Sunday, January 13, 2008

சபதமும் போட்டாச்சு...

இனிமே கோபப்படக் கூடாது, வேலைய தள்ளி போடக் கூடாது, நகம் கடிக்கக் கூடாது இப்டியெல்லாம் சபதம் போட்டு அப்பப்ப அதை உடைக்கறவ நானு, என்னைய போய் புத்தாண்டு சபதம் போடுன்னு சொல்லிட்டாங்க நம்ம ட்ரீம்ஸ் தம்பியும், மஞ்சூர் அண்ணாவும் :).

உண்மைய சொல்லனும்னா எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை, ஏன்னா நாளை என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. பெரும்பாலும் நான் அடிக்கடி மனசுல நினைச்சுக்கறது எதிர்ப்பார்ப்புகளை இனி குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். அது ரொம்ப கஷ்டம்னு எனக்கே தெரியும் ஏன்னா ஆசைகளும்,கனவுகளும் நிறைந்த ஒரு சராசரி பெண் தான் நானும். அதனால எதிர்ப்பார்ப்புகள் இல்லாத ஒரு மனதை வேண்டுவதை விட கூடவே ஏமாற்றத்தையும் தாங்கிக்கற சக்திய எனக்கு கொடுன்னு தான் நான் கடவுளை வேண்டிக்கறது(இதை எழுதும் போது ஏனோ என் கண்களில் நீர் படர்வதை என்னால தடுக்கவே முடியல எதையும் சொல்றது எளிது ஆனா அதை தாங்கிக்கறது எவ்ளோ கடினம்னு புரியுது. பல சமயங்களில் நம்ம குற்றமே இல்லாம சிலுவைகள் சுமக்க நேரிடுது. என்ன பண்றது? எவ்வளவோ தாங்கியாச்சு இத தாங்கிக்க முடியாதா? என்று என் பயணத்தை தொடர்கிறேன்) அதனால சபதம்னு தனியா எதையும் குறிப்பிட முடியாததால் நான் அடிக்கடி மனதில் எடுத்துக் கொள்ளும் தீர்மானத்தை பற்றி முன்னாடி எழுதின பதிவையே இங்க மறுபடி தரேன்.
Life brings us lots of surprises every moment. we may plan something to do but it may never happen. as people say "man proposes, god disposes". whatever we plan in our life, is not guaranteed to happen. dont think i am a pessimist. i am an optimist. i think positively, but i do know that expectations in all of its kinds gives us dissappointments. sometimes i used to think "hi whats this? what am i doing now? whats am i supposed to do? did i ever even think that i would be doing this in my life!" every day is a surprise and we should be ready to welcome it, sorrow or happiness whatever it is.

The art of living sucessfully,
consists of being able to hold
two opposite ideas in tension at the same time;
first, to make long-term plans,
as if we were going to live forever,
and second, to conduct ourselves daily
as if we were going to die tomorrow.
- Sydney J. Harris

அவரவர் பிராரப்தப்பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன்;
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது;
இதுவே திண்ணம் ஆகலின்
மெளனமாய் இருக்கை நன்று!...
- ரமண மகரிஷி


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :)

25 comments:

மஞ்சூர் ராசா said...

//பல சமயங்களில் நம்ம குற்றமே இல்லாம சிலுவைகள் சுமக்க நேரிடுது. //


மனதைத் தொட்ட உண்மை வரிகள்.

G3 said...

y this sogam?? :((

கோபிநாத் said...

\\G3 said...
y this sogam?? :((\\

சேம் கொஸ்டின்..?

பொங்கல் வாழ்த்துக்கள் ;)

sury said...

//அதனால எதிர்ப்பார்ப்புகள் இல்லாத ஒரு மனதை வேண்டுவதை விட கூடவே ஏமாற்றத்தையும் தாங்கிக்கற சக்திய எனக்கு கொடுன்னு தான் நான் கடவுளை வேண்டிக்கறது(இதை எழுதும் போது ஏனோ என் கண்களில் நீர் படர்வதை என்னால தடுக்கவே முடியல //

எதிரி்லே பார்ப்பதெல்லாம்
எதிர்பார்த்து விட்டால்
ஏக்கம் தான் மிஞ்சும்
உண்மை அதுவேதான் ஆயினும்
உங்களுக்கு ஒன்று சொல்வேன் நான்.
உள்ளக்கிடக்கைகள் உறங்கவா வந்தன?
உள்ளத்தில் துணிவுடனே எண்ணிப்பார்ப்போம்.
எட்டாத உயரம் என ஒன்று இருந்துவிட்டால்
ஏணிகளை ஏன் படைத்தான் இறைவனிங்கே ?

