Monday, February 04, 2008

எனக்கு பிடிச்சது..

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடுச்சாம், அது மாதிரி நம்ம கணினி தான் படுத்துக்கிச்சு நம்ம அண்ணன் இருக்கும் போது என்ன கவலைன்னு பார்த்தா என் ராசி போலிருக்கு அவரோடது டாடா இண்டிகாம் கனெக்ஷன் அதுலேயும் வச்சாங்க ஆப்பு(டாடா இண்டிகாம் பத்தி சொல்லவே வேணாம் அந்த மகிமையை பத்தி தான் நம்ம தலைவி நிறைய எழுதிட்டாங்களே :)

நாம தான் எதுவும் எழுத முடியல நம்ம நண்பர்கள் எழுதறதையெல்லாம் படிக்கலாம்னு ஒரு திருப்தி இருந்தது. எழுதலியே தவிர எல்லா வலைப்பக்கங்களையும் படிச்சுட்டு தான் இருந்தேன். நல்ல வேளை கடைசில நேத்திலிருந்து எங்க கணினியே சரி பண்ணியாச்சு. அதான் மறுபடியும் அதிரடியா திரும்ப வந்தாச்சு(அடங்க மாட்டோம்ல:))

நம்ம நண்பர் கோபி ஒரு தொடர் ஆட்டத்துக்கு அழைச்சிருந்தார். போன வருடத்தில் நான் எழுதிய பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவை பற்றி குறிப்பிட வேண்டுமாம்.

உண்மைய சொல்லனும்னா நான் போடற எல்லா பதிவுகளையும் எனக்கு பிடித்து தான் நான் போடறேன். விதிவிலக்குகள் உண்டு சில பதிவுகள் படு மொக்கையாக இருக்கும், சிலது தேவையற்ற ப்ரச்னைகளை கிளப்பி விட்டுருக்கும், சிலது ஏண்டா எழுதினோம் என்று தோன்றும் அளவு இருக்கும். இதையெல்லாம் மீறி என் அளவில் சில வகைகளில் பிடித்தவை என்றால்,

1. என் திறமையை ஓரளவு வெளிக்கொணர்ந்து என் பெயரை ஓரளவு வலையுலகில் பரிச்சயமாக்கிய கவிதை போட்டியை பற்றி நான் எழுதிய பதிவு,

அன்புடன்..

2.இது வரை கதைகள் என்ற பெயரில் சில முயற்சிகள் செய்திருந்தாலும் சமீபத்தில் சர்வேசன் நடத்திய கதைப்போட்டிக்கு நான் அனுப்பிய கதை எனக்கு பிடித்த ஒன்று

கலியுக பாஞ்சாலிகள்..

3.நகைச்சுவை என்ற பெயரிலும் வாழ்த்துகிறேன் என்ற பெயரிலும் முடிந்த வரை எல்லாரையும் வம்புக்கிழுத்த பதிவு :)

நலம் வாழ என்றும் என் வாழ்த்துக்கள்..


இதை தவிர என்னுடைய பயணக்கட்டுரைகள் எல்லாமே எனக்கு பிடித்தவை. இப்டி சொல்லிக்கிட்டே இருந்தா எல்லா பதிவுகளையும் சொல்ல வேண்டியிருக்கும் அதனால இதோட நிறுத்திக்கிறேன் :)

உங்களுக்கு ஏதாவது தோணுச்சுன்னா சொல்லிட்டு போங்க :)

12 comments:

கீதா சாம்பசிவம் said...

யப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆ, இவ்வளவு சீக்கிரம் ஒரு சங்கிலிப் பதிவா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Dreamzz said...

Obviously...unga kavidhaigal :)

ரசிகன் said...

மறுபடியும் புது பின்புலம் (டாம்ப்லெட்):). நல்லாயிருக்குங்க...:)

//நலம் வாழ என்றும் என் வாழ்த்துக்கள்..// இது
ரொம்ப காமெடியா இருக்குங்க..சூப்பர்.
கலக்குங்க...:)

ரசிகன் said...

