Monday, February 11, 2008

சுத்தத்தமிழும் கல்யாண சாப்பாடும் ஒரு பயோடேட்டாவும் (செம மொக்கை:))

என்னுடைய முந்திய பதிவுல நண்பர் ஒருத்தர் கேள்வி கேட்டிருந்தார் இப்டி சுத்த தமிழ்ல (அதாவது அவருக்கு என் பதிவுகள் படித்தது வாழ்த்துகள் படம் பார்த்த மாதிரி இருந்ததாம்:)) எழுதறதால என்ன பயன்? நல்ல கேள்வி தான். இப்ப இருக்கற காலக்கட்டத்துல ஆங்கில கலப்பில்லாம பேசறது அப்டிங்கறது அரிதாகி வருது, அதுவும் நாம சாதாரணமா பேசினாலே ஆங்கிலம் கலந்து தான் வருது, அப்டி இருக்கும் போது குறைந்தபட்சம் இங்கு ஆங்கில கலப்பில்லாமல் எழுத முயற்சிப்பதில் எனக்கு ஒரு தன்னிறைவு அவ்வளவு தான் :)

நாம தினமும் வீட்டுல பேசும் போது எப்போவெல்லாம் முழுக்க ஆங்கிலத்தில் பேசறோம்னு யோசிக்கறதுண்டு, நமக்கே தெரியாம பழக்க தோஷத்துல விழற சில ஆங்கில வார்த்தைகள், அலுவலக விஷயமாக ஏதாவது அழைப்பு வந்தால் அப்பொழுது பேசும் போது(என் தம்பி இல்லாத நேரங்களில் அவன் அலுவல் சம்பந்தமா வர்ர அழைப்புகளை ஏற்கும் போது ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கும்) சில சமயங்களில் முக்கியமா ஏதாவது ரொம்ப தீவிரமான ஒரு விஷயத்தை பத்தி தொலைப்பேசியில் பேசும் போது நான் ஆங்கிலம் பயன்படுத்துவதுண்டு, அதற்கு காரணம் நான் இருக்கற சூழ்நிலை அப்டி. சென்னையில அடுக்குமாடி கட்டிடங்கள் என்றாலே பெரும்பாலும் அடுத்த வீட்டுக்காரன் இருக்கானா செத்தானா அப்டின்னு கூட கவலைப்படாத ஒரு கூட்டம் இருக்கற இடம்.

ஆனா நாங்க இருக்கற இடம் இருக்கே அதுக்கு பேரு தான் ப்ளாட்ஸ் ஆனா அது ஒரு ஒண்டுக்குடித்தனம் மாதிரி. எல்லார் வீட்டுக்கதவும் திறந்து தான் கிடக்கும் அவ்ளோ நம்பிக்கை :) பக்கத்து வீட்டுல, எதிர் வீட்டுல நடக்குற எல்லா விசயங்களும் நாம விரும்பலேன்னா கூட நம்ம வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்துக்கும். இந்த மாதிரி இடத்துல போன் பேசறது இருக்கு பாருங்க அது ரொம்ப கொடுமை. நான் ரொம்ப முக்கியமான விசயம் பேசும் போது தான் யாராவது ஒரு புண்ணியவான்/வதி வந்து கொஞ்சம் பேப்பர் கொடேன், காப்பி பொடி கொடேன், அவள் விகடன் இருக்கா? இப்டி கேட்டுக்கிட்டே நம்ம பக்கத்துல வந்து நிப்பாங்க.