ஐயனிடம் ஐயமின்றி வேண்டிப்பாரும்.
"ஜெயமுண்டு, பயமில்லை" ஓசை கேட்கும்.

தை மாதம் வழி பிறக்கும் (not joking)

சுப்பு ரத்தினம்
தஞ்சை.

Dreamzz said...

//இதை எழுதும் போது ஏனோ என் கண்களில் நீர் படர்வதை என்னால தடுக்கவே முடியல எதையும் சொல்றது எளிது ஆனா அதை தாங்கிக்கறது எவ்ளோ கடினம்னு புரியுது. பல சமயங்களில் நம்ம குற்றமே இல்லாம சிலுவைகள் சுமக்க நேரிடுது. என்ன பண்றது? எவ்வளவோ தாங்கியாச்சு இத தாங்கிக்க முடியாதா? என்று என் பயணத்தை தொடர்கிறேன்/
ஆஹா! உங்களுக்கு வலிமை கிடைக்க வாழ்த்துக்கள்! :)

மதுரையம்பதி said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏதோ குழப்பத்தில்/தவிப்பில் இருக்கிறீர்கள் என்று எண்ண தோன்றுகிறது.

My days(Gops) said...

ennachi ivlo dull ah eludhi irukeeeenga?

btw,

Happy New Year
Happy Pongal :)

கீதா சாம்பசிவம் said...

//பல சமயங்களில் நம்ம குற்றமே இல்லாம சிலுவைகள் சுமக்க நேரிடுது. //

அனுபவிச்சிருக்கேன், நிறையவே, இருந்தாலும் மனசு வருத்தப் படுவதைத் தவிர்க்க முடியலை! :(

கீதா சாம்பசிவம் said...

பொங்கல் வாழ்த்துக்கள்.

Ravi said...

Veda, arumaiyaana post. Niraya ennoda ennangal pradhibalichidhu. Yes, edhir paarppu illaadha oru manam romba nimmadhiyai tharum unmai dhaan. I think, time aaha aaha nam manam andha pakkuvathai adaigiradhu. Illaiyaa?

ரசிகன் said...

//இனிமே கோபப்படக் கூடாது, வேலைய தள்ளி போடக் கூடாது, நகம் கடிக்கக் கூடாது //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......... எவ்ளோ பெரிய சபதங்கள்...சூப்பரேய்ய்ய்ய்ய்.....

////இப்டியெல்லாம் சபதம் போட்டு அப்பப்ப அதை உடைக்கறவ நானு, ////
நோ வொண்டர்......
(கராத்தேவுல பிளாக் பெல்ட்டோ... ஹிஹி...)

ரசிகன் said...

நம்ம பெரியவங்க சொன்ன தத்துவங்கள்ல்லாம் ரொம்பவே நல்லா இருக்குங்க வேதா.. ஆனா நாமதான் அதையெல்லாம் தப்புத் தப்பா புரிஞ்சுக்கிட்டு முடிவெடுக்கிறோமோன்னு தோனுது...
// did i ever even think that i would be doing this in my life!//
நல்லதா இருந்துச்சுன்னா, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளறதுல தப்பில்லைன்னு தோனுதுங்க...

ரசிகன் said...

//
உண்மை அதுவேதான் ஆயினும்
உங்களுக்கு ஒன்று சொல்வேன் நான்.
உள்ளக்கிடக்கைகள் உறங்கவா வந்தன?
உள்ளத்தில் துணிவுடனே எண்ணிப்பார்ப்போம்.
எட்டாத உயரம் என ஒன்று இருந்துவிட்டால்
ஏணிகளை ஏன் படைத்தான் இறைவனிங்கே ?

ஐயனிடம் ஐயமின்றி வேண்டிப்பாரும்.
"ஜெயமுண்டு, பயமில்லை" ஓசை கேட்கும்.//

நச்சின்னு சொன்னிங்க சூரி... ஹாட்ஸ் ஆஃப்..:)

ரசிகன் said...

ஹலோ..வேதா,எங்க மொக்கை பதிவுக்கு உங்களை இன்வைட் பண்ணி ரொம்ப நாளாவதுங்க...
அதையும் செஞ்சிருங்களேன்.. ஆனா அது அசல் மொக்கையாயிருக்கனுங்கோ... ஹிஹி...

//தை மாதம் வழி பிறக்கும் (not joking)//
வாழ்த்துக்கள்...& வாழ்த்துக்கள் &
இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

எதிர்ப்பார்ப்புகளை இனி குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.
இது மட்டும் நடந்து விட்டால் அவ்வளவுதான் " உனக்கென்ன கவலை நீஒரு ராஜா....
பொங்கல் வாழ்த்துக்கள்

Compassion Unlimitted said...

