுப் போச்சு. இப்ப தான் தொடச்சு மாடியில காய வச்சு கொண்டு வந்தேன். சரி தலைவி புகழ் பாடியாச்சு(அமெளண்டெல்லாம் சரியா வந்து சேர்ந்துருனும் எப்பவும் போல:))இப்ப பதிவுக்கு போகலாமா?//

அமவுண்ட்டா? அதெல்லாம் ஒண்ணும் கிடையாது, இதுக்கே நீங்க கொடுக்கணும் எனக்கு வந்ததுக்கு, மூணு முறை வந்துட்டுப் போனேன், கஷ்டப் பட்டு, இப்போத் தான் வலைப்பக்கமே திறக்குது! :P

Dreamzz said...

//உச்சி முகர்ந்து
உன் கண்களில் முழுகி தொலைந்து போகும்
ஒவ்வொரு நொடியும் தரிசிக்கிறேன்,
கடவுளை./
Same pinch :)

Dreamzz said...

//என் எல்லா திசைகளிலும் நிறைந்து
தாளாத நேசத்துடன்
இதயத்தை கீறும்
உன் அன்பெனும் வாளை
சற்றே இறக்கி வை
நான் அழுது விட்டு வருகிறேன்!//
:) நல்லா இருக்கு :)

Dreamzz said...

//இவையெல்லாம் நான் ஏற்கனவே எழுதிய கவிதைகள் தாம் :) தலைப்புக்கு பொருத்தமாக இருக்கவே அதையே எடுத்துக்கொண்டேன். தலைவி அரியர்ஸ் எழுதிட்டேன் தேறிடுவேனா? :)//
ஆஹா ஆஹா :P

Compassion Unlimitted said...

Edho nalladhu nadakkudhu/nadakkapogudhu nu puriyudhu..nadakkattum
TC
CU

ரசிகன் said...

தலைவிக்காக ரொம்ப சீரியஸ் கவிதையெல்லாம் போட்டு ,ஃபீல் பண்ண வைச்சாலும் , எங்களுக்காக ஆரம்பத்துல மொக்கைப் போட்டு கலக்கினதால வாழ்த்துக்கள்..

ரசிகன் said...

ஏனுங்க வேதா.. அப்போ இன்னும் ரெண்டு செயின் பாக்கியிருக்குதா?.. அவ்வ்வ்வ்........ மறக்காம எங்க செயினுக்கும் லிங்க் குடுத்துருங்க...” துணை” தலைவியாவே ஆக்கிடறோம்..ஹிஹி..

ரசிகன் said...

நான் படிக்காத கவிதைகள்.. ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்.. நல்லாயிருக்குங்க.. வரி வரியா பாராட்டு சொன்னா.. தலைவி அனுப்பின பொட்டியில பாதி எனக்கு வந்துட்டதா ,தலைவி நினைக்க வாய்ப்பிருப்பதால், மொத்தமாவே சொல்லிடறேன்..
சூப்பரப்பு..............

(ஆமா நானும் தலைவிய பாராட்டி நெறய பதிவு போடறேனே ..ஆனா எனக்கு பொட்டில பாம் வரும்ன்னு மெரட்டல் மட்டும்தானே வருது:P)

வேதா said...

@காயத்ரி,
இது என்ன வெறும் வருகை மட்டும் தானா? படிக்க கூட உங்களுக்கு நேரமில்லையா அம்மணி :D இதெல்லாம் சரியில்ல சொல்டேன் ;)

@சுமதி,
ஹிஹி ஒரு வழியா நான் பாஸாகிட்டேன் நன்றி ஹை :D

@கீதா,
எல்லாம் உங்கள கண்டா ஒரு பயம் கலந்த மரியாதை தான் :) சரி நான் பாஸா இல்லியா அத சொல்லாம போறீங்களே ;D

@ட்ரீம்ஸ்,
எல்லா கமெண்டுக்கும் நன்றி ;D

@cu,
நீங்க வேற புதுசா என்னமோ சொல்றீங்க? :) எது நடந்தாலும் நல்லதுக்குன்னு நினைச்சுக்கறது தான் :)
எல்லாம் உங்க ஆசி தான் :)