அப்ப 'ஓகே ஓகே, நோ ப்ராப்ளம், ஐ வில் கால் யூ லேட்டர்' இப்டி சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கும்,(அப்ப ஆங்கிலத்துல பேசினா மட்டும் புரியாதான்னு கேட்கறவங்களுக்கு சொல்லிக்கறேன் அதெல்லாம் யாரு என்னன்னு பார்த்து தான பேசுவோம் ஹிஹி:)) அது பெரிய கடுப்பா இருக்கும், நாமளே ஒரு ப்ளோல பேசிக்கிட்டு இருக்கும் போது இப்டி வந்து இடம்,பொருள் புரிஞ்சுக்காம பேசறவங்கள பார்த்தா அப்டியே கோபமா வரும். திட்டவும் முடியாது(ஏன்னா நாளைக்கே ரெண்டு ஸ்பூன் காப்பி பொடிக்கோ, சாம்பார் பொடிக்கோ நாம் போய் நிக்க வேண்டியிருக்கும் :))

அந்த சமயத்துல எழுந்தும் போக முடியாது, சந்தேகம் வந்துரும் என்னடா இவ சரியா நாம வந்த நேரம் பார்த்து எழுந்து போறான்னு யோசிப்பாங்க. சில பேரு தான் நாம சொல்றத புரிஞ்சுக்கிட்டு நாசூக்கா ஒதுங்கிடுவாங்க. சரி இப்ப இதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கறீங்களா? ஒண்ணுமே இல்ல நான் ஏதோ சொல்ல வந்து வேற தலைப்புல எழுதிட்டேன் போலிருக்கு :) அதனால இதனால என்ன சொல்ல வரேனா நாம தினமும் ஆங்கில கலப்போட பேசறது அவசர அவசரமா சாப்பிடறா பாஸ்ட் புட் மாதிரி, இப்டி சில சமயங்களில் இங்கு முடிந்த வரை ஆங்கில கலப்பில்லாம எழுதறது அப்டிங்கறது கல்யாண சாப்பாடு மாதிரி :)

இப்டி தான் பயோடேட்டா என்பதின் தமிழ் வார்த்தை என்னவாக இருக்கும்னு யோசிக்கிட்டு இருந்தேன், அறிமுகம் சரியா இருக்குமான்னு தெரியல, சரி இப்ப எதுக்கு இந்த ஆராய்ச்சி என்றால் நம்ம யூனியன் மக்களின் பிரதாபங்களையெல்லாம் ஒரு குமுதம் பாணி பயோடேட்டா மாதிரி போடலாம்னு ஒரு எண்ணம், நினைச்சுட்டோம் சரி முடிச்சிடலாம்னு யாரை முதல்ல அறிமுகப்படுத்தலாம்னு யோசிக்கவே இல்ல நமக்கே தெரியுமே அது நம்ம தலைவி தான்னு :)

சரி இப்ப அறிமுகம்

பெயர் : சங்கத்தின் தனிப்பெரும் தலைவி(வலி), தானே உதித்த தானைத் தலை(வலி), மொ.ப.கீதா(இதுக்கெல்லாம் அர்த்தம் தரப்படாது :)), தமிழ் டீச்சர்

வயது : என்னது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நிரந்தர தொழில் : முழு காலமும் எவ்வித பிரச்னை வந்தாலும் விடாமல் மொக்கை போட்டு மன்னிக்கவும் பதிவுகள் போட்டு அனைவரையும் மகிழ்விப்பது :)

உபதொழில் : ப்ளாக்கிடுவது, பல தரப்பட்ட குழுமங்களில் எழுதுவது போன்ற சில முக்கிய வேலைகள் முடிந்த பின் எங்கேயாவது பயணம் புறப்படுவது(அதையும் வந்து விடாம பதிவுகளா போட்டு தள்ளுவாங்க என்னே உங்க தொண்டுள்ளம்:))

திடீர் தொழில் : டாடா இண்டிகாமுடன் போராடி போராடி அலுத்துப்போய் தானே ஒரு அகல்கற்றை சேவை அதாங்க பிராட்பேண்ட் ஆரம்பிக்கலாம்னு ஒரு எண்ணம் :)

நண்பர்கள் : அவங்க வயதை குறிப்பிடாத எவரும் :)

எதிரிகள் : வேற யாரு? டாடா இண்டிகாம் தான் :)

பிடித்த பொருள் : அம்பிக்கு பிடிக்காத எதுவும் :)

பிடிக்காத பொருள் : அம்பிக்கு பிடித்த எதுவும் :)