பிடிச்ச பதிவுகளில் கவிதைப் பக்கங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்திருக்கலாமே:) மறந்துட்டிங்களா?:)

”சும்மா”பதிவு கூட நல்ல நகைச்சுவையா இருந்தது:)

கோபிநாத் said...

மூன்றும் நல்ல பதிவுகள் ;))

அன்புடன் கவிதை அருமை ;)

\\உங்களுக்கு ஏதாவது தோணுச்சுன்னா சொல்லிட்டு போங்க :)\\

என்றும் நேசமுடன்...
என்றும் நட்புடன்..

எனக்கு இந்த ரெண்டும் பிடிக்கும் ;)

கோபிநாத் said...

சரி இந்த பதிவில் பிடிச்ச பதிவை போட்டுட்டிங்க...கவிதை பதிவில் எப்போ? சீக்கிரம் அதையும் போடுங்கள் ;))

நிவிஷா..... said...

//Obviously...unga kavidhaigal :)/
athe :)

natpodu
nivisha

வேதா said...

@கீதா,
ஹிஹி உங்க கோபம் புரியுது :D என்ன இருந்தாலும் நீங்க தலைவி இல்லியா அதான் யோசிச்சு மெதுவா நீங்க சொன்ன பதிவை போட்டேன் :)

@ட்ரீம்ஸ்,
நான் இந்த வலைப்பக்கத்துல கேட்டேன் தம்பி :)

@ரசிகன்,
ஓ நீங்க வார்ப்புருவை சொன்னீங்களா நான் ஏதோ அரசியல் கட்சிய சொன்னீங்களோன்னு நினைச்சேன் :)

கவிதை பக்கத்துல எல்லாமே பிடிக்கும் :)

நன்றி :)

@கோபி,

/என்றும் நேசமுடன்...
என்றும் நட்புடன்..

எனக்கு இந்த ரெண்டும் பிடிக்கும் ;)/

எனக்கும் அது பிடித்த பதிவுகள் தான் கோபி :)

அவ்வ்வ்வ்வ்வ்வ் தனியா கவிதை பக்கத்துக்கு வேற போடணுமா? :) இது செல்லாது நான் ஒத்துக்க மாட்டேன் :)

நன்றி :)


@நிவிஷா,
எல்லாரும் இப்டியே சொல்றீங்களே அப்ப இந்த பக்கத்துல எழுதினது எதுவுமே படிக்கற மாதிரி இல்லியா :)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடுச்சாம்,
==>
கொடுமை "ஜிங்கு ஜிங்குன்னு" ஆடுச்சாம் .
இப்படிப் போட்டீங்கன்னா, நல்லா இருக்கும்.
[இது ADULTS ONLY மாதிரி LADIES ONLY ப்ளாகான்னு தெரியலியே. துணிஞ்சு களத்துல எறங்குவோம்]

ambi said...

இன்னும் பல நல்ல பதிவுகளை நீங்க விட்டுடீங்களோ?னு தோணுது. :p

மார்கழி மாதம் போட்ட திருப்பாவை விளக்கங்கள் நல்லா இருந்தது.

நான் இப்படி உண்மைய சொன்னாலும் ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதுடா அம்பி!னு பதில் கமண்ட் போடுவாங்க மக்கள். :))

SanJai said...

//டாடா இண்டிகாம் பத்தி சொல்லவே வேணாம் அந்த மகிமையை பத்தி தான் நம்ம தலைவி நிறைய எழுதிட்டாங்களே //

என் சோம்பேறித் தனத்துக்கு மட்டும் ஒரு நாள் ..ஒரே ஒரு நாள் லீவு கெடைச்சா போதும். இந்த டாடா இண்டிகாம் கொடுமைய பத்தி ஒரு வலைப்பூவே ஆரம்பிச்சி பொலம்பிடுவேன். :(

Delhi_Tamilan said...

I sincerely admire all your tamil posts... oru nalla tamil paditha thirpthi varugiradhu... koodavae poramaiyum varum idhu pol nammal eludha mudiyavillai endru...