Saturday, May 10, 2008

மீண்டும் சந்திப்போம்.. :)

விடைபெறும் நேரம் வந்துவிட்டது, தனிமையின் கரங்களில் இருந்து மெல்ல விடுபட்டு துணை சேரும் அந்த நொடிகளின் இடைவெளி அருகி கொண்டே வருகிறது.. தனிமையெனும் மொட்டவிழ்ந்து துணையோடு மணம் வீசும் அழகிய இல்லற தோட்டத்தில் அடியெடுத்து வைக்க போகிறேன் உங்கள் அனைவரின் ஆசியோடும்,வாழ்த்துக்களோடும். சுகந்தம் வீசும் வாழ்வில் நுழைய போகும் தருணத்தில் தவிர்க்கமுடியாததாய் பிரிவின் வருத்தமும் அடிமனதில் இழையோடி வரும் இந்நேரத்தில் நான் முன்பே எழுதிய இக்கவிதையை இங்கே பதிவிடுகிறேன். இக்கவிதை என் அம்மாவிற்காக..


இடியைத் தோற்கடிக்கும் வலியைக் கொடுத்து,
நிலத்தில் வீழ்ந்த என் பிஞ்சு விரல்களின் ஈரம் தொட்டு,
உன் வலிகளைத் துடைத்துக் கொண்டாய்.

அடி மேல் அடி வைத்து நடை நான் பழக,
தவறிய அடிகளுக்கு வலி நீ சுமந்தாய்.
பாடம் கேட்க பள்ளி நான் செல்ல,
இங்கு உழைத்து கரைந்தாய் நீ மெழுகாய்.
காலஓட்டத்தில் காதலுற்று நான் தவிக்க,
கசிந்துருகி மேன்வழி நீ காட்டினாய்.

தாயாகி நீ செய்தவைக்கு நான் என் செய்ய?
என்று நான் வினவ,
நீ புன்னகையுடன் பட்டியலிட்டாய்
எனக்கு செய்ய முடியாதவைகள் எவை என்று.

உன் அன்பில் நான் திகைக்க,
பதில் கிடைத்தது என் வினாவிற்கு.

அழியா ஆகாயம் போல்,
அழியா அன்பை வாரித் தெளித்த நீ சொன்னாய்,
"அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,
பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்


பி.கு: மீண்டும் சந்திப்போம் :)

19 comments:

Anonymous said...

//விடைபெறும் நேரம் வந்துவிட்டது, தனிமையின் கரங்களில் இருந்து மெல்ல விடுபட்டு துணை சேரும் அந்த நொடிகளின் இடைவெளி அருகி கொண்டே வருகிறது.. தனிமையெனும் மொட்டவிழ்ந்து துணையோடு மணம் வீசும் அழகிய இல்லற தோட்டத்தில் அடியெடுத்து வைக்க போகிறேன் உங்கள் அனைவரின் ஆசியோடும்,வாழ்த்துக்களோடும். //

வாழ்த்துக்கள்ங்க வேதா...:)

Anonymous said...

//சுகந்தம் வீசும் வாழ்வில் நுழைய போகும் தருணத்தில் தவிர்க்கமுடியாததாய் பிரிவின் வருத்தமும் அடிமனதில் இழையோடி வரும் இந்நேரத்தில் //
//அழியா ஆகாயம் போல்,
அழியா அன்பை வாரித் தெளித்த நீ சொன்னாய்,
"அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,
பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்//

சூப்பர்:)
//
பி.கு: மீண்டும் சந்திப்போம் :)//

காத்திருக்கிறோம்:).

கோபிநாத் said...

மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் ;))

\\\அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,
பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்\\\

ம்ம்ம்....அன்னையர் தின வாழ்த்துக்கள் ;)

\\பி.கு: மீண்டும் சந்திப்போம் :)\\

கண்டிப்பாக....ஜோடியாக வாங்க ;)

தி. ரா. ச.(T.R.C.) said...

தாயாகி நீ செய்தவைக்கு நான் என் செய்ய?

திருமணம் முடிந்து நீ தாயாகி உன்குழந்தை கேட்கும்போது பதில் கிடைக்கும். திருமண வாழ்த்துக்கள்

G3 said...

:))

Ammakku annaiyar dhina vaazhthukkal en saarbavum sollidunga :))

Ungalukkum advance vaazhthukal guruvae :))

ambi said...

வாங்க மேடம் வாங்க. இப்பவே திருமணத்துக்கு முன் பதிவு எழுத அனுமதி வாங்கி வெச்சுடுங்க. :))

எப்படியும், வீட்ல உங்க அதிகாரம் தான் தூள் பறக்க போகுது. அதனால ஒன்னும் பிரச்சினை இல்லை. :p

வெல்கம் டு தங்கமணி Vs ரங்கமணி கிளப். :))

Compassion Unlimitted said...

Vaazhuthhukkal..My best wishes for a happy wedded life..may God shower the best of the things on you both
We will wait till you come back to the blog ,together
TC
CU

Ravi said...

Romba naaLa vandhu post-e kanomumenu nenachen. Great news Vedha! Hearty Congratulations and all the very best. But please continue blogging... Hope you would continue to be in India :)

Btw, unga mana nilaiyai pradhipalicha andha 1st para... really super!!

indianangel said...

hearty congrats usha - wish u a happy and sweet married life.

கீதா சாம்பசிவம் said...

வாழ்த்துகள் வேதா, இப்போத் தான் இந்த அருமையான கவிதையைப் பார்த்தேன், மறுபடி நீங்க திரும்பி வலை உலகுக்கு வரும்வரையிலும் என்னோட பின்னூட்டமும் காத்திருக்கும், நானும்.

Ramya Ramani said...

திருமண வாழ்த்துக்கள்

Usha said...

adi paavi veda, enkitta sollamaye kalyanam pannintaye :( How can you possibly forget to invite me?

Usha said...

BTW, congrats and all the best for a Happy Married life :)

Delhi_Tamilan said...

good news, wish u a happy and sweet married life; come back soon

Mani said...

Best wishes

neighbour said...

Veda,

Congrats and All the best to ur married life... May be Belated wishes.

Anonymous said...

hearty wishes!
-deekshanya

Balaji S Rajan said...

That was a nice way of expressing your thoughts about your mother. You have used wonderful words and it is so expressive! Great talent. Normally girls forget to use all their creativity and talents after their marriage. Hope you will not be like that. I wish you continue like this.

Venky said...

your brother had posted thsi in cog internal blog. it is really nice! congratulation for your wedding!