ஒரே பொழுதுபோக்கு : அம்பிக்கு ஆப்பு வைப்பது எப்படி? கண்ணாடி உடைந்து போகாத அளவுக்கு தமிழில் எப்படி எழுத்துப்பிழையில்லாமல் எழுதுவது என்று ட்யூஷன் எடுப்பது :):)

யப்பா ஒரே பதிவுல இவ்ளோ மொக்கையா என்று யோசிக்கறீங்களா? உண்மையில வேற ஒரு விஷயத்தை பத்தி தான் எழுதலாம்னு வந்தேன் ஆனா யோசிக்க அவகாசமே இல்ல. எப்பவும் டிசம்பர் மாசம் வந்தாலே எங்க வீட்டுல என் பாட்டி மூலமா ஏதாவது பிரச்னை வரும் இந்த தடவை ஒன்னும் ஆகலியேன்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டோம் அதுக்கு வந்தது தாமதமா ஒரு ரிவர்ஸ் ஆப்பு :) முதல்ல என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சு அப்புறம் எனக்கு, என் தம்பிக்கு,அப்பாவுக்கு, எங்க வீட்டு கணினி இப்டி வரிசையா வந்து பாட்டிக்கு வந்துடுச்சு, அதனால கொஞ்சம் மருத்துவமனை,வீடுன்னு பிஸி. அப்பப்ப வந்து இப்டி எட்டிப்பார்க்கறேன், இந்த பதிவு கூட முன்னால எழுதி வச்சது தான் :) சரி வரேன் இனிமே போய் எல்லார் பதிவுகளுக்கும் ஒரு வருகை பதிவு செய்யனும் அப்புறம் பார்க்கலாம் :)

29 comments:

மதுரையம்பதி said...

//வயது : என்னது//

கலக்கல்....ஆமாம், எல்லோருடைய வயதையும் கூட்டிக்க வரும் வயது மொ.ப.கீதாம்மா வயதுங்கறீங்களா?.... :-)

ambi said...

ஹிஹி, மொக்கைனாலும் எனக்கும்,கீதா பாட்டிக்கும் ஏகப்பட்ட உள்குத்துகளோடு நல்லாவே இருந்தது. :)

என்ன ஆச்சர்யம்? நானும் இதே மாதிரி ஒரு பயோடேட்டா போடலாமா?னு யோசிச்சுட்டு இருந்தேன். இப்ப அந்த எண்ணம் கைவிடப்பட்டது.

Me the pashtu..?

ரசிகன் said...

தினந்தோரும் நடக்கற விடயங்களையும்,இம்புட்டு ரசனையா சொல்ல முடியுமா?.. சூப்பரு...நல்லாயிருக்கு:)
அதுவும் உங்க அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க தொந்தரவு..ஹா..ஹா..
//சென்னையில அடுக்குமாடி கட்டிடங்கள் என்றாலே பெரும்பாலும் அடுத்த வீட்டுக்காரன் இருக்கானா செத்தானா அப்டின்னு கூட கவலைப்படாத ஒரு கூட்டம் இருக்கற இடம்.//
இதுக்கு தொந்தரவு பரவாயில்லைன்னு தான் தோனுது:)

Delhi_Tamilan said...

nan dhan firsto... um.. irukadhu.. in my entire history there isn't a single post where my entry seem to be the first one...

Delhi_Tamilan said...

Bio-Data Superb... More intresting to see ambi's comment.. so looking fwd to it.

ரசிகன் said...

இப்போ உங்க பாட்டிக்கு உடல்நிலை தேவலையா?...

கோபிநாத் said...

இந்த பதிவை பார்த்து வாயடைச்சி போயிட்டேன்...அதுவும் தலைவியின் அறிமுகம் சூப்பரே சூப்பர் ;)))

Dreamzz said...

அட்ரா அட்ரா கலக்கறீங்க!

Dreamzz said...

//(செம மொக்கை:))"//
ரிப்ப்பீட்டு!

தி. ரா. ச.(T.R.C.) said...