Nice writing and unmai than..irundhalum konjam over philosophicalla irukko ?

பொங்கல் வாழ்த்துக்கள் !!

TC
CU

வேதா said...

@மஞ்சூர்,
/மனதைத் தொட்ட உண்மை வரிகள்/.

மனதை சுட்டதும் கூட..

@காயத்ரி,
அது அப்பப்ப எட்டி பார்க்கறது தான் :)

@கோபி,
/பொங்கல் வாழ்த்துக்கள் ;)/
நன்றி :)

@சூரி,
/எட்டாத உயரம் என ஒன்று இருந்துவிட்டால்
ஏணிகளை ஏன் படைத்தான் இறைவனிங்கே ?

ஐயனிடம் ஐயமின்றி வேண்டிப்பாரும்.
"ஜெயமுண்டு, பயமில்லை" ஓசை கேட்கும்.

தை மாதம் வழி பிறக்கும் (not joking)/
தங்கள் ஆறுதல் தரும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி :)

@ட்ரீம்ஸ்,
நன்றி தம்பி :)

@மதுரையம்பதி,
தங்கள் அன்புக்கு நன்றி :) இப்ப குழப்பமில்லை :)

@கோப்ஸ்,
ஹும் கொஞ்சம் டல் தான்..
வாழ்த்துக்களுக்கு நன்றி :)

வேதா said...

@கீதா,
ஆமா வருத்தங்களை தாண்டி தானே வாழ வேண்டியிருக்கு
வாழ்த்துக்களுக்கு நன்றி :)

@ரவி,
ஆமா காலம் பக்குவத்தை தந்து விடும் ஆனா அதற்கான விலையும் நம்மிடமிருந்து வாங்கி விடும் :)

@ரசிகன்,
/நல்லதா இருந்துச்சுன்னா, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளறதுல தப்பில்லைன்னு தோனுதுங்க.../
சரிதாங்க அந்த பக்குவம் எல்லாருக்கும் வர்ரதில்லை..

/அதையும் செஞ்சிருங்களேன்.. ஆனா அது அசல் மொக்கையாயிருக்கனுங்கோ... ஹிஹி../.
ஹிஹி கொஞ்சம் பொறுத்துக்கோங்க போட்டுடலாம் :)

@திராச,
/இது மட்டும் நடந்து விட்டால் அவ்வளவுதான் " உனக்கென்ன கவலை நீஒரு ராஜா..../
நல்லா சொன்னீங்க :)

@cu,
கொஞ்சம் ஓவரா தான் போயிடுச்சோ :)

K aRUn's KirUkaLgaL said...

Try always to look upon the positive side of everything.
Naalai irrupoma illai errapoma
enbathu oru muttalthanam.
eppadi ellorrum enni irundhal panathin mathipu poojiyam.....
Live in reality

soogangal varum poogum
aanal vazhvu than nijam
we will have to live any way
ethu than manitha vazvin neeyathi

Balaji S Rajan said...

Vedha,

You are well matured girl. I appreciate your thoughts. Experiences makes one more matured. I understand all your words and the post is very meaningful. My best wishes.

Arunkumar said...

appapo etti paakura sogam eppovaadhu mattum etti paarka vendikkiren...

Happy Pongal to all readers...

வேதா said...

@ K aRUn's KirUkaLgaL,
/soogangal varum poogum
aanal vazhvu than nijam
we will have to live any way
ethu than manitha vazvin neeyathi/
உண்மை தான் நன்றி :)

@பாலாஜி,
புரிந்துக்கொண்டமைக்கும் ஆறுதலுக்கும் நன்றி :)

@அருண்,
வாழ்த்துக்களுக்கு நன்றி அருண் :)

ambi said...

ரொம்ப லேட்டா வந்ருக்கேன்னு நினைக்க வேணாம், முன்னடியே படிச்சாலும், தமிழ்ல இப்ப தான் கமண்ட் போட நேரம் கிடைச்சது.

ambi said...

சரியான நேரம் வரும் வரை பொறுத்திருந்தாலும், முயற்சி மெய்வருத்த கேசரி தரும். என்ன நான் சொல்றது..? :)

ரமண மகரிஷியின் வாக்கு அருமை.

ரசிகன் said...

//சரியான நேரம் வரும் வரை பொறுத்திருந்தாலும், முயற்சி மெய்வருத்த கேசரி தரும். என்ன நான் சொல்றது..? :)

ரமண மகரிஷியின் வாக்கு அருமை.//

உங்க வாய்க்கு கேசரிதான் போடனும்:)

ஆமாம் இதைச் சொன்னவர் திருவள்ளுவரில்லையோ?..:P

(ஹிஹி.. நீங்க பதிவுல சொன்னிங்களா?:))))) )