@ரசிகன்,
இதுவே மொக்கையா உங்களுக்கு? இன்னும் அடுத்தடுத்து வரும் பாருங்க :)

/எங்க செயினுக்கும் லிங்க் குடுத்துருங்க...” துணை” தலைவியாவே ஆக்கிடறோம்..ஹிஹி../
ஹலோ அதென்ன நீங்க கொடுக்கறது அதெல்லாம் நாங்களே எடுத்துப்போம்ல :D

/ தலைவி அனுப்பின பொட்டியில பாதி எனக்கு வந்துட்டதா ,தலைவி நினைக்க வாய்ப்பிருப்பதால், மொத்தமாவே சொல்லிடறேன்..
சூப்பரப்பு............../
ஹாஹா நன்றி :)

dubukudisciple said...

ha ha supera ariyars ezhuthi irukeenga..
double promotion thaan ungaluku

Arunkumar said...

//
//உச்சி முகர்ந்து
உன் கண்களில் முழுகி தொலைந்து போகும்
ஒவ்வொரு நொடியும் தரிசிக்கிறேன்,
கடவுளை.
//
வாவ் அருமை

Arunkumar said...

//
ha ha supera ariyars ezhuthi irukeenga..
double promotion thaan ungaluku
//
same pinch

ambi said...

கவிதை எல்லம் நல்லா இருக்கு. பதிவின் முதல் பாதி ரசிகனின் மொக்கை சங்கிலி பதிவுக்கு எழுதியதோ? :p

வேதா said...

@dd,
நன்றி அக்கா :)

@அருண்,
வாங்க அருண் ரொம்ப நாள் கழிச்சு எட்டி பார்த்துருக்கீங்க நன்றி :)

@அம்பி,
என்ன இப்டி சொல்டீங்க இவ்ளோ சின்ன மொக்கையோட உங்கள விட்ருவோமா அது தனியா வரும் :)

கீதா சாம்பசிவம் said...

//துணை” தலைவியாவே ஆக்கிடறோம்..ஹிஹி..//

@ரசிகன், இந்த சதி வேலை எத்தனை நாளா? ஒரு 2 நாள் வரலைனா பின்னாலேயே வந்து கவுத்திடுவீங்களே? நம்ம கட்சியிலே ஆல்-இன் - ஆல் நான் மட்டுமே, தெரிஞ்சுக்குங்க! :P

ரசிகன் said...

//கீதா சாம்பசிவம் said...

//துணை” தலைவியாவே ஆக்கிடறோம்..ஹிஹி..//

@ரசிகன், இந்த சதி வேலை எத்தனை நாளா? ஒரு 2 நாள் வரலைனா பின்னாலேயே வந்து கவுத்திடுவீங்களே? நம்ம கட்சியிலே ஆல்-இன் - ஆல் நான் மட்டுமே, தெரிஞ்சுக்குங்க! :P//

நீங்க வேற கீதா அக்கா..., அவங்களே ரொம்ப பெருந்தன்மையா "துணை"த் தலைவி பதவில்லாம் வேண்டாம்ன்னுடாங்க.(பின்ன இப்பிடி பயம்புறுத்துனிங்கன்னா?..:)))) ),.நீங்க தான் "தனி"ப் பெரும் தலைவி,நான் தான் "தனி"ப் பெரும் சிஷ்யன் ஓகேவா?... (அட..,அதான் உங்களை தனிப்பெரும் தலைவின்னு ஒத்துக்கிட்டேனுங்களே அக்கா..ஹிஹி...)))

ரசிகன் said...

//ambi said...

கவிதை எல்லம் நல்லா இருக்கு. பதிவின் முதல் பாதி ரசிகனின் மொக்கை சங்கிலி பதிவுக்கு எழுதியதோ? :p//

ஹலோ..அம்பி,பாதி பாதி எழுதுனா எப்படி ஒத்துகிறது?:P..கொஞ்சம் லேட்டாவாவது முழுசா எழுதட்டுமே..வெயிட்டிங்கு..:))))))))