நான் ரொம்ப முக்கியமான விசயம் பேசும் போது தான் யாராவது ஒரு புண்ணியவான்/வதி வந்து கொஞ்சம் பேப்பர் கொடேன், காப்பி பொடி கொடேன், அவள் விகடன் இருக்கா? இப்டி கேட்டுக்கிட்டே நம்ம பக்கத்துல வந்து நிப்பாங்க.

முக்கியமான் விஷயமா அல்லது முக்கியமான ஆளா/?

தலைவிக்கு மிகவும் பிடித்த வார்த்தை:- கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தலைவிக்கு மிகவும் பிடித்தமானவர்:- வேதாளம்

கீதா சாம்பசிவம் said...

//கலக்கல்....ஆமாம், எல்லோருடைய வயதையும் கூட்டிக்க வரும் வயது மொ.ப.கீதாம்மா வயதுங்கறீங்களா?.... :-)//

க்ர்ர்ர்ர்ர்ர்.., ,மெளலி, உங்களுக்கு இன்னும் ஆப்பு வைக்கலை இல்லை? அதான்! அம்பி சொல்லிக் கொடுத்திருக்காரோ வேதாவுக்கும்? இல்லைனா இந்த மாதிரி எல்லாம் பதிவு போடமாட்டாங்களே?

அம்பி, இப்போ திருப்தியா? நல்லவங்களையும் கெடுத்துட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P :P :P :P

கீதா சாம்பசிவம் said...

என்ன ஒரு அநியாயம்? என்னைப் பத்தி எழுதிட்டு, எனக்குத் தகவலே கொடுக்காமல் நான் வேறே எங்கேயோ எதுக்கோ போனவ வந்து எட்டிப் பார்த்து என்ன விஷயம்னு பார்த்தால்? நறநறநறநறநறநறநற

Sumathi. said...

ஹாய் வேதா,

//நம்ம யூனியன் மக்களின் பிரதாபங்களையெல்லாம் ஒரு குமுதம் பாணி பயோடேட்டா மாதிரி போடலாம்னு ஒரு எண்ணம், யோசிக்கவே இல்ல நமக்கே தெரியுமே அது நம்ம தலைவி தான்னு :)//

ஓஓஓஓஒ.. இப்டில்லாம் கூட யோசிக்க ஆரம்பிச்சுட்டையா?

அது சரி ஆரம்பிச்சது தான் ஆரம்பிச்ச, அது என்ன தலைவிய மொதல்ல ஆப்படிச்சு ஒரு பழி தீர்த்தலா? சே.. பாவம் அவங்க என்னடான்னா உன்னை தன்னுடைய ஒரு முக்கிய தொண்டனா சொல்லிட்டுருக்காங்க. இந்த சமயத்துல போய் இப்படி ஒரு பழி வாங்கலா?ம்ம்ம்... சரி சரி... ஆரம்பமே சூப்பர் கலக்கல. இன்னும் லிஸ்டுல யார் தலையெல்லாம் உருளப் போகுதோ?ம்ம்ம்ம்....சர்வம் கிருஷ்ணார்பனம்..

Sumathi. said...

ஹாய் அம்பி,

//நானும் இதே மாதிரி ஒரு பயோடேட்டா போடலாமா?னு யோசிச்சுட்டு இருந்தேன். //

அது சரி இதுக்கெல்லாம் நேரம் இருக்கா? வீட்டுல வேற ஏகப்பட்ட பெண்டிங் னு கேள்வி பட்டேன்..

Sumathi. said...

ஹாய் வேதா,

//முக்கியமான விஷயமா அல்லது முக்கியமான ஆளா/?

ஆமாமாம், அதெல்லாம் சொல்வாங்களா? ரகசியமா தான் நடக்கும்.ஹி ஹி ஹி...

//தலைவிக்கு மிகவும் பிடித்த வார்த்தை:- கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தலைவிக்கு மிகவும் பிடித்தமானவர்:- வேதாளம்..//

வேதா, நீ விட்டுட்ட அதி முக்கியமான
ரெண்டு விஷயங்களை சார் எடுத்து குடுத்துட்டாரு.. சாருக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ....

(சார், எல்லாம் சரி உங்க தலை உருளும் போதும் இத மாதிரில்லாம்
சொல்லி குடுத்துடாதீங்க...)

நிவிஷா..... said...

nalla mokkai :)

நட்போடு
நிவிஷா

தி. ரா. ச.(T.R.C.) said...

@சுமதி இன்னிக்கு வேறுயாரும்கிடைக்கலையா என்தலைதான் கிடைச்சுதா உருட்டரத்துக்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

என்ன ஆச்சர்யம்? நானும் இதே மாதிரி ஒரு பயோடேட்டா போடலாமா?னு யோசிச்சுட்டு இருந்தேன். இப்ப அந்த எண்ணம் கைவிடப்பட்டது.
அம்பி எனக்குத்தெரிஞ்சி போன மே மாதத்துக்கு அப்பறம் உனக்கு பயடேட்டா மாத்திரம்தான் பயோடேட்டா உண்டான்னா?

Ravi said...

Veda, neenga solvadhu sari dhaan. English-e kalakkaama pesaradhu romba kadinam, so I really like/appreciate your effort to write posts without mixing English. Thodarattum ungal narpani!

dubukudisciple said...

veda innum rendu mukiyamana vishayatha vituteengale thalaiviya pathi...
sameebathiya sadhanai : Abi appavuku aapu vaithathu.
neendakala sadhanai: aanmeenga payanathil kailasam patri ezhuthityathu

Arunkumar said...

super mokkai... :P

மு.கார்த்திகேயன் said...

//அதுவும் நாம சாதாரணமா பேசினாலே ஆங்கிலம் கலந்து தான் வருது, அப்டி இருக்கும் போது குறைந்தபட்சம் இங்கு ஆங்கில கலப்பில்லாமல் எழுத முயற்சிப்பதில் எனக்கு ஒரு தன்னிறைவு அவ்வளவு தான்//

வாழ்த்துக்கள் (கவனிக்கவும், படப்பெயர் அல்ல)வேதா!

நானும் இப்படி எழுத பல முறை எழுத முயற்சித்ததுண்டு.. நீங்கள் எழுதுவதிற்கு அர்த்தம் தெரியாவிட்டால், உங்கள் நண்பர் தான், அவருக்கு தெரியாததை நினைத்து கவலைப்பட வேண்டும்.. நீங்கள் அல்ல..

தொடருங்கள் உங்கள் முயற்சியை!

ரசிகன் said...

//அப்பப்ப வந்து இப்டி எட்டிப்பார்க்கறேன்,//
ஏனுங்க.. அடுத்த பயோட்டேட்டா போடுவிங்கன்னு வெயிட் பண்ணா.. ஆளே காணாம போயிட்டிங்களே:)
மொக்கை இல்லாம மக்கள்ஸ் எல்லாம் தைரியமா உலாவ ஆரம்பிச்சிட்டாங்க..எப்டி விடலாம் அவங்களை அப்டி.. வாங்க சீக்கிரமா...ஹிஹி.:)))))))

C.N.Raj said...

Vetha...

//வயது : என்னது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நிரந்தர தொழில் : முழு காலமும் எவ்வித பிரச்னை வந்தாலும் விடாமல் மொக்கை போட்டு மன்னிக்கவும் பதிவுகள் போட்டு அனைவரையும் மகிழ்விப்பது :)//

ennathu.... vayasaa athu half century kitta poyiruchu... aana innum 27 thaannu solluven.

En Pani Mokkai pathivu poduvathe!!

C.N.Raj

SanJai said...

ஹிஹி.. நல்ல மொக்கை குருவே. :)

Compassion Unlimitted said...

Mokkayo mokkakkai..
pottu saatthitteenga
TC
CU

ரசிகன் said...

avvvv,..Enunga veda ,bathil poda evlo nalla?..:)

Delhi_Tamilan said...

innum PC sariyagalai pola... aiyo pavam :(

kannu's said...

eanga veda...
nan ninachen ungala saatha...
ana neenga blogspot maatha.....
tamil than ungalukku pitha....
vera velai eathum irukkathaa...
summa miratturingale thatha.....
padikarathukku thotha...
ithai pol kani tha iniyum